04-01-2006, 12:02 PM
வாகரை உள்ளிட்ட 3 இடங்களில் புலிகள் மீது சிறிலங்கா இராணுவம் தாக்குதல்: ஒரு போராளி படுகாயம்
ஜசனிக்கிழமைஇ 1 ஏப்ரல் 2006இ 16:20 ஈழம்ஸ ஜமட்டக்களப்பு நிருபர்ஸ
மட்டக்களப்பு வாகரைப் பிரசேம்இ சம்பூர் நோர்வேத் தீவு உள்ளிட்ட மூன்று இடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் இன்று சனிக்கிழமை தாக்குதல் நடத்தினர்.
வாகரையில் புலிகள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் இன்று சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் போராளி ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
வாகரை பனிச்சங்கேணிக்கும் மருதங்கேணிக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காப் படையினரும் துணை இராணுவத்தினரும் அப்பகுதிக்கு தாக்குதல் நடத்தும் நோக்கில் வந்து தங்கியிருந்தனர்.
அப்போது அங்கு சென்ற போராளிகள் மீது படையினரும் துணை இராணுவக் குழுவினரும் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றனர். இத்தாக்குதலில் போராளி ஒருவர் காயம் அடைந்தார்.
இதனிடையே வாகரை தோணிதாழ்ந்த கற்பகுதியிலும் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன. கால்நடைகள் சிலவும் கொல்லப்பட்டுவிட்டன.
அப்பகுதிக்கு வந்த சிறிலங்காப் படையினரும் துணை இராணுவக் குழுவினரும் ஆர்.பி.ஜி தாக்குதலை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றனர்.
சிறிலங்காப் படையினரின் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இத்தகைய அத்துமீறிய தாக்குதல்ச் சம்பவங்கள் கடும் கண்டனத்துக்குரியன என்று போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவிடம் திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் முறையிட்டுள்ளார்.
சம்பூர் நோர்வேத் தீவுப் பகுதியிலும் கடற் பகுதியில் மீனவர்களை நோக்கி சிறிலங்காக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்தும் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவிடம் எழிலன் முறைப்பாடு செய்துள்ளார்.