04-02-2006, 05:52 PM
<b>எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் தம்பியுடையான்</b>
அண்மையில் தமிழ்நாடு சென்றிருந்த சமயம், மு.க ஸ்ராலினின் புதிய வீட்டை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மலைத்துப் போய் விட்டேன். அது வீடல்ல, மாளிகை!!! அது குறித்து சிலரிடம் விசாரித்த போது தமிழ்நாட்டில் இன்றிருக்கும் செல்வந்தர்களில் முக்கியமானவர்கள் கருணாநிதி குடும்பம் என்றார்கள்! ஒரு சில படங்களுக்கு கதை வசனங்கள் எழுதியும், சில காலம் முதலமைச்சராக இருந்தவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது??? கருணாநிதி மட்டுமல்ல அவர் சார்ந்த குடும்பங்கலான எல்லாவற்றிற்கும் எங்கிருந்து வந்தது??? 70 இறுதிப் பகுதி என்று நினைக்கிறேன், குமுதம் பத்திரிகை, அன்றைய தேர்தல் காலத்தை ஒட்டிய சிறப்பு இதழ் வெளிவந்திருந்தது, அதில் "ஊழலின் மறுபெயர் கருணாநிதி" என ஆசிரியர் தலைப்பு இட்டிருந்து. அதுமட்டுமல்ல அத்தேர்தலில் பெருந்தலைவன் எம்.ஜி.ஆர் பெருவெற்றியும் பெற்றிருந்தார்.
கருணாநிதி, முரசொலிமாறன், மு.க.ஸ்ராலின், மு.க அழகிரி, தயாநிதிமாறன், கனிமொழி, .... இவைகள் என்ன தமிழ்நாட்டு மக்களுக்கான அரசியல் வாதிகளா? இல்லை, குடும்பத்திற்கான அரசியல்வாதிகளா??? கருணாநிதியை விட மூத்த அரசியல்வாதிகளான அன்பழகன் போன்றோர் இருக்கும்போது ஸ்ராலினுக்கு முடிசூடலாம்! முன் அரசியல் அனுபவமற்ற முரசொலிமாரனுக்கு, இந்தியாவின் ஊடகங்களையே கட்டுப்படுத்தும் அமைச்சர் பதவி!! கருணாநிதியின் அடுத்தடுத்த அரசியல்வாரிசுகளும் அரசியலுக்கு மன்னிக்கவும் தி.மு.கவிற்கு பிரவேசிக்க ரெடியாம்!! உதென்ன குடும்ப பிஸ்னஸா?? அல்லது குடும்பத்திற்கான அரசியலா??? மதுரையில் தி.மு.க பிரமுகர், கருணாநிதியின் வாரிசு மு.க அழகிரியினால் படுகொலை! ஆனால் ஜெயலலிதாவின் வழக்குகள் பெங்களூரில் விசாரிக்கப்படுமாம்!! கருணாநிதியின் குடும்ப வாரிசுகளை இப்ப ஒன்றும் செய்ய முடியாதாம்!! தமிழ்நாட்டு கேபிள் ரி.வி விநியோகஸ்தோகர்களை அரசுடைமையாக்கியதற்கு, கருணாநிதியின் குடும்பம் கவர்னர் மாளிகையை நோக்கி ஊர்வலமாம்!! உதென்ன தமிழ்நாட்டை முக்கியமாக பாதித்த காவிரிப் பிரட்சனையா??? அல்லது இன்று தமிழ்நாட்டில் இருக்கும் ஊடகங்களில் பெரும்பாலானவைகளை(சன் ரிவி, தினகரன், சூரியன் எப்.எம், குங்குமம், ...இன்னும் பினாமிகளின் பெயர்களில் பலபல) குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கருணாநிதியின் குடும்பத்திற்கான பிரட்சனையா????
பா.ஜ.கவுடன் கூட்டுச் சேர்ந்து கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது ஆயிரம் கேள்விகளை காங்கரஸை நோக்கி விட்டார். இவைகளை இன்று கேட்க முடியுமா??? அல்லது கேள்விகளுக்கான பதில்களை அமைச்சர் வடிவத்தில் மத்தியில் கருணாநிதியின் குடும்பத்தின் வாரிசொன்று பெற்று விட்டாரா????
தி.மு.கவின் தேர்தல் அறிக்கை: இலவச கலர் ரி.வி. இரண்டு ரூபாயுக்கு அரிசி!! ஒன்றை கருணாநிதி கூற மறந்து விட்டாரா?? சந்திரனிலிருந்து அரிசி கொண்டு வருவேன் என்பதை!!!! என்ன நடக்கிறது!! தமிழ்நாட்டு மக்களை கருணாநிதியின் குடும்பம் இளித்த வாயர்கள் என்று நினைத்து விட்டார்களா???? ஒரு வேளை இலவச ரி.வி கொடுப்பதும் குடும்ப பிஸ்னஸிற்காகத்தானிருக்கும்!!
இன்று தமிழ்நாட்டில் மொத்தத்தில் மக்களுக்கான கூட்டணியொன்று! குடும்பத்திற்கான கூட்டணியொன்று!!