Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
The LTTE claims that one of the paramilitaries is an Islamic
#2
பாகிஸ்தான் புலனாய்வுத்துறை உதவியுடனே முஸ்லிம் ஜிகாத் குழு: பாலசிங்கம் அதிர்ச்சித் தகவல்!
[திங்கட்கிழமை, 27 மார்ச் 2006, 17:58 ஈழம்] [ச.விமலராஜா]
இலங்கையின் கிழக்குப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவப் புலனாய்வுத்துறையின் உதவியுடன் முஸ்லிம் ஜிகாத் குழு இயங்கி வருவதாக விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியரும் அரசியல் ஆலோசகருமான கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார்.


அவுஸ்திரேலிய ஏபிசி தொலைக்காட்சியின் "ஏசியா பசுபிக் போக்கஸ்" நிகழ்ச்சிக்கு அன்ரன் பாலசிங்கம் அளித்த நேர்காணல்:

கேள்வி: சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள துணை இராணுவக் குழுக்களின் நிழல் யுத்தத்தால் அமைதிப் பேச்சுக்கள் சீர்குலையும் என்று தெரிவித்திருந்தீர்கள். இது தொடர்பில் என்ன ஆதாரங்களை வைத்திருக்கிறீர்கள்?

பதில்: இது தொடர்பில் ஏராளமான ஆவணங்கள், வரைபடங்கள் உள்ளிட்ட மேலதிக தகவல்களை சிறிலங்கா அரசாங்கத்திடம் கொடுத்திருக்கிறோம்.

அதில் அக்குழுவினர் இயங்கி வருவதையும், அவர்களது தலைமை, அவரது கட்டளை அமைப்பு, அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் அக்குழுக்களினது முகாம்கள் ஆகியவை தொடர்பிலான தரவுகளும் இடம்பெற்றுள்ளன.

சிறிலங்கா அரச படைகளுடன் சேர்ந்து அக்குழுவினர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளுவதை நிரூபிக்கும் ஆதாரங்களையும் நாம் வைத்திருக்கிறோம்.




கேள்வி: அவர்களைக் கட்டுப்படுத்துவது யார் என்று கருதுகிறீர்கள்? ஏனெனில் அவர்கள் உங்களுடன்தாம் சண்டை நடத்துவதாக கூறுகிறார்கள்...

பதில்: துணை இராணுவக் குழுக்களில் பெரும்பாலானவை சிறிலங்கா இராணுவப் பிரதேசங்களில் இராணுவ முகாம்கலிருந்தே இயங்குகின்றன. சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசாங்கமானது உண்மையில் அமைதியை விரும்பினால், இயல்பு நிலைமை உருவாக்க வேண்டுமெனில் துணை இராணுவக் குழுக்களினது ஆயுதங்களைக் களைந்து வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

கேள்வி: இந்த துணை இராணுவக் குழுக்களில் ஒன்று உங்களது முன்னாள் கிழக்குப் பிராந்திய தளபதி கருணாவால் இயக்கப்படுகிறது. அது தொடர்பில்...

பதில்: நிதிமோசடி உள்ளிட்ட பல்வேறு ஒழுங்கீனக் குற்றச்சாட்டுகள் அவர் மீது கூறப்பட்டது. மேலும் வயது குறைந்தோரை படையில் சேர்த்தார். கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான தொடர்ச்சியான குற்றச்செயல்களை அவர் மேற்கொண்டார்.




சிறிலங்கா அரச படைகள் அவருக்கு உதவியாக, புகலிடம் அளித்து, ஆதரவளித்து, விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துகிற நாசகார செயற்பாட்டுக்கு உதவியாக இருந்தது. அது மிகவும் ஆபத்தான செயற்பாடாக இருந்தது.

கேள்வி: இந்த தமிழ் துணை இராணுவக் குழுக்கள் உங்களோடு இருந்தவர்கள். உங்களுக்கு எதிராக திரும்பியுள்ளனர். ஆகையால் நீங்கள் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதியாக இல்லையா? தமிழருக்கு எதிராக தமிழர்கள் இப்போது உள்ளனர்?

பதில்: இந்த அமைப்புக்களின் அரசியல் கட்டமைப்புகளை கலைக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்தை நாம் கோரவில்லை. அரசியல் அமைப்புகளாக அவர்கள் இயங்கலாம். ஆனால் அவர்களது இராணுவப் பிரிவுகள் கலைக்கப்பட்டு, ஆயுதங்கள் களையப்பட வேண்டும். ஏனெனில் அதுதான் அமைதி முயற்சிகளுக்கு பாரிய சவாலாக உள்ளது.




கேள்வி: முஸ்லிம் ஜிகாத் குழு இயங்கிவருவதாக நீங்கள் கூறியிருந்தீர்கள். இந்தக் குழு பற்றி நீங்கள் சொல்ல முடியுமா? ஏனெனில் இந்தக் குழு கிழக்குப் பிரதேசத்தில் இல்லை என்று முஸ்லிம்கள் மறுத்து வருகின்றனர்..

பதில்: ஓம். முஸ்லிம் அரசியல் அமைப்புகளின் தலைவர்கள் ஏன் இதை மறுக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். சிறிலங்காவில் முஸ்லிம் பயங்கரவாதக் குழு இயங்குவதானது சர்வதேச சமூகத்தை நிச்சயம் பாரிய அளவில் கவலை கொள்ளச் செய்யும் என்பதாலே அவர்கள் இத்தகைய மறுப்பை வெளியிடுகின்றனர்.

இந்த ஜிகாத் அமைப்புக்கும் பாகிஸ்தானிய இராணுவ புலனாய்வுத்துறைக்கும் உள்ள உறவு தொடர்பான ஆதாரங்களை நாம் வைத்திருக்கிறோம். ஆகையால் அவர்கள் பொதுவாக நிராகரிக்கிறார்கள். ஆனால் எங்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. முஸ்லிம் தலைவர்கள் எங்களைத் தொடர்புகொண்டால் மேலதிக ஆதாரங்களை கையளிப்போம்.

கேள்வி: தற்போதைய சர்வதேசச் சூழலில் ஒரு அரசாங்கமே பாகிஸ்தானுடன் தொடர்புடைய இத்தகைய முஸ்லிம் ஜிகாத் குழு இயங்க அனுமதிப்பது...

பதில்: ஓம். அது ஆபத்தானது. ஆனால் சிறிலங்கா அரசாங்கமானது பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நெருங்கிய உறவு வைத்துள்ளது என்பது எமக்கு வருத்தமளிக்கிறது. பாகிஸ்தானிடமிருந்து இராணுவ உதவி மற்றும் பயிற்சிகளை சிறிலங்கா பெற்றுக்கொண்டு வருகிறது. மேலும் சீனாவுடனும் நெருங்கிய உறவை சிறிலங்கா கொண்டிருக்கிறது.

ஆகையால் இந்த விடயத்தில் பாகிஸ்தானின் தலையீடு குறித்து நாம் பாரிய கவலை கொள்கிறோம். ஜிகாத் குழுவுக்கு பயிற்சியும் உதவிகளும் செய்வதானது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த ஜிகாத் குழுக்கள் பற்றி மேலதிகமாக இந்தியா அறிந்துகொள்ளும் போது இந்தியாவிலும் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்.




கேள்வி: கடும்போக்கு அரச தலைவருடனான உறவு நிலை தொடர்பாக...

பதில்: உறுதிமொழிகளை அளித்துவிட்டு எதையும் செய்யாத மென்மையான போக்கு கொண்டவர்களைவிட கடும்போக்காளர்களுடன் உடன்பாட்டுக்குத் தயாராக இருக்கிறோம். ஆகையால்தான் இந்த சவாலான நிலைமையை எடுத்துக் கொண்டு கடும்போக்காளர்களுடன் பேசி வருகிறோம். இந்தப் பிரச்சனையை அவர்கள் எப்படி கையாள்கிறார் என்று பார்க்கிறோம்.

சிங்களக் கடும்போக்காளர்கள்தான் உண்மையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் தடங்கலாக உள்ளனர் என்ற உண்மையை சர்வதேச சமூகம் உணரவேண்டும்.

கேள்வி: ஆகையால் அரசாங்கத்துக்கு எத்தகைய அழுத்தத்தை சர்வதேச சமூகம் கொடுக்க வேண்டும்?

பதில்: சிறிலங்காவின் அரசியல் அமைப்பு முறை மீதான செல்வாக்கை சர்வதேச சமூகம் செலுத்த வேண்டும். ஏனெனில் சிறிலங்கா அரசாங்கமானது முழுவதுமே வெளிநாட்டு நிதியை நம்பி, உதவி வழங்கும் நாடுகளை நம்பியே உள்ளது.

சர்வதேச சமூகத்தின் உதவி வழங்குகிற நாடுகளின் இணைத் தலைமை நாடுகள் போதுமான அழுத்தத்தை சிறிலங்கா அரசியல் தலைவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இதனால் ஓரளவாவது தமிழ்மக்களுக்கு சாதகமாக நடைபெறலாம். தற்போதைய இறுதி நிலைகளிலாவது இதை சர்வதேச சமூகம் செய்யலாம் என்றார் அன்ரன் பாலசிங்கம்.

நன்றி: ஏபிசி தொலைக்காட்சி

-புதினம்
! ?
'' .. ?
! ?.
Reply


Messages In This Thread
[No subject] - by கந்தப்பு - 03-27-2006, 11:52 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)