Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெற்றோர்களுக்கும் இளம் பிள்ளைகளுக்குமிடையே இடைவெளி.....
#3
எங்கள் குழந்தை யாழிற்கு வயது எட்டு என கேட்கும் போது ஆச்சரியமாகதான் இருக்கிறது அதை கட்டி தழுவிகொண்டிருந்ததில் காலம் போனது தெரியவில்லை.

யாழை பலர் பலமாதிரி உருவகித்து கவிதைகள் எழுதினார்கள் ஆனால் எனக்கு அது ஒரு குழந்தை போல காரணம் அதனிடம் அன்புசெலுத்தியிருக்கிறோம் அரவணைத்திருக்கிறோம் அதட்டியிருக்கிறோம் ஏன் சிலரால் அது அடிகூட வாங்கியிருக்கிறது ஆனாலும் அது அடித்த தாயிடமே அழுது கொண்டு ஓடும் குழந்தையை போல எழுந்து எழுந்து எம்மை நோக்கியே ஒடிவருகின்றது அதை தாலாட்டி சீராட்டி வளர்க்க வேண்டியது ஒவ்வொரு யாழ்உறுப்பினரின்கடைமையாகும்

ஆகவே அதனை பலசிரமங்களிற்கு மத்தியிலும் தொடர்ந்து இயக்கும் மோகன் மற்றும் அதன் மட்டிறுத்துனர்களிற்கும் நன்றி கூறிக்கொண்டு அதன் எட்டாவது அகவையை முன்னிட்டு இந்த பட்டி மன்றத்தை ஒழுங்கு செய்த ரசிகாவிற்கும் மற்றும் தலைமை தாங்கும் இளைஞனிற்கும் இங்கு வாத கருத்துகளை வைக்கும் எனது மற்றும் மற்றைய அணியினரிற்கும் யாழ் வாசகர்களிற்கும் எனது அன்பார்ந்த வணக்கங்களுடன் பட்டி மன்றத்தினுள் நுளைகிறேன்.


இங்கு பட்டி மன்றத்தின் தலைப்பு தற்சமயம் பெற்றோர்களிற்கும் பிள்ளைகளிற்கும் இடையில் ஓர் இடைவெளி காலப்போக்கில் விரிவடைந்து வருகிறது காரணம் பிள்ளைகளா? பெற்றோரா? சூழலா?,

இது புலத்திலா அல்லது நிலத்திலா (தாயகம்)என்று இல்லாமல் பொதுவான தலைப்பாக இருப்பதால் பொதுவாகவே வாதங்களை வைத்தாலும் இந்த யாழ்களத்தை புலத்திலேயே அதிகம் பேர் படிப்பதால் புலத்து பிள்ளைகளை பற்றியே அதிகம் தொட்டு செல்லலாம் என எண்ணுகிறேன்.

இந்த தலைப்பை பற்றி இந்த பட்டிமன்றத்தை ஒழுங்கு செய்த ரசிகா என்கிற இளையவருக்கும் அதற்கு தலைமைதாங்கி கொண்டு இளைஞன் என்று பெயரையும் வைத்துகொண்டுள்ள இளையவருக்கும் மற்றும் எனக்கு முன்னால் உள்ள இரண்டு அணியினருக்கும் குழப்பம்.

இதனை பட்டி மன்றம் வைத்துதான் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லையென்று அந்த பிள்ளைகளிற்கே அதாவது இளையவர்களிற்கே தெரியும் தங்களால்தான் இந்த இடைவெளி வருகின்றது என்று ஆனாலும் அதனை சரியாக உறுதி செய்ய இந்த பட்டிமன்ற தலைப்பை தேர்வு செய்திருக்கலாம்.

காரணம் பாருங்கள் பிள்ளை ஏதோ படித்து வருங்காலத்தில் ஒரு பெரிய தொழில் நுட்பவியலாளராக ஒரு மேதையாக வரும் என்கிற ஒரு நப்பாசையுடன் தங்கள் சிரமங்களையெல்லாம் ஒருபக்கம் தள்ளிவிட்டு அந்த பிள்ளை விரும்பிய கலைகல்லூரியில் விரும்பியபடி படிக்க எல்லா வசதிகளையும் செய்து விட்டு அதன் பரீட்சையின் நல்ல பொறு பேறுகளின் செய்தியை மட்டுமே செய்தியாய் தங்கள் காதுகளில் கேட்க காத்திருக்கும் பெற்றொர். பிள்ளை என்னடா எண்டால் இங்கு பல்கலைகழகத்திலிருந்து பட்டிமன்றம் நடத்திகொண்டிருக்கிறார் இடைவெளி யாரால் பிள்ளையாலா பெற்றோரா சூழலா எண்டு.

அடுத்தது பிள்ளை கணணியில் ஏதொ பாடம் சம்பந்தமா தான் பாவம் கணணியை போட்டு உருட்டிகொண்டிருக்கு அதற்கு எந்த தொந்தரவும் குடுக்க கூடாது என்று பெற்றோர் அவருக்கு தனியறை குடுத்து விடிய விடிய எரியிற மின்விளக்கு கணணிக்கு எண்டு கரண் பில்லும் கட்டி கொண்டிருக்க அந்த பிள்ளை பட்டிமன்றத்திற்கு தலைமை தாங்கி கொண்டிருக்கிறார் தலைமை தாங்கும் இளைஞனைதான் சொல்லுறன்.

என்னடா பட்டி மன்றம் தொடக்கின பாவத்திற்கு தலைமை தாங்கினதிற்கும் தங்ககடை தலையையே சாத்திரி போட்டு உருட்டுறார் எண்டு யோசிக்கிறிங்களா? அதை சொல்ல வாறன் வாழ்க்கை என்பதே ஒருநம்பிக்கையின் அடிப்படையில் தானே அமைகிறது ஒரு பிள்ளை குழந்தையாக இருக்கும் போது அது கேட்காமலேயே அதன் தேவைகளை அதன் விருப்பங்களைபெற்றோர் பூர்த்தி செய்கின்றனர் அது கொஞ்சம் வளர்ந்ததும் அது விரும்பி கேட்கின்ற பொருட்கள் எல்லாமே முடிந்தவரை வாங்கி கொடுக்கின்றனர். அது கேட்கும் அம்மா எனக்கு அந்த உணவு வேண்டும் அப்பா எனக்கு அந்த சட்டை வேணும் என்று கேட்கும்.

அதே போல பாடசாலையில் இருந்து வந்ததும் அம்மா எனது நண்பி இந்த கலர் சட்டை போட்டு வந்தாள் . அப்பா எனது நண்பன் புதிதாய் ஒரு பேனா கொண்டு வந்தான் அது போல எனக்கு வேணும் இப்படி சின்னவயதில் சின்ன சின்ன தேவைகள் எல்லாத்தையும் பெற்றோர்களிடம் கேட்டும் சின்ன சின்ன விடயங்களை கூட அவர்களிடம் பகிர்ந்து கொண்ட குழந்தை பெரியவர் ஆனதும் பெரிய பெரிய விடயங்களை மறைக்க தொடங்குகின்றனர்.

ஆனால் பெற்றோரோ வழைமை போல தங்கள் பிள்ளை சிசன்ன விடயங்களைகூட தங்களிடம் மறைத்தது இல்லையே எனவே எதையுமே மறைக்க மாட்டார்கள் என்கிற நம்பிக்கையிலும் அவர்கள் என்ன செய்தாலும் என்ன தேவைப்பட்டாலும் தங்களிடம் சொல்லும் என்கிற நம்பிக்கையிலும் கண்மூடித்தனமாய் இருந்து விட ஒருநாள் பிள்ளைகள் தங்களிற்கு தெரியாமல் சில காரியங்களை செய்கின்றனர் என தெரியவந்ததும் அவர்கள் நம்பிக்கை தகர்ந்து போகிறபோது

அது அவர்கள் ஆத்திரமாக மாறுகிறது அவர்கள் கண்டிக்க தொடங்க பிள்ளைகளோ பெற்றேருக்கு பணிந்து பக்குவமாய் விடயங்களை எடுத்து கூறாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதிர்த்து வாதம் செய்ய அது அவர்களின் உறவில் கீறலாகி கடைசியில் கிட்டாத உறவாகவே போய்விடுகிறது.

இப்படி சில இளையவர் என்றால் இன்னொரு விதமாய் சிலர் அவர்கள் இதோ எதிர் பக்கம் இடைவெளிக்கு காரணம் பெற்றார்தான் என்று கூறிக்கொண்டுசினிமாபின்னாலும் அதன் கதா நாயக நாயகிகளை பார்த்து அவர்களை போலவே முடியலங்காரம் உடையலங்காரம் என்று ஒழுங்காய் உள்ள தலையை கலர் அடித்துமொட்டையடித்து காசு குடுத்து வாங்கிய காற்சட்டையை கிழித்து போட்டு கொண்டு தங்களையும் ஒரு கதா நாயகர்களாக கற்பனை பண்ணி கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அந்த அணித்தலைவரின் பெயரை பாருங்கள் (தலை ) பக்கத்திலை நிப்பவருக்கு பெயர் புயல் ஈஸ்வரும் சுஜுந்தனும் பேசாமல் தங்களது பெயரையும் மாற்றி எதாவது கில்லி மாஜா என்று வைத்தால் கூட்டணி நன்றாக இருக்கும் .சிறுவயது முதல் தலைசீவ அம்மாதான் வேண்டுமென்று அடம் பிடித்த குழந்தைக்கு இப்போ அம்மா தலையில் தொட்டாலே அலர்ச்சி. காற்சட்டை போட்டுவிட அப்பா தேவைப்பட்ட பிள்ளைக்கு இப்போ அப்பா காற்சட்டையை ஒழுங்கா போடடா எண்டால் பழசுக்கு நாகரீகம் தெரியாது எண்று பத்திகொண்டு கோபம் வருகிறது

அவர்களிற்கு அதனால் இனி பெற்றோருடன் இருக்கமுடியாது எண்று தனியாக போய் விடுகின்றனர்.இவர்கள் இப்படி பிரிந்து போய்விட இவர்களிற்கு கலர் காட்டின கதா நாயகனும் நாயகியும் கையை காலை ஆட்டிவிட்டு காசை வாங்கி கொண்டு தங்கள் குடும்பத்தோடு போய் விடுகிறார்கள்.

அடுத்ததாய் இங்குள்ள மூன்றாவது அணியினரை போலவே தாங்கள் செய்யிறதெல்லாத்தையும் செய்து விட்டு இந்த வீடு சரியில்லை சுற்றம் சரியில்லை இந்த ஊர் சரியில்லை இந்த நாடு சரியில்லை ஏன் இந்த உலகமே சரியில்லை அதனாலை நாங்களும் சரியில்லை யெண்று சுலபமாய் சூழல் மீதும் சமுதாயத்தின் மீதும் குற்றம் சுமத்திவிட்டு தங்கள் பொறுப்புகள் கடைமைகள் என்பனவற்றைசரியாய் செய்யாமல் தப்பி விடுகின்றனர்.

கேட்டால் ஏதேதோ புரியாதவற்றை தெழில் நுட்ப யுகம் நவ நாகரீகம் இயந்திர வாழ்க்கை தன்னிறைவு சொந்த காலில் நிக்கிறோம் என்று கதை விடுகிறனர்.இவையெல்லாத்தையும் பெற்றோருடன் இருந்து செயல்படுத்த முடியாதா??இவர்களை போன்றவர்கள் தான் சரியான ஆபத்தான பேர்வளிகள் இவர்களாளல் சுயமாக எதையுமே செய்ய முடியாது எல்லாமே மற்றவனை பர்த்து செய்துதான் பழக்கம் அதனால் தங்கள் குடும்பத்தை கெடுப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களையும் இவர்கள் தவறான பாதைக்கு இட்டு செல்லும் அபாயம் உண்டு எனவே குடும்பத்தில் இடைவெளிஉருவாக பிள்ளைகளே காரணம் என்று கூறி விடை பெறுவதோடு இப்பொழுதே நடுவர் எங்களணிக்குதான் வெற்றி என்று முடிவு செய்திருப்பார் ஆனாலும் மற்றையவரது வாதங்களையும் கேட்டு ஆழமாக சிந்தித்து தீர்ப்பை வழங்கு மாறு கேட்டு கொண்டு
விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply


Messages In This Thread
[No subject] - by இளைஞன் - 03-31-2006, 12:29 AM
[No subject] - by sathiri - 04-01-2006, 04:32 PM
[No subject] - by இளைஞன் - 04-02-2006, 09:17 PM
[No subject] - by Thala - 04-02-2006, 11:05 PM
[No subject] - by இளைஞன் - 04-04-2006, 10:07 PM
[No subject] - by Nitharsan - 04-07-2006, 05:54 AM
[No subject] - by இளைஞன் - 04-15-2006, 07:11 PM
[No subject] - by RaMa - 04-17-2006, 11:29 AM
[No subject] - by இளைஞன் - 04-21-2006, 07:00 PM
[No subject] - by Sujeenthan - 04-24-2006, 08:23 PM
[No subject] - by இளைஞன் - 04-29-2006, 07:05 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)