Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வார விடுமுறை
#1
வார விடுமுறை நாட்களை சிலர் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. இந்த நாட்களில் கூட வேலை வேலை என்று மெனக்கெடுகிறார்கள். தங்களது உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள்.

இப்படி விடுமுறை நாட்களில் குடும்பத்திலிருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லதல்ல.

குடும்ப நேரம்: எப்போதும் குடும்பத்தினருடன் வெளியே தான் செல்ல வேண்டும் என்பதில்லை. வாழ்க்கைத் துணைக்காகவும் குழந்தைகளுக்காகவும் வீட்டில் நேரத்தை ஒதுக்குங்கள். அவர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள். சிரியுங்கள். அவர்களின் குறைகளைக் கேளுங்கள். அப்போதுதான் நீங்கள் அவர்களுடன் நெருக்கமாக இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

வீட்டு அலங்காரம்: ஒரு வாரத்தில் நீங்கள் வைத்த பொருள் வைத்த இடத்தில் இருக்காது. குறிப்பாக அலமாரி செல்பில் வைத்த பேப்பர்கள், புத்தகங்கள், வார்ட்ரோப்பில் அடுக்கிய துணிகள், குழந்தைகளின் அறை பொம்மைகள், படுக்கையறை தலையணை, போர்வைகள் போன்றவை எப்படியும் இடம் மாறியிருக்கும். அல்லது ஒரு ஒழுங்கு முறையில் இருக்காது. இந்த வேலைகளுக்காக நான்கு மணி நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள்.

நண்பர்களுடன் சந்திப்பு: வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதும் சில நேரம் போரடிக்கும். அதனால் நண்பர்களின் குடும்பத்தினரோடு பொதுவாக எங்கா வது ஓரிடத்தில் சந்திக்கும் பழக்கத்தை ஏற்படுத் திக் கொள்ளுங்கள். அப்போது அவர்கள் வீட்டில் தயாரித்துக் கொண்டு வந்திருக்கும் உணவுகளையும் உங்களுடன் சேர்த்துக் கொண்டு பரிமாறுங்கள். அவர்களுடன் சேர்ந்து மனம் விட்டு பேசுங்கள்.

ஷாப்பிங்: சிலர் நினைத்தவுடன் ஷாப்பிங் கிளம்பி விடுவார்கள். இப்படி எந்தத் திட்டமும் இன்றி ஷாப்பிங் செல்லக் கூடாது. குடும்பத்தினருக்கு என்ன தேவை, உங்களுக்கு தேவையான பொருட் கள் எந்தெந்த கடைகளில் கிடைக்கும், அவை தரமான கடைகளா? என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப திட்டங்களை வகுத்துக் கொள்ளுங்கள். கடைகள் அதிகம் உள்ள பகுதிக்குப் போனால் நான் கைந்து கடைகளாவது ஏறி இறங்கி உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்யுங்கள்.

பிக்னிக்: நகரின் அன்றாட பரபரப்பு, நெருக்கடியில் இருந்து வாரத்திற்கு ஒன்றிரண்டு நாட்கள் ஒதுங்கியிருப்பது நல்ல விஷயம். இதற்காக பிக்னிக் செல்லலாம். அப்படிச் செல்லும்போது குடும்பத்தினர் அனைவரும் அதில் இருக்க வேண்டும். இன்று புறநகர் பகுதிகளில் பொழுது போக்கிற்கு உதவும் தீம் பார்க்குகள் ஏராளமான அளவில் இருக்கின்றன. அங்கு விளையாட்டுகள், சவாரிகளில் ஈடுபடலாம். இதனால் மன மகிழ்ச்சி ஏற்படுகிறது. குழந்தைகளும் ஆர்வமாக விளையாடுவார்கள்.

வெளிநாட்டு உணவுகள்: தினமும் ஒரே மாதிரியான உணவைச் சாப்பிட்டு அலுத்துப் போனவர்கள் வார விடுமுறை நாட்களில் வித்தியாசமான வெளிமாநில மற்றும் அயல் நாட்டு உணவுகளை வீட்டில் தயாரித்துச் சாப்பிடலாம். புதுமையான உணவுகளை வீட்டிலேயே தயாரித்தால் அதை குழந்தைகள் மட்டுமின்றி அனைவருமே விரும்பிச் சாப் பிடுவார்கள். இந்த புதுமை உணவுத் தயாரிப்பில் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து ஈடுபாட்டுடன் செய்தால் நல்லது.

சினிமா: வாரத்திற்கு ஒரு முறையாவது தியேட்டருக்குச் சென்று சினிமா பார்ப்பது நல்லது. குழந்தைகளுடன் செல்லும்போது அவர்களின் ரசனைக்கேற்ப படங்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இப்படி ஒவ்வொரு வாரத்தையும் திட்டமிட்டு செலவிட்டால் உங்களுக்கு வேலை நாட்களில் ஏற்படும் பரபரப்பு வெகுவாகக் குறைந்து விடும்.
Thanks:thanthi.................
***
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
வார விடுமுறை - by SUNDHAL - 04-01-2006, 07:22 PM
[No subject] - by Selvamuthu - 04-01-2006, 10:56 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)