03-29-2006, 07:45 PM
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான மூது}ரின் ஆதியம்மன்கேணி என்னும் இடத்திலுள்ள விடுதலைப்புலிகளின் முன்னரங்க காவரண்மீது நேற்று முன்தினம் சிறிலங்கா இராணுவத்தினரும் ஒட்டுக்குழுக்களும் இணைந்து நாடாத்திய தாக்குதல் விடுதலைப்புலிகளினால் முறியடிக்கப்பட்டது. இதில் விடுதலைப்புலிகளுக்கு எவ்வித இழப்புக்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரிடம் முறையிட்டுள்ளனர். இச்சம்பவம் விடுதலைப்புலிகளை வலிந்து போருக்கும் இழுக்கும் சம்பவம் எனவும் இது போர் நிறுத்த மீறல் எனவும் எழிலன் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.