02-10-2004, 07:39 PM
வாழ்த்துக்கள் தம்பிதாசன். இணயம் மூலம் ஓரு படத்தை பார்க்கும்போது பல தடைகள் ஏற்படலாம்.. அதனால் ஒளிப்பதிவைப்பற்றி விசேடமாக குறிப்பிட்டு கூறுவது கடினம்.. எனினும் பார்க்கும்போது மனதில் பட்டவைகள்.. சில காட்சிகளில் கமரா தேவையில்லாமல் அசைகிறதோ என்று தோன்றுகிறது.. அசையும்போது கமரா தளம்புவதுபோல உள்ளது. மற்றும், ஆரம்பத்தில் ஸ்நோ மீது அந்த இளைஞர் வீழ்ந்திருப்பதுபோல வருகிறது.. முடிவில் தாக்கப்படும் இடத்தில் அப்படியான காலநிலையை காண முடியவில்லை.. சிலவேளை காரில் ஸ்நோவை நோக்கி கொண்டு செல்கிறார்களோ தெரியவில்லை. இன்னொன்று தாக்கப்படும்போது.. அவரது சத்தம் ஆரம்பத்திலிருந்து வரவில்லை.. இடையிலேயே ஒலிக்கிறது. அது சற்று யதார்த்தத்தை பாதிக்கிறது. மற்றும்படி நல்ல கரு.. நல்ல முயற்சி.. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
.

