03-30-2006, 01:13 PM
Jude Wrote:narathar Wrote:நான் எனது மதம் என்ற ரீதியில் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயற்படவில்லை.எனது மதத்தவன் என்கின்ற படியால் போராட்டதைக் காட்டிக் கொடுக்க முயலும் ஒருவருக்கு ஆதராவகச் செயற்படவில்லை.ஆகவே ஒப்பீட்டளவில் உம்மை விட நான் சுய நலன் குறைந்தவன் என்றே கருதுகிறேன்.
நாரதரே
வழக்கம் போல தவறு செய்கிறீர்களே?? <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நான் ஹூலின் மதத்தை சேர்ந்தவர் என்று கருதி தாங்கள் இந்த மத அடிப்படையிலான தனிப்பட்ட தாக்குதலில் இறங்கியிருப்பது போல தெரிகிறதே. அங்கே தானே பெரும் தவறு நிகழ்கிறதே!! எனது கையெழுத்தை தாங்கள் கருத்துடன் படிப்பதே இல்லையா நாரதரே?. நாம் கேட்டதெல்லாம் நமது உறவுக்கு ஒரு வழிதான். தெரிந்தால் உதவுங்கள். தெரியாவிட்டால் விடுங்கள். மதச்சண்டையெல்லாம் என்னோடு வேண்டாம் நாரதரே. மதம் பற்றிய எனது வரலாறு தெரிந்தால் தாங்கள் திகைத்து போவீர்கள். மதத்தையை அறியாமல் பிறந்து வளர்ந்தவர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ...ம்.... உடனேயெ நான் என்னைப்பற்றி எழுதுகிறேன் என்று வழமைபோல தவறான முடிவுக்கு வந்து விடாதீர்கள். ஒரு கேள்விதான். அவ்வளவே.
கூலின் நியமனம் தமிழ் ஈழ விடுதலைப் போரைச் சிதைப் பதற்காக ஜேவிபியினால் மேற் கொள்ளப் பட்ட நியமனம் என்று எழுதி விட்டு இப்போது, நீர் கேட்கும் கேள்வியின் அர்த்தம் என்ன?
இங்கே நீர் என்ன அடிப்படயில் கூல் துணை வேந்தர் ஆக வேண்டும் என்று வாதாடுகிறீர்,தலைப்பு அது தானே? நீர் அவ்வாறெனில் ஜேவிபியின் உபாயத்திற்கு, அதாவது தேசிய விடுதலைப் போரட்டத்திற்கு எதிராக கூலின் நியமனம் நடை பெற வேண்டும் என்று வாதாடுகிறீரா?
இதில் இருந்து என்னால் யூகித்து அறிந்து கொள்ளக் கூடியது , நீர் கூலின் மதம் சார்ந்தே இங்கே விவாதிக்கிறீர் என்பதுவே,இது ஏற்கனவே உமது வாதங்களில் இருந்து தெரிவது.ஏனெனில் எப்போதெல்லாம் கூலின் மத வெறி இங்கே சுட்டிக்காட்டப் படுகிறதோ அப்போதெல்லாம் நீர் வந்து எழுதிகிறீர்.
நீர் தலைப்பில் இருந்து விலகி என்னைப் பற்றி விமர்சிக்கத் தொடங்கிய படியால் எனது நிலயை உம்மொடு ஒப்பிட வேண்டிய கட்டாயம் எற்பட்டது.அதில் பிழை இருப்பின் நீரே தெளிவு படுத்தலாமே.அதாவது உமது மதம் அல்லது உட் பிரிவு , எவ்வாறு கூலின் மதத்தில் அல்லது உட்பிரிவில் இருந்து வேறு படுகிறது என. கூலை நீர் ஆதரிப்பதற்கான காரணம் என்ன என்பதையும் விளக்கலாமே? இங்கே முன்னுகுப் பின் முரணாக கருத்துக்களைச் சொல்லிக் கொன்டிருப்பது யார்?


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->