03-27-2006, 09:12 PM
தமிழ்நெற், சங்கம், தமிழ்ச்சமூகம், தமிழ்கனடியன், புதினம் போன்ற செய்தி ஆய்வுகள் வரும் தளங்களை தவிர வேறு தமிழ்த் தளங்களில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. 2004 மார்கழி ஆழிப்பேரலையின் பின்னர் பலது பட்ட தளங்களிலும் செய்திகள் கருத்துக்கள் தகவல்கள் என்று தேடிய காலத்தில் தான் யாழிலும் பதிவுகளை வாசிக்கத் தொடங்கினன். பின்னர் 6..7 மாதங்கள் சென்றபின்னர் நானும் சில கருத்துக்களை கூறவேண்டும் என்ற தூண்டுதலில் இணைந்து கொண்டேன். ஏற்கனவே வேறு தேவைகளிற்காக பாமினி எழுத்துருவில் எழுதிப்பழகியிருந்ததால் எழுத்துரு தட்டச்சு என்பன பிரச்சனையாக இருக்கவில்லை.

