Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மறந்து விட்டாயா.........?
#1
<b>மறந்து விட்டாயா.........?</b>

கண்களால் கைது செய்து
காதல் விதை விதைத்தவளே...
ஏழேழு ஜென்மமும்
உன்னோடுதான் என்றாயே....
இன்பத்திலும் துன்பத்திலும்
என்னோடு உறவாடியவளே....
காலம் மாறினாலும் - என்றும்
மாறாதது நம் - காதல்
என்றாயே......!

மொத்தத்தில் நீ இன்றி
நான் இல்லை என்றாயே
இது அத்தனையும்
பொய்யாக்கிவிட்டு - நீ மட்டும்
ஏன் என்னை மறந்து
பிரிந்து சென்றாய் - இதுதான்
உன் முதல் ஜென்ம
பந்தமா.........!

முகவரி தெரியாத காதலனாய்
உன் முகம் காணாத
ஏக்கத்தில் - ஊன் இன்றி
உறக்கம் இன்றி - உயிரற்ற
நிலையில் உருகிப் போய்
கிடக்கின்றேன்......!

கடைசியாக என்றாவது -என்
மரணச் செய்தியை கேட்டால்
ஒரு துளி கண்ணீராவது
விடு - அதுவே
நம் காதலுக்கு - இறுதி
அஞ்சலியாக இருக்கட்டும்...............!
<img src='http://img87.imageshack.us/img87/5535/imissu3yw.gif' border='0' alt='user posted image'>
>>>>******<<<<
>>>> <<<<
Reply


Messages In This Thread
மறந்து விட்டாயா.........? - by jcdinesh - 03-31-2006, 08:45 PM
[No subject] - by Rasikai - 04-01-2006, 12:15 AM
[No subject] - by Selvamuthu - 04-01-2006, 11:27 PM
[No subject] - by jcdinesh - 04-02-2006, 12:08 PM
கலங்காதே... - by gowrybalan - 04-02-2006, 11:55 PM
[No subject] - by RaMa - 04-03-2006, 06:16 AM
Re: கலங்காதே... - by jcdinesh - 04-03-2006, 12:59 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)