03-30-2006, 02:10 PM
narathar Wrote:நீர் தலைப்பில் இருந்து விலகி என்னைப் பற்றி விமர்சிக்கத் தொடங்கிய படியால்
எங்கே தங்களை விமரிசித்தேன்? தாங்கள் எழுதிய தகவலின் அடிப்படையில் நமது உறவினனும் தங்களைப்போல படித்து முடித்தால் அவன் குடும்பமும் வாழும், அவனும் தங்களைப்போல வாழ வழி கிடைக்கும் என்ற நப்பாசையில் ஒரு உதவி கேட்டேன். சுயநலவாதி என்று ஒத்துக்கொள்கிறீர்கள். தாங்கள் கண்ட வழியை (மதம் மாறுவது தவிர) மற்றவர்களுக்கு காட்ட மனம் வராவிட்டால் விட்டுவிடுங்கள் என்று எழுதி விட்டேனே. வேறுயாரிடமாவது கேட்டு களத்திலேயே எழுதிவிடுகிறேன். மற்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் பயன்பெறுவார்கள்.
narathar Wrote:எனது நிலயை உம்மொடு ஒப்பிட வேண்டிய கட்டாயம் எற்பட்டது.அதில் பிழை இருப்பின் நீரே தெளிவு படுத்தலாமே.அதாவது உமது மதம் அல்லது உட் பிரிவு , எவ்வாறு கூலின் மதத்தில் அல்லது உட்பிரிவில் இருந்து வேறு படுகிறது என.
நாரதரே
தனிப்பட்ட தகவல்கள் வேண்டாமே என்றுதானே புனைப்பெயரிலேயே வருகிறோம்? நான் தனிப்பட்ட தகவல்களை இவ்வாறான களங்களில் கொடுப்பது வழக்கம் அல்ல. தங்கள் குழப்பத்தை தவிர்க்க ஒரு சிறிய தனிப்பட்ட தகவல் தங்களுக்கு. <b>நான் கிறிஸ்தவன் அல்ல</b>. போதுமா?
narathar Wrote:கூலை நீர் ஆதரிப்பதற்கான காரணம் என்ன என்பதையும் விளக்கலாமே?
யார் சொன்னார்கள் நான் ஹூலின் யாழ். பல்கலைக்கழக நியமனத்தை ஆதரிக்கிறேன் என்று?. தாங்களே யான் "ஹூலின் நியமனம் ஜே.வி.பியின் விருப்பு" என்று எழுதியதை மறுபடியும், மறுபடியும் பிரசுரிக்கிறீர்கள்.
narathar Wrote:இங்கே முன்னுகுப் பின் முரணாக கருத்துக்களைச் சொல்லிக் கொன்டிருப்பது யார்?
முன்னுக்கு பின் முரணாக எழுதவில்லை நாரதரே. தங்களுக்கு அப்படி எழுதியிருப்பதாக தெரிகிறது. காரணம் தங்களை பொறுத்தவரை ஆதரவு அல்லது எதிர்ப்பு, கறுப்பு அல்லது வெள்ளை. எல்லா விடயங்களும் அப்படி அமைவதில்லை. கருத்துக்கள் சம்பந்தப்பட்ட விடயத்தின் பல்வேறு அம்சங்களை ஆராய்வதற்காக எழுதப்பட்டன. அவ்வளவே.
நிறையவே எழுதுகிறீர்கள் நாரதரே. மக்களின் கருத்து மாற்றத்தில் பங்களிப்பு செய்து வருகிறீர்கள். ஆய்வாற்றலை நிறையவே வளர்த்துக்கொள்ளுங்கள். ஒன்று இந்த எல்லை அல்லது மற்ற எல்லை என்று எல்லா விடயங்களும் முடிந்து போக முடியாது.
உதாரணத்துக்கு இந்த ஹூல் சங்கதியையே எடுத:து கொள்ளுங்கள்.
தமிழ்க்கூடட்டமைப்பில் உள்ள சிலர் ஒரு காலத்தில் விடுதலைப்புலி போராளிகளின் சாவுக்கு காரணமாக இருந்த ஈ.பி.ஆர்.எல.எவ். காரர். இன்று தலைவரின் ஆதரவுடன் செயற்படுகிறர்ர்கள்.
ஹூல் வன்னி சென்று தலைவருடன் கதைத்து ஒரு உடன்பாட்டுக்கு வரக்கூடும். நடக்காது என்று சொல்கிறீர்களா?
ஹூல் செய்த தவறுகளை தலைவர் மன்னிக்கலாம். சுரேஷ் பிரேமச்சந்திரனையும் சேரனையும் ஜெயபாலனையும் மன்னித்த தலைவரல்லவா?
தமிழீழ விடுதலையை எடுத்து கொள்ளுங்கள். இன்றைக்கு முஸ்லிம் இராணுவம் என்று பேச்சு அடிபடுகிறது. நாளைக்கு இலங்கையின் தமிழ் இராணுவம் விடுதலைப்புலிகள் என்றும் வடகிழக்கு ஐரோப்பிய யுனியன் போன்ற இலங்கையில் ஸ்கொட்லாந்து போன்ற நாடாகவும் (தமிழீழம்) விடுதலைப்புலிகளின் ஆட்சியாகவும் என்றும் முடியலாம்.
தனிநாடு அல்லது அடிமைவாழ்வு என்றுதான் அமைய வேண்டும் என்றல்ல.
ஆகவே ஒரு நிலைப்பாட்டை எடுக்காமல் பிரச்சினையை ஆராய பழக வேண்டும். நாரதரே. அப்போது தான் தீர்வுகள் பிறக்கும் உண்மைகள் தெரியும்.
''
'' [.423]
'' [.423]

