Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வவுனியாவில் ஆளில்லா வேவு விமானம் வீழ்ந்தது!
#11
<b>நவீன தொழில்நுட்ப மயப்படுத்தப்பட்ட அரசின் புலனாய்வுச் செயற்பாடுகள்.</b>

<i>4 ஆவது ஈழப்போர் தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டேயிருக்கும்!</i>

தமிழீழ விடுதலைப் புலிகளின் உளவுத்துறைஇ தென் இலங்கை ஊடுருவல்களை முறியடிக்கவும் புலிகளின் பிரதேசத்துக்கும் ஊடுருவி புலனாய்வுத் தகவல்களை சேகரிக்கவும் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரச புலனாய்வு இயந்திரம் கடலிலும்இ தரையிலும்இ ஆகாயத்திலும் தொழில்நுட்ப மயப்பட்ட கருவிகளை பயன்படுத்தி புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இது புலிகளின் உளவுத்துறைக்கு பெரும் சவாலாக அமைந்திருக்கின்றது. இதனால் புலிகளின் முறியடிப்புப் பணி பெரும் இடையூறுகளுக்கு உள்ளாகியுள்ளது.

புலனாய்வை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் ஒன்று தொழில்நுட்ப புலனாய்வு மற்றது மனிதவளப் புலனாய்வு என்பனவாகும்.

புலனாய்வுப் போர் இன்று அறிவியல் தொழில்நுட்ப மயப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. தரையிலும், கடலிலும், ஆகாயத்திலும், வேவுபார்ப்பதற்கும் தகவல்களைச் சேகரிப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இன்று மனிதன் தேவையில்லை. அவற்றை எல்லாம் இலத்திரனியல் அல்லது டிஜிட்டல் கருவிகள் செய்கின்றன. மனிதன் திரையின் முன் குந்தியிருக்கிறான். இலத்திரனியல் கருவிகள் தான் களச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன.

கிழக்கு, மேற்கு நாடுகள் இவ்வாறாக தகவல் தொழில்நுட்பத்துறையில் விருத்தியடைந்ததைப் போல அல்லது இலங்கை அரச புலனாய்வுத்துறை விருத்தியடைந்ததைப் போல தமிழீழ உளவுத்துறை விருத்தியடையவில்லை. ஏணி வைத்தாலும் எட்டாத தூரத்தில்தான் உள்ளது. இதற்குப் பெரும் பிரச்சினை நிதிப் பிரச்சினையாகவேயுள்ளது. மனிதவள பற்றாக்குறையுமாகும்.

தமிழ் மக்களின் உளவுச் சேவை சிங்கள மக்களின் உளவுச் சேவையுடன் ஒப்பிடும்போது ஆளணி மனித வலுச் சமநிலையிலும் பாரிய இடைவெளி காணப்படுகிறது. ஆனால், புலனாய்வு வலுச்சம நிலையில் புலிகளின் உளவுத்துறை வீரியம் பெற்றுள்ளது.

...
.....

4 ஆம் கட்ட ஈழப்போர் என்பதுதகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டே அமையும். எது எப்படி இருப்பினும் 3 ஆம் கட்ட ஈழப்போரின் புலிகளிடம் இல்லாத தொழில்நுட்ப வசதிகள் பலவற்றை 4 ஆம் கட்ட ஈழப்போரில் புலிகள் பயன்படுத்துவார்கள். இனிவரும் போர் நவீன தொழில்நுட்ப மயப்படுத்தப்பட்ட சமர்க்களமாக அமையும்.

புலிகளின் புலனாய்வு தொழில்நுட்ப விருத்திக்கும் போதிய பொருளாதார மனித வளம் இல்லை. இவ் குறையினை நிவர்த்தி செய்ய வேண்டுமாயின் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கரம் கொடுக்க வேண்டும்.


http://www.thinakural.com/New%20web%20site...2/Article-9.htm
Reply


Messages In This Thread
[No subject] - by karu - 03-28-2006, 09:32 AM
[No subject] - by தூயவன் - 03-28-2006, 12:01 PM
[No subject] - by tamilini - 03-28-2006, 12:04 PM
[No subject] - by தூயவன் - 03-28-2006, 12:09 PM
[No subject] - by tamilini - 03-28-2006, 12:18 PM
[No subject] - by தூயவன் - 03-28-2006, 12:27 PM
[No subject] - by narathar - 03-28-2006, 12:40 PM
[No subject] - by SUNDHAL - 03-28-2006, 01:14 PM
[No subject] - by kurukaalapoovan - 03-28-2006, 05:30 PM
[No subject] - by kurukaalapoovan - 04-02-2006, 10:31 AM
[No subject] - by narathar - 04-02-2006, 12:56 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)