03-27-2006, 10:07 PM
<span style='font-size:21pt;line-height:100%'>நான் 2003ம் வருடம் யாழில் இணைந்தேன்.
இதற்குள் பலவந்தமாக தள்ளி விட்ட பொறுப்பு (கண்ணன்)பிரபாவையே சாரும்.
கொலண்டில் வசிக்கும் பிரபாவுக்கும் எனக்குமான உறவு எனது குறும்படமான எச்சில்போர்வைக்கு பிரான்ஸ் கலை பண்பாட்டுக் கழகத்தின் சிறந்த குறும்படத்துக்கான பரிசு கிடைத்ததிலிருந்து ஆரம்பமானது.
அவை பற்றி ஈழமுரசு பத்திரிகையில் வந்த யமுனா இராஜேந்திரனின் கட்டுரைகளும் வழி வகுத்தன.
இதுபற்றி யாழில் நடை பெற்ற விவாதங்களை பிரபா (கண்ணன்) எனக்கு மின் அஞ்சல் வழி அனுப்பி வைத்ததோடு எனது கருத்துகளை எழுதும்படியும் தூண்டினார்.
எழுத முடியாது என தவிர்த்து வந்த என்னை இடை விடாது துன்புறுத்தி எழுதத் தூண்டினார்.
பிரபா மட்டும் அதை செய்யாமல் இருந்திருந்தால்
இன்று உங்களுக்கு என்னையும்
எனக்கு யாழ் நண்பர்களையும் கிடைக்க வாய்ப்பே இருந்திருக்காது.
கணணியில் தமிழில் எழுதவே பரீட்சயமற்ற நான்
தட்டுத் தடுமாறி எழுதத் தலைப்பட்டேன்.
ஏகப்பட்ட வாத - விவாதங்கள்
தலையிடி கொடுத்து தூங்க விடாமல் வைத்த இரவுகள்.........
ஆரம்ப கால போராட்ட விவாதங்கள்
யாழை வெறுக்க வைத்ததுண்டு..............
விட்டு போனதும் உண்டு.
வெறுத்து போக முயன்ற போது போகதே என்று சொன்னவர்களை
இன்று காணவில்லை
ஆனால்
நான் இன்னும் என் உறவுகளோடு..............
சிரிப்பாய் இருக்கிறது.
எதையும் சகிக்கக் கூடிய மனோ நிலையை
டேக் இட் ஈசியாக வாதாடும் தன்மையை
எனக்குத் தந்தது யாழ் என்பதில் மாற்றுக் கருத்து
எனக்குள் இல்லை.
மோகன் - சுரதா - சோழியன் - இளைஞன் - சந்திரவதனா போன்றோருடனான நட்புகள் யாழுக்கு வெளியே தனிப்பட்ட ரீதியில் வளர்ந்தன.
குறும்படங்கள் - நல்ல சினிமா போன்றவை தவிர அரசியலை தொடாத கருத்துகளுக்குள் என்னை புதைத்துக் கொண்டேன்.
என் மனதுக்கு தவறாக பட்டதை சில தருணங்களில்
சுட்டிக் காட்ட முனைந்ததுண்டு.
இருந்தாலும் அடுத்தவர் மனம் புண்படும் வார்த்தைகள்
என்னையும் நோகடிக்கவே செய்கிறது.
சில சமயம் இவற்றை கண்டு கொள்ளாமல் போவதுண்டு.
இதைத் தவிர வேறு வழி?.....................
என்னதான் இருந்தாலும்
இங்கு அனைவருமே என் உறவுகளே!
யாழில் அனைவரும் என் சொந்தங்களாகவே
இருப்பதாய் எனக்குள் ஒரு பெரு மகிழ்ச்சி.
என்னதான் பிரச்சனை வந்தாலும்
என் வீட்டை விட்டு வெளியேற முடியாது.
எனவே யாழ் உறவுகளை பிரிவதென்பதேது!</span>