Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
3 கொலை செய்த கல்லுõரி மாணவி
#3
தாய்இ 2 தங்கைகளை கொன்றார்இ கல்லூரி மாணவி
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வெறிச்செயல்


கரூர்இ மார்ச்.28-

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவி தனது தாயின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தார். 2 தங்கைகளை தண்ணீர் தொட்டிக்குள் தள்ளி கொன்றார். காதலனுடன் அவர் பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

நெஞ்சை உறைய வைக்கும் இந்த கொடூர சம்பவம் கரூரில் நடந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

போலீஸ் ஏட்டு குடும்பம்

கரூர் வடக்கு காந்தி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 50). கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ரூத்மேரி (வயது 45). இவர்களுக்கு 4 மகள்கள். மூத்த மகள் நவீனா (வயது 18) கரூர் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 2-வது மகள் வினோதினி (வயது 17) காந்திகிராமம் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். 3-வது மகள் சுமைலி (வயது 9) 4-ம் வகுப்பும்இ 4-வது மகள் அகிலாண்டேஸ்வரி (வயது 4) எல்.கே.ஜி.யும் படித்து வந்தனர்.



காதல்

நவீனாஇ தன்னுடன் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் ராஜாமணி என்ற மாணவரை காதலித்து வந்தார். இதற்கு நவீனாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பாக அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக தெரிகிறது.

தகராறு

இந்நிலையில் செல்வம் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் வேலைக்காக அரவக்குறிச்சி சென்றுவிட்டார். வீட்டில் ரூத்மேரிஇ நவீனா மற்றும் குழந்தைகள் இருந்தனர். அப்போதுஇ காதல் விவகாரம் தொடர்பாக தாய் ரூத்மேரிக்கும்இ மகள் நவீனாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தூங்க சென்றுவிட்டனர். வினோதினிஇ சுமைலிஇ அகிலாண்டேஸ்வரி ஆகியோர் வீட்டின் வராண்டாவிலும்இ ரூத்மேரிஇ நவீனா ஆகியோர் வீட்டுக்கு உள்ளேயும் தூங்கிக்கொண்டு இருந்தனர்.

அம்மிக்கல்லை போட்டு கொலை

நடுஇரவில் நவீனா எழுந்தார். தனது தாயால் தனது காதலுக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதிய அவர்இ தாயாரை கொன்றுவிட தீர்மானித்தார். தாய் என்றும் பாராமல்இ தூங்கிக்கொண்டு இருந்த ரூத்மேரியின் தலையில் அம்மிக்கல்லை தூக்கிப்போட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த ரூத்மேரி அதே இடத்தில் பலியானார்.

இந்த சத்தம் கேட்டு நவீனாவின் தங்கை வினோதினி எழுந்தார். அவரை நவீனா அரிவாளால் வெட்டினார். பின்னர்இ தாயாரையும்இ தங்கையையும் நவீனா ஒரு அறைக்குள் போட்டு பூட்டினார்.



எரித்துக்கொலை

மண்எண்ணையை எடுத்து 2 பேர் மீதும் ஊற்றினார். இதற்குள் சுதாரித்துக்கொண்ட வினோதினிஇ நவீனாவின் பிடியில் இருந்து தப்பித்து வெளியே ஓடினார். தங்கை தப்பினாலும் பரவாயில்லை என்று தாய் மீது நவீனா மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். பின்னர் வெளியே வந்து பார்த்தார்.

தங்கைகளை கொன்றார்

அங்கு தங்கைகள் சுமைலிஇ அகிலாண்டேஸ்வரி ஆகியோர் தூங்கிக்கொண்டு இருப்பதை பார்த்தார். இவர்களாலும் தனது காதலுக்கு தொந்தரவு ஏற்படும் என்று கருதினார். எனவேஇ 2 தங்கைகளையும் எழுப்பினார். அவர்களின் ஆடைகளை கழற்றினார். புதிய உடை தருவதாக கூறி அருகில் இருந்த குடிநீர் தொட்டிக்கு அழைத்துச் சென்றார்.



அங்கிருந்த தண்ணீர் தொட்டியின் மூடியை திறந்து தண்ணீர் தொட்டிக்குள் 2 தங்கைகளையும் தள்ளி விட்டார். இதில் சுமைலி வெளியே வர முயன்றார். அவரை தண்ணீருக்குள் அமுக்கி சாகடித்தார். தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்ட 2 பேரும் இறந்தனர்.

தப்பி ஓட்டம்

பின்னர்இ தப்பி ஓடிய மற்றொரு தங்கை வினோதினியை நவீனா கொலைவெறியுடன் தேடினார். ஆனால் வினோதினி சிக்கவில்லை. எனவேஇ நவீனா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதற்கிடையேஇ நவீனாவின் பிடியில் இருந்து தப்பிய வினோதினி அதே இரவில் பலத்த ரத்த காயத்துடன் கரூர்-திருச்சி மெயின் ரோட்டில் உள்ள ஆயுதப்படை மைதானத்துக்கு ஓடிச்சென்றார். அங்கிருந்த போலீசாரிடம் தனது தாயை தனது அக்காள் கொலை செய்துவிட்டதாகவும்இ தன்னையும் கொல்ல வந்தபோது தப்பி ஓடி வந்து விட்டதாகவும் அழுதபடியே கூறினார்.

போலீசார் விசாரணை

இதனை தொடர்ந்து போலீசார் வினோதினியை கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கொலை நடந்த வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு ரூத்மேரி முகம் சிதைந்த நிலையில் தீயில் கருகி பிணமாகவும்இ சுமைலிஇ அகிலாண்டேஸ்வரி ஆகியோர் வீட்டின் அருகில் தண்ணீர் தொட்டிக்குள் பிணமாகவும் கிடந்தனர். பிணங்களை கைப்பற்றி பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி

வைத்தனர்.காதலனுடன் சிக்கினார்

கொலையாளி நவீனாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நவீனாவின் செல்போன் நம்பரை கண்காணித்தனர். இதில்இ நவீனா உப்பிடமங்கலம் பகுதியில் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற தனிப்படையினர் நவீனாவை பிடித்தனர். இதேபோல் நவீனாவின் காதலன் ராஜாமணியும் பிடிபட்டார். இருவரிடமும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

உயிர்தப்பிய தங்கை பேட்டி

வெட்டு காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நவீனாவின் தங்கை வினோதினிஇ நடந்த சம்பவம் குறித்து கூறியதாவது:-

என் அக்கா எப்படி இப்படி நடந்து கொண்டார் என்று தெரியவில்லை. நாங்கள் வீட்டில் எப்போதும் சந்தோஷமாகத்தான் இருப்போம். சம்பவத்தன்று இரவில்கூட டி.வி.யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டு இருந்தோம். தூங்கிய பிறகுதான் என் அக்கா கொலைவெறியுடன் நடந்துகொண்டாள். அப்போது அவளுடன் வேறு யாரும் இருந்ததாக தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பரபரப்பு

காதலுக்காக பெற்ற தாய்இ உடன்பிறந்த தங்கைகளை ஈவு இரக்கமின்றி கல்லூரி மாணவி கொலை செய்த சம்பவம்இ கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Reply


Messages In This Thread
[No subject] - by SUNDHAL - 03-28-2006, 09:45 AM
[No subject] - by aathipan - 03-28-2006, 10:27 AM
[No subject] - by aathipan - 03-28-2006, 11:14 AM
[No subject] - by tamilini - 03-28-2006, 11:48 AM
[No subject] - by aathipan - 03-28-2006, 12:07 PM
[No subject] - by SUNDHAL - 03-28-2006, 01:08 PM
[No subject] - by தூயவன் - 03-28-2006, 01:13 PM
[No subject] - by SUNDHAL - 03-28-2006, 01:18 PM
[No subject] - by தூயவன் - 03-28-2006, 01:20 PM
[No subject] - by SUNDHAL - 03-28-2006, 01:25 PM
[No subject] - by தூயவன் - 03-28-2006, 01:27 PM
[No subject] - by SUNDHAL - 03-28-2006, 01:34 PM
[No subject] - by தூயவன் - 03-28-2006, 01:39 PM
[No subject] - by SUNDHAL - 03-28-2006, 01:42 PM
[No subject] - by கந்தப்பு - 03-29-2006, 06:31 AM
[No subject] - by KING ELLALAN - 03-29-2006, 11:23 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)