Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கரிநாகம் கருணா என்னும் மாயை!!!!!!!!!
#3
[b]<span style='font-size:25pt;line-height:100%'>கரிநாகம் கருணா என்னும் மாயை!!!!!!!!! (பாகம் 3)</span>


ஓயாத அலைகள் 3 ஒட்டுசுட்டானில் ஆரம்பமாகியது. கேணல் ஜெயத்தின் தலைமையில் விடுதலைப்புலிகளின் படையணிகள் சில மணி நேர சண்டையின் பின்னர் ஒட்டுசுட்டானை கைப்பற்றின. இதே வேளை கேணல் சொர்ணத்தின் தலைமையிலான பிறிதொரு படையணிகள் நெடுங்கேணியை கைப்பற்றின.

இந்தக் களோபரங்கள் நடந்து கொண்டிருந்த பொழுது எதுவும் அறியாமல் கருணா மன்னார் பகுதியில் சில படையணிகளுடன் தேசியத் தலைவரின் உத்தரவிற்காக காத்துக் கொண்டிருந்தார்.

கேணல் தீபனின் தலைமையில் சென்ற புலிகளின் படையணிகள் கரிப்பட்ட முறிப்பு, மாங்குளம், கனகராயன் குளம் போன்ற பகுதிகளை கைப்பற்றிய படி புளியங்குளம் நோக்கி முன்னேறின. கேணல் தீபனின் தலைமையிலான படையணிகளும், நெடுங்கேணியில் இருந்து ஒலுமடுவை கைப்பற்றிய படி முன்னேறி வந்த படையணிகளும் இணைந்து புளியங்குளத்தை கைப்பற்றின. இதற்கு முன்னர் கேணல் சொர்ணத்தின் வழிநடத்தலில் மணலாற்றில் இருந்த ஒதிய மலைப் பகுதியும் அதை அண்டிய பல பகுதிகளும் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது.

ஓயாத அலைகள் மூன்றின் இரண்டாம் கட்டமாக கேணல் ஜெயத்தின் தலைமையிலான படையணிகள் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.


<img src='http://img150.imageshack.us/img150/1333/t15py.gif' border='0' alt='user posted image'>

ஓயாத அலைகள் மூன்றின் மூன்றாம் கட்டமாக ஆனையிறவுப் பெருந் தளத்தின் மீதான முற்றுகைச் சமர் அமைந்தது. இந்த முற்றுகைச் சமரின் ஒரு பகுதிக்கு பொறுப்பாக கருணா நியமிக்கப்பட்டார். கருணாவின் தலைமையிலான படையணிகள் வெற்றிலைக்கேணி கட்டைக்காடு போன்ற பகுதிகளை கைப்பற்றின. ஆனையிறவுத் தளத்திற்கு வன்னியிலிருந்த வரும் அச்சுறுத்தல்களில் இருந்து காப்பதற்காக உருவாக்கப்பட்ட தளங்களாகிய பரந்தன், உமையாள்புரம் போன்ற பகுதிகளை கேணல் தீபன் தலைமையிலான படையணிகள் கைப்பற்றின.

ஓயாத அலைகள் மூன்றின் நான்காம் கட்டமாக குடாரப்பு தரையிறக்கமும், ஆனையிறவு கைப்பற்றலும் அமைந்தது . இதில் குடாரப்பு தரையிறக்கமும் பின்பு கேணல் பால்ராஜின் தலைமையில் நடந்த இத்தாவில் சமரும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை.

குடாரப்பு தரையிறக்கத்தை நோர்மண்டி தரையிறக்கத்துடன் இராணுவ ஆய்வாளர்கள் ஒப்பிடுவர். விடுதலைப்புலிகளால் ஈழத்தின் எந்த மூலையிலும் தங்கள் படைகளை இறக்க முடியும் என்பது அன்று நிரூபிக்கப்பட்டது. இவ்வாறான ஒரு தரையிறக்கம் கருணாவின் கலகத்தினை அடக்குவதற்கு வெருகல் ஆற்றிற்கு அப்பால் உள்ள பகுதியிலும் பின்பும் நிகழ்ந்தது.

குடாரப்பில் தரையிறங்கிய படையணிகள் இத்தாவில் பகுதியில் நிலையெடுத்தன. அங்கு நடந்த சமர் விடுதலைப்புலிகளின் சண்டையிடும் உச்ச திறனை வெளிப்படுத்திய சமர். உலக வரலாற்றில் எங்கும் நிகழ்ந்திராத நிகழ்வு அது. சரியான வினியோகப் பாதைகள் இன்றி நாற்பதினாயிரம் படைகளுக்கு நடுவில் நின்று பல வாரங்கள் 1500 விடுதலைப் புலிகள் சண்டை செய்தனர். கேணல் பால்ராஜை உயிருடன் பிடிப்பதா, அல்லது பிணமாக பிடிப்பதா என ஆராய்ச்சி செய்தபடி வந்த சிறிலங்கா படையினர் பெருத்த அவமானத்தோடு அடி வாங்கி ஓடினர். பல முறை முயன்றும் இத்தாவிலில் நிலைகொண்டிருந்த புலிகளை அவர்களால் அசைக்க முடியவில்லை. இந்தச் சமரைப் பற்றி பரணி பாடுதல் தகும்.

பின்பு கேணல் தீபனின் தலைமையிலான படையணிகள் முன்னேறி வந்து இத்தாவிலில் நிலைகொண்டிருந்த விடுதலைப்புலிகளுடன் இணைந்து கொண்டனர். அதன் பிறகு ஆனையிறவை கைப்பற்றும் பெரும் சமர் தொடங்கியது. ஏற்கனவே பல இடங்களில் அடி வாங்கி உளவியல்ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்த சிறிலங்கா இராணுவம் உயிர் தப்பி ஓடியது. ஆனையிறவு சமருக்கு ஒருங்கிணைப்பு தளபதியாக விளங்கிய கேணல் பானு ஆனையிறவில் புலிக் கொடியை ஏற்றினார்.



ஆனையிறவுச் சமருக்கான முற்றுகைச் சமரிலும், குடாரப்புத் தரையிறக்கத்திலும் கேணல் சூசை தலைமையிலான கடற்புலிகள் பெரும் பணி ஆற்றினார்கள். கடற்புலிகள் ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்டதிற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தார்கள். ஓயாத அலைகள் மூன்றில் ஏற்பட்ட அனைத்து வெற்றிகளுக்கும் கேணல் பானு தலைமையிலான கிட்டு பீரங்கிப் படையணி ஒரு பெரும் காரணமாக இருந்தது. கிட்டு பீரங்கி படையணியின் துல்லியமான எறிகணை தாக்குதல்கள் சிங்கள இராணுவத்தை கிலி கொண்டு ஓட வைத்திருந்தன.

விடுதலைப்புலிகளால் பெரும் தளங்களையும் நகரங்களையும் கைப்பற்றி தக்க வைக்க முடியும் என்பதை நிருபத்த ஓயாத அலைகள் மூன்றில் கருணாவின் பங்கு என்பது மிக மிகச் சிறியதே. இந்தச் சமர் ஏறக்குறைய விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும் பங்கு கொண்ட சமர். அனைவரும் தேசியத் தலைவரால் தமக்கு கொடுக்கப்பட்ட பகுதிகளை சரியாக செய்து தமிழினத்திற்கு பெரும் வெற்றியை தேடித் தந்தனர்.

ஓயாத அலைகள் மூன்றிலாவது கருணாவின் பங்கு சிறியளவில் இருந்தது. சிறிலங்கா படைகளை போரே செய்ய முடியாதபடி மொத்தமாக முடக்கிப் போட்ட "தீச்சுவாலை" சமரில் கருணாவின் பங்கு எள்ளளவும் இருக்கவில்லை. "தீச்சுவாலை நடந்த பொழுது கருணா மீண்டும் கிழக்கு திரும்பியிருந்தார்.

ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்குடன் சிறிலங்கா அரசு "தீச்சுவாலை" என்னும் பெயரில் ஒரு பெரும் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. கிளாலி, முகமாலை, நாகர்கோவில் ஆகிய இராணுவத் தளங்களில் இருந்து இந்த படையெடுப்பு நடந்தது. பெரும் எடுப்புக்களுடன் சிறிலங்கா இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை ஓரே நாளில் முறியடிக்கப்பட்டது. விடுதலைப்புலிகளால் ஒரு தரைச் சண்டையில் எதிரிக்கு குறுகிய நேரத்தில் எவ்வகையான இழப்புக்களை ஏற்படுத்த முடியும் என்பதை உலகம் கண்ட சமர்களாமாக "தீச்சுவாலை" அமைந்தது. ஏறக்குறைய ஆயிரம் படையினர் இறந்தும் மூவாயிரம் படையினர் காயமடைந்தும் போனார்கள். சிறிலங்கா இராணுவம் பெயர் சூட்டி ஆரம்பித்த நடவடிக்கைகளில் தீச்சுவாலை மட்டும்தான் ஒரு சிறு நிலபரப்பைக் கூட கைப்பற்றாது முடிந்து போனது. அது மட்டுமன்றி முதல் முறையாக தங்களின் இராணுவ நடவடிக்கை தோல்வியில் முடிந்ததாக எவ்வித சப்பைக்கட்டும் கட்டாமல் சிறிலங்கா அரசு வெளிப்படையாக அறிவித்ததும் அதுவே முதற் தடவையாக இருந்தது. இனியும் சண்டைகள் தொடர்ந்தால் சிறிலங்கா இராணுவத்தால் இழப்புக்களை சமாளிக்க முடியாது போகும் என்று சிறலங்கா அரசு கூறியது. இந்தச் சமரில் விடுதலைப்புலிகளும் பல புதிய யுக்திகளை கையாண்டார்கள். எறிகணைத் தாக்குதல் மூலம் சிங்கள படையினரை கண்ணிவெடி வயல்களுக்குள் ஓட வைத்து பெரும் இழப்பை ஏற்படுத்தினர்கள். உலக சரித்திரத்தில் முதற் தடவையாக தற்காப்புத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் கண்ணிவெடிகள் ஒரு வலிந்த தாக்குதலுக்கு பயன்பட்டதாக மாமனிதர் தாரகி எழுதியிருந்தார். இவ்வாறு இந்த சமர் பல "முதற் தடவைகளை" கொண்டது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க "தீச்சுவாலை" எதிர்ச் சமரை தீபன் தலைமை தாங்கியிருந்தர். சார்ள்ஸ் அன்ரனி படையணி, சோதியா படையணி, மாலதி படையணி ஆகிய படையணிகள் இதில் பங்கு கொண்டன.

ஆகவே ஊன்றிக் கவனிக்கையில் கருணாவும், அவரை சார்ந்தவர்களும் சொல்வது போல் விடுதலைப்புலிகளின் சண்டைகள் எதுவும் கருணாவில் தங்கியிருக்கவில்லை. விடுதலைப்புலிகள் பெற்ற பெரு வெற்றிகள் கருணா இல்லாமலேயே பெறப்பட்டன. கருணாவை விட பல மடங்கு திறமையும் அனுபவமும் கொண்ட தளபதிகளை விடுதலைப்புலிகள் இயக்கம் பெற்றிருக்கிறது.

உலகத்தில் எந்த இனமும் பெற்றிராத ஈடு இணையற்ற பெரும் இராணுவ வல்லுனராகிய தேசியத் தலைவர் பிரபாகரனையும் நூற்றுக் கணக்கான வீரத் தளபதிகளையும் கொண்டிருக்கும் தமிழினத்திற்கு, கருணாவால் எவ்விதத்திலும் சவால் விட முடியாது.

கேணல் பால்ராஜ், கேணல் தீபன், கேணல் பானு, கேணல் சொர்ணம் போன்றவர்களின் வரிசையில் இருந்த கருணா, தற்பொழுது ராசிக், புளொட் மோகன் போன்றவர்களின் வரிசையில் இருக்கின்றார். ஆனால் ராசிக், புளொட் மோகன் போன்றவர்களோடு ஒப்பிடுகின்ற பொழுது கருணா அங்கும் ஒரு கற்றுக்குட்டியே!

(பாகம் 4 இல் முடிவுறும்)


- வி.சபேசன்

(இக் கட்டுரைக்கு சில தகவல்களை தந்து உதவிய தமிழீழத்தில் வாழும் பெயர் குறிப்பிட முடியாத நண்பர்களுக்கு நன்றி)

நன்றி:
- வி.சபேசன்
[b]
Reply


Messages In This Thread
[No subject] - by I.V.Sasi - 03-29-2006, 03:59 PM
[No subject] - by I.V.Sasi - 03-29-2006, 04:03 PM
[No subject] - by I.V.Sasi - 04-02-2006, 09:40 PM
[No subject] - by I.V.Sasi - 04-02-2006, 10:09 PM
[No subject] - by Birundan - 04-02-2006, 10:40 PM
[No subject] - by கந்தப்பு - 04-03-2006, 03:43 AM
[No subject] - by I.V.Sasi - 04-03-2006, 10:15 AM
[No subject] - by கந்தப்பு - 04-19-2006, 05:09 AM
[No subject] - by Subiththiran - 04-19-2006, 09:56 AM
[No subject] - by Subiththiran - 04-19-2006, 09:58 AM
[No subject] - by Subiththiran - 04-19-2006, 10:00 AM
[No subject] - by Subiththiran - 04-19-2006, 10:09 AM
[No subject] - by Subiththiran - 04-19-2006, 10:12 AM
[No subject] - by Subiththiran - 04-19-2006, 10:14 AM
[No subject] - by Subiththiran - 04-19-2006, 10:16 AM
[No subject] - by Subiththiran - 04-19-2006, 10:21 AM
[No subject] - by கந்தப்பு - 04-20-2006, 12:42 AM
[No subject] - by கந்தப்பு - 04-20-2006, 12:43 AM
[No subject] - by கந்தப்பு - 04-20-2006, 12:44 AM
[No subject] - by கந்தப்பு - 04-20-2006, 12:45 AM
[No subject] - by வர்ணன் - 04-20-2006, 03:17 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)