04-01-2006, 02:51 AM
வர்ணன் Wrote:அது எல்லாம் இருக்கட்டும் யூட் அண்ணா..!
நாங்க -அதாவது -
கூலி வேலை - செய்யுறவங்க அமெரிக்க அரசை தேர்வு செய்யும் உங்க கபசிற்றிக்கு முன்னால-
உங்கட - கருத்தை வாசிக்க -எதிர்த்து பேச- எங்களுக்கு - ஏதும் தகுதி இருக்கா? 8)
தம்பி வர்ணன்
அமெரிக்கா ஒரு மக்களாட்சி நாடு. மக்களாட்சியில் குடியுரிமையுள்ள மக்கள் எல்லாரும் வாக்கு போட்டு அரசை தெரிவு செய்கிறார்கள். அமெரிக்கர்களில் பெரும்பான்மையானவர்கள் சம்பளத்துக்கு (கூலிக்கு) வேலை செய்பவர்கள்தான். நீங்கள் மட்டுமல்ல, நானும் கூலிவேலை தான் செய்கிறேன். ஆக கூலி வேலை செய்பவர்கள் பெரும்பான்மையினர் அமெரிக்க அரசை தெரிவு செய்கிறார்கள்.
அது சரி தமிழீழ தேசம் வேண்டும் என்று பற்றோடு இருக்கிறீர்கள். தமிழ்ப்பற்று நிறைய இருக்க வேண்டாமா?
நீங்கள் எழுதிய <b>"கபசிற்றி"</b> என்ற ஆங்கில வார்த்தைக்கு <b>கொள்ளளவு</b> என்ற அருமையான தமிழ்வார்த்தை இருக்கிறதே? தெரியாதா?
''
'' [.423]
'' [.423]

