03-30-2006, 12:35 PM
Jude Wrote:நாரதர்
தாங்கள் அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் தங்கள் பொறியியல்துறை கல்வியை சிறப்பாக முடித்துக்கொண்டதாக எழுதியிருந்தீர்கள். எந்த பல்கலைக்கழகம் என்று தெரிவிக்க முடியுமா?
யாழ்ப்பாண மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற என்ன செய்ய வேண்டும்.?
எனது உறவினர் ஒருவர் யாழ். பல்கலைக்கழகத்தில் பௌதிக துறையில் படிக்க அனுமதி பெற்றுள்ளார். ஆனால் அங்குள்ள நிலைமை காரணமாக அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படிக்க முடிந்தால் தனது படிப்பை தங்களைப்போல சிறப்பாக முடித்துக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கின்றார். இதற்கான தங்கள் ஆலோசனையை இந்த களத்தில் எழுதினால் இவரைப்போன்ற நிலையில் உள்ள மற்றவர்களும் படித்து பயன்பெற முடியும். நன்றி.
ஜூட்,
தலைப்பில் இருந்து விலகி தனிப்படத் தாக்க உதேசித்துள்ளீர்கள், நன்று.
உமது உறவினர் ஒரு சைவராக இருந்தால் ,அவர்கள் மதம் மாறினால் ,அதற்கு பிரதி உபகாரமாக கூல் சகோதரர்கள், உமது உறவினருக்கு அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் படிக்க எல்லா வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பார்கள்.இது எனக்கு தனிப்பட தெரிந்த விடயம்.
ஆகவே கூல் கட்டாயம் துணை வேந்தர் ஆவது உம் போன்றவர்களுக்கு அவசியமான ஒன்று.
அத்தோடு நீரும் ஏன் வீணா தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவானவர் போல் எழுதி வருகிறீர்,எல்லாரும் போராட்டத்தை விட்டுப் போட்டு
எவ்வாறு அமெரிக்காவிற்கு புலம் பெயருவது எவ்வாறு என்று எழுதலாமே.
நீர் என்னைத் தனிப்பட விமர்சிக்க முயன்றுள்ளீர்.உமக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன், நான் சுய நலமானவன் தான்,இதில் மறைக்கவோ, மறுக்கவோ ஒன்றும் இல்லை.என்னால் குறைந்த பட்சமாகச் செய்யக் கூடியது இங்கிருந்து போராட்டத்தை முன் நடத்துபவர்களுக்காக ஆதரவாகச் செயற்படுவதும். போராட்டதிற்கு எதிராக இணயத்தில் மேற் கொள்ளப் படும் எல்லாப் பிரச்சாரங்களுக்கும் எனக்குக் கிடைக்கும் நேரத்தை உபயோகித்து பதில் கொடுப்பது.
நான் எனது மதம் என்ற ரீதியில் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயற்படவில்லை.எனது மதத்தவன் என்கின்ற படியால் போராட்டதைக் காட்டிக் கொடுக்க முயலும் ஒருவருக்கு ஆதராவகச் செயற்படவில்லை.ஆகவே ஒப்பீட்டளவில் உம்மை விட நான் சுய நலன் குறைந்தவன் என்றே கருதுகிறேன்.உலகில் நூறு சதவிகிதம் சுய நலம் இல்லாத மனிதர்கள் என்று என்னால் தற்கொடைப் போராளிகளை மட்டுமே கருத முடியும்.ஆகவே சுய நலம் என்பது ஒப்பீட்டிடளவிலானது.அதன் அடுத்த முனயில் உம்மையும்,கூலையும் நான் காணுகிறேன்.

