03-30-2006, 08:13 AM
Luckyluke Wrote:ஆமாம்... காலில் விழாததால் ஈழம் மட்டும் 2100ல் வல்லரசாக இருக்கப் போகிறதாம்.....
காலில் விழாததால் ஈழம் வல்லரசாக மட்டுமில்லை வலிமை பொருந்திய உலகவரலாற்றுக்கே உதாரணமான அரசாகத்தான் அமையும்.
ஈழத்தில் நடப்பது இரு இனங்களுக்கிடையேயான போராட்டம். பெரும்பான்மையினத்தால் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டுத் தன் சந்ததியையே இழந்து நிற்கும் ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம்.
ஈழத்தில் தனிமனித துதித்தல் அரசியலில் பெயர் பதியப்பட்டால் வருங்கால முதல்வர் வருங்கால ஜனாதிபதியென்று கூச்சலிட்டு மக்கள் ஏமாரும் நிலைமை இல்லை. (ஜனனாயகம் பேசிய அரசியல்வாதிகளின் காலத்தில்தான் அப்படியிருந்தது)
இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்டு இன்று உலகத்தில் ஒரு தனியரசுக்கான அத்தனை வளங்களுடனும் நிமிர்ந்திருக்கும் ஒரு தேசம்தான் ஈழம்.
தமிழ்ஈழம் என்ற சொல்லே எத்தனையோ ஆயிரம் பேரில் உயிரினாலும் உதிரத்தினாலும் எழுதப்பட்ட சொல். இங்கு அஸ்டாங்க பஞ்சாங்க துதித்தல்கள் இல்லை.
:::: . ( - )::::

