04-01-2006, 02:07 AM
Birundan Wrote:விடுதலை புலிகள் மீதிருக்கும் கோபம் யூட்டின் கண்களை மறைகக்கிறது, நாம் வாழும் காலத்தில் நடந்ததையே இப்படிமாற்றுபவர்கள், வரலாறுகள்,இதிகாசங்கள்,புராணங்களை பற்றிகதைத்தால் தம் தேவைகளுக்காக எப்படி மாற்றி மாற்றிகதைப்பார்கள் என்பது புரிகிறது, இவர்கள்தான் சரியான மாற்றுக்கருத்துக்காரர்கள்.
பிரண்டன் விடுதலைப்புலிகளில் எனக்கு ஏன் கோபம் என்று சொல்வீர்களா? உண்மையில் நான் விடுதலைப்புலிகளை மிகவும் நிறைவாக மதிக்கிறேன். அவர்களை விட சிறந்த நிருவாகிகளை அன்றும் கண்டதில்லை இன்றும் கண்டதில்லை. அவர்களை போல பண்பாளர்கள் எவருமே இல்லை. தியாகத்துக்கும் நேர்மைக்கும் விடுதலைப்புலிகள் இலக்கணமானவர்கள். இன்னும் சொல்லப் போனால் அவர்களது ஆட்சியில் உள்ள பகுதியை எங்கள் ஆயுட்காலத்தில் உலகின் முதல் பத்து செல்வந்த பிரதேசங்களில் ஒன்றாக நீங்களும் நானும் காணப்போகின்றோம். போதுமா?
அதற்காக, எனக்கு தெரிந்ததை தெரிந்த படி நான் எழுதுவது எனது உரிமை. நீங்கள் மறுத்தாலும் நான் எழுதுவேன். தவறான தகவலாக இருந்தால் சரியானதை எழுதுங்கள்.
அதே போல விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொண்டு பலரும் இங்கே எழுதும் கருத்துக்களில் உள்ள தர்க்க தவறுகள், வரலாற்று தவறுகள், தமிழ் தவறுகள் என்று நான் கருதுவது பற்றி எழுதும் உரிமையும் எனக்கு உண்டு. அதையும் நான் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க போவதில்லை.
யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்திலேயே விடுதலைப்புலிகளை குற்றம் கண்டு, கேள்வி கேட்டு, பதில் பெற்று தான் நான் ஆதரித்தேன். இங்கே ஆதரவாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அட்டகாசம் உண்மையில் அந்தநாள் ஈபிஆர்எல்எப் கூட்டத்தை தான் ஒத்திருக்கிறது. விடுதலைப்புலிகளின் பண்பாடான பேச்சுவழக்கோ, நடத்தையோ, அவர்களின் மதிநுட்பமோ, புன்னகை மாறாமலே உறுதியுடன் சமார்த்தியமாக நிலைமையை கட்டுப்படுத்தும் ஆற்றலோ இங்கு கருத்து எழுதும் தான்தோன்றி ஆதரவாளர்களிடம் கொஞ்சமும் இல்லை.
''
'' [.423]
'' [.423]

