04-01-2006, 01:57 AM
Niththila Wrote:ஜூட் அண்ணா சொல்வதை தெளிவா சொல்லுங்க மாத்தயாவும் கருணாவும் இருந்ததால எங்களை அண்ணாக்களுக்கு (மன்னிக்கவும் அப்படியே எழுதி பழகிட்டு விடுதலைப்புலிகளுக்கு) ஆதரவு கொடுக்க வேண்டாம் முழுமையான துரோகிகளாக சுய நலத்துக்காக தமிழீழ விடுதலையை விலைபேசியவர்களுக்கு ஆதரவு கொடுக்க சொல்லுறீங்களா :evil: :roll: :roll:நித்திலா
நான் எங்கே அப்படி சொன்னேன்?
தெளிவாக சொல்லும்படி கேட்கிறீர்கள். இதோ தெளிவாக...
யாரையும் நம்பாதீர்கள். ஆனால் யாரையும் அவமதிக்காதீர்கள்.
இறந்து போன புஸ்பராஜாவை பற்றி விடுதலைப்புலிகளுக்கு எதிரான இணையத்தளத்தில் இவர் இறப்பதற்கு இரு வாரங்களுக்கு முன்பு இவரை மோசமாக தாக்கி எழுதியிருந்தார்கள். ஏன்? வுpடுதலைப்புலிகளை ஆதரியுங்கள் என்று சொல்லிவிட்டாராம். அது தான் அந்த கேவலமான தாக்குதலுக்கு காரணம். புஸ்பராஜா குடும்பம் இராணுவத்தாலும் பொலிசாராலும் சித்திரவதைப்படுத்தப்பட்ட குடும்பம். இவர்கள் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப முன்னோடிகள். எப்படி மாத்தையாவையும் கருணாவையும் யாரென்று தெரியாமல் பலரும் ஆதரித்தார்களோ அப்படியே இந்த இறந்து போன மனிதரை யாரென்று தெரியாமல் தூற்றாதீர்கள்.
இங்கே எழுதுபவர்கள் பலரும் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து எழுதுகிறார்கள். பக்கத்திலிருந்த மாத்தையாவையும் கருணாவையும் தலைவருக்கே தெரியவில்லை. நீங்கள் எல்லாம் அவரிலும் சிறந்தவர்களா, இல்லையே? ஆகவே இந்த இறந்து போன மனிதரை தூற்றாதீர்கள்.
தெளிவான விளக்கம் போதுமா நித்திலா?
''
'' [.423]
'' [.423]

