03-31-2006, 12:53 AM
திமுகவில் 25 சீட் கிடைத்திருந்தால் எங்கு போய் இருக்கும் இவரின் வாதங்கள் எல்லாம். இவ்வளவு வீரம் பேசும் வைகோ தமிழகத்தில் வருடம் 800 கோடி இலாபம் சம்பாதிக்கும் குடிபானத் தயாரிப்பு நிறுவனத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்பதை வெளிக் கொண்டு வருவாரா?? வைகோ அணி மாறியதற்கு சமீபத்தில் அவரது வலது கரமான நாஞ்சில் சம்பத் சொன்னது : கட்சிச் செலவிற்கு அதிமுக நிறையப் பணம் தருகின்றது அத்துடன் தனித்துப் போட்டியிட்டால் சென்ற முறைபோல் டெபாசிட்டையும் இழக்க நேரிடும். இது தான் உண்மை. அதிமுக தண்ணீர் போல் கோடிக் கணக்கில் செலவிடும் பணம் எங்கிருந்து வருகின்றதென்பதையும் வைகோ சொல்வாரா அல்லது சொதப்புவாரா?? திமுக வாஜ்பாயுடன் கூட்டணி வைத்து பின் காங்கிரசுடன் கூட்டணி வைத்ததைக் கண்டிக்கும் வைகோ ஏன் அதை அப்போதே கண்டித்து திமுகவுடன் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்காமல் இருந்திருக்கலாமே?? இவரது நேர்மையைக் கணித்துத் தான் தான் தமிழக மக்கள் மதிமுகவை இதுவரை சட்டசபையில் நுழைய விடவில்லை. கட்சி தொடங்கி 13 வருடங்களாகியும் சட்டசபையில் ஒரு இடம் கூட கிடைக்காத நிலையில் இப்படி குறுக்கு வழியிலாவது ஏதாவது கிடைக்குமா என்று முயல்கின்றார். முயற்சி திருவினையாக்குமா?? அல்லது முகத்தில் அறையுமா?? விரைவில் தெரிந்து விடும்.
<i><b> </b>
</i>
</i>

