02-10-2004, 12:17 PM
நம் தமிழினம் அன்று முதல் இன்று வரை செய்த ஒரு விடயம், அடுத்தவன் மீது பழி சுமத்துவது. ஒரு தப்பை செய்தவன் அதை ஏன் செய்கிறான், எதனால் செய்கிறான் என்பதை விடுத்து அதற்கு மருந்து தேடுவது எந்தவிதத்திலும் ஒரு சரியான முடிவாகாது. தப்பு செய்யும் இந்த இளைஞர்கள் வயதில் இளையவர்கள். இந்த இளைஙர்களுக்கு சரியான ஒரு வழிகாட்டல் இல்லாதமையே இன்றைய இந்த வன்முறை குழுக்களக்கு காரணம். இதை நான் சொல்லவில்லை இந்த இளைஞர் குழுக்களின் போக்குகளை ஆராய்ந்த வல்லுனர்கள் சொல்கிறார்கள். இந்த கழுக்கள் தமிழ் மக்கள் மத்தில் மட்டுமில்லை. ஏனைய இனங்களும் வந்தித்த ஒன்றே, ஆனால் மற்றவர்கள் அதனை இனம் கண்டு அதற்கு தக்க வேலைத்திட்டத்தை அமைத்துக் கொடுத்தனர். ஆனால் நமது சமூகம் என்ன செய்தது. ஊருக்கு ஊர் கோயில், ஊர்ச்சங்கம், பள்ளிக்கூட சங்கம், இப்படி தமது தேவைகளை பூர்தி செய்யும் அமைப்புகளை உருவாக்கினார்களே ஒளிய இந்த இளைஞர்களை வழிமுறைப்படுத்தும் வகையில் யாராவது வேலைத்திட்டத்தை வைத்தார்களா? வன்முறையில் ஈடுபடும் இந்த இளைஞர்களை இதற்குள் அறிமுகப்படுத்தியவர்கள் நாமே, ஊர் சண்டையை இங்கு கொண்டு வந்தவர்கள் இந்த அப்பாவி இiளுஞர்கள் அல்ல அவர்களது பெற்றோர், அல்லது அவர்களது உறவினர்களே, தாம் செய்ய முடியா டீபான காலத்தல் அதை தமது சந்ததியை வைத்து செய்வது. அண்மையில் நடைபெற்ற ஒரு சண்டை, ஊர்ச்ச சண்டை, அதில் ஈடுபட்ட பலருக்கு அந்த ஊரின் நிறமே தெரியாது,. பிரதேச வாதத்தை கட்டியெழுப்பிய நாமே, சாதியம், சமயத்தின் பெயரால் வன்முறை வழர்த்ததும் நாமே, தெரிந்தே தெரியாமலே வன்முறையை நமது போராட்டம் இவர்களுக்கு அறிகப்படுத்திவைத்தது. விளைவு வெட்டு, குத்து, கொலை. வன்முறையை நாம் என்று போராட்ட வடிவமாக எடுத்தோமோ அன்றே இந்த அபாயமும் வந்து விட்டது. இது புலம் பெயர் நாட்டில் வர நமது போராட்டம் காராணமாக இல்லாது போனாலும், அதை கொண்டு வந்து அறிமுகப்படுத்தியவரகள் பலர் முன்னை நாள் போராளிகள். எனவே இந்த இளைஞர்களின் இன்றைய நிலைக்கு பொறுப்பெடுக்கவேண்டியது புல் பெயர் தமிழ் சமூகவே ஒளிய இந்த இளைஙர்கள் மட்டுமல்ல. கறுப்பு இனத்தவர்கள் இன்று உதைபந்தாட்டத்தை ஒரு திருப்புமுனையாக பாவிக்கிறார்கள் அத்துட்ன ஏனைய விழையாட்டுக்களை தமது பொழுதபோக்காக மாற்றி தமது கவனத்தை திருப்புகிறாரகள். ஆசியர்கள் கூட இன்று விளையாட்டு, கலை போன்றவற்றில் கவனத்தை திருப்புகிறார்கள். ஆனால் இதற்கு முன்நின்று இந்த இளைஞர்களை வழி நடத்துவது சமய மற்றும் கலாச்சார அமைப்புகள், ஆனால் தமிழ் சமுதாயத்தில் நிலைமை மாறி நடை பெறுகிறது. இளம் சந்ததியை வழி நடத்த வேண்டிய அமைப்புகள் கண் மூடி நிற்கிறது அல்லது வன்முறையை து}ண்டி விடுகிறது. தயவுசெய்து இந்த இளைஞர்களை பரிதாபத்துடன் நோக்கங்கள். இவர்கள் நமது எதிர்கால சந்ததி. இவர்களை வழி நடத்த யாரும் இல்லாத ஒர தவறை விட்ட நாம் தான் வெட்கி தலை குனிய வேண்டியவர்கள். குற்றம் கூறுவதை விடுத்து நாம் அனைவரும் இதை அனுதாபக் கண்ணோட்டத்துட்ன பார்த்து உதவி செய்ய வேண்டும். இல்லை தமிழ் சமுதாயத்தின் எதிர்காலம் கேள்விக்குறியான ஒன்றாகவே இருக்கும்.

