03-31-2006, 08:53 PM
வணக்கம். இணைய இணைப்பது எடுத்ததும் சில நாட்கள் செய்திப் பக்கங்களுடன் பொழுதுபோய்.. அடுத்த கட்டமாக 'சற் ரூம்" அறிமுகமானது. அங்கே ஒரு சகோதரி அறிமுகமானார். அவரது அறிமுகம் மெசன்சருக்கு வளர, அவரது வாழ்த்து அட்டைகள் சில யாழ் முற்றத்தில் உள்ளன என்று காண்பிக்க, யாழ் அறிமுகமானது. 2002 என நினைக்கிறேன். கருத்துக்களத்துள் புகுந்தபோது, சந்திரவதனா, நளாயினி, சாந்தி போன்ற எழுத்துக்களால் அறிமுகமானவர்களின் கருத்துகளைக் கண்டு, நானும் அங்கத்துவனானேன். அதன் பிறகு நாளொருவண்ணம் யாழ் அங்கத்தினர்களில் பல இளைஞர்கள் எனது மெசன்சருக்கு வந்துகொண்டிருந்தார்கள். அவர்களில் முக்கியமானவர் கணனிப்பித்தன்.
அவரிடம் யாகூவில் ஒரு கோம்பேஜ் 'வணக்கம்' என தமிழில் எழுதி ஆரம்பித்து தந்தார். பின்னர் எப்படி புரொன்ட் பேஜ் மனேசரில் எழுதுவது.. எப்படி லோட் பண்ணுறது.. இப்படி தினமும் அவரது சலிப்படையா விளக்கங்களை குறித்துக்கொண்டே எனது 'கோம்பேஜ்' அறிவு ஓரளவு சுயமாக இயங்கும் நிலையை அடைந்தது.பின்பு அவரே தானியங்கி எழுத்துருவையும் உருவாக்கித் தந்தார்.. அவரின் துணையுடனும் சுரதாவின் இணையத் தள உதவியுடனும் தானியங்கி எழுத்தில் பக்கங்கள் உருவாகின.
இந்த நிலையில், இளைஞன் எனது மெசன்சருள் புகுந்துகொண்டார். பின் அவர் என்னை யாகூல பிறைவேற் சற் ரூம் அமைத்து குழுவாக பேசுவது போன்ற முறையை அறிமுகப்படுத்தி.. நான் வேலையால் வந்து கணனியில் அமர்ந்தவுடன்.. என்னை இழுத்து அங்கே விட்டுவிடுவார்.. இப்படியான அறிமுகங்களால் யாழில் 'ஐஸ்கிறீம் சிலையே நீதானோ?" எனும் தொடர் கதையை எழுத முடிந்தது. அதற்கு இந்த அனுபவங்களும், மெசன்சரிலே ஒரு அத்தியாயம் முடிந்த பிறகு சில யாழ் உறவுகள் கூறும் சில தகவல்களும் புதினங்களும் உதவி செய்தன.
ஆக, யாழில் என் இயக்கத்துக்கு திரு மோகன் அவர்கள் சுதந்திரம் அளித்ததால்.. எனது ஆர்வமும் அறிவும் புதுப்புதுத் தேடல்களை நோக்கி விரிந்தது. அதேநேரம் யாழ் மூலம் அறிமுகமான இளைஞனின் உதவியுடன் எனது ஆர்வம் 'தமிழமுதம்' இணையத்தளமாகவும் இன்னொரு படியை எட்டியுள்ளது.
அதிலே உள்ள பல புகலிடப் பாடல்களை யாழ் கள உறவுகள் மெசன்சர் ஊடாகவே அனுப்புவார்கள். அனுப்புகிறார்கள். ஆக, யாழ் இணையத் தளமானது எனக்குப் பல வகையிலும் உபயோகப்பட்டுள்ளது. உபயோகப்படுகிறது. கோம்பேஜ், குடில்கள், இணையத்தளம் என பலவற்றுக்கு யாழ்களம்தான் எனக்கு உதவும் உள்ளங்களை அளித்திருக்கிறது.
அதேபோல குருவிகள்.. அவருடனும் மெசன்சரில் இடைக்கிடை கதைப்பேன். இடைக்கிடை கதைத்தாலும் கதைக்கும்போது அவரது விளக்கங்கள கேட்கும்போது மணிகள் அழிவது தெரியவே தெரியாது. அவளவு சுவையாக அதேநேரம் விடயத்தோடு கதைப்பார். ஆனால் அவர் தற்போது 'எஸ்கேப்'பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.
யாழ் கள உறவுகள் யாபேரும் ஒற்றுமையாக இருக்க வாழ்த்துக்கள்!

.