03-27-2006, 06:11 PM
அனைவருக்கும் வணக்கம்
இங்கு எல்லோரும் தங்கள் தங்கள் யாழ் அறிமுககத்தை பற்றி அழகாக கூறிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு எப்படி அறிமுகமாச்சு...?? எனது தங்கை ஒரு நாள்? கணனியில் இருக்கும் போது விழுந்து விழுந்து சிரித்தாள். அப்போ நான் ஒரு கவிதை புத்தகம் வாசித்து கொண்டு இருந்தன். என்டா இவள் இப்படி சிரிக்கிறாள் என்று நிமிர்ந்து ஏண்டி சிரிக்கிறாய் என்று கேட்டால். அவள் சொன்னாள் யாழ் நகைச்சுவை வாசித்து சிரிக்கிறன் என்று நான் கேட்டன் அப்படி என்னதான் அதுல எழுதி இருக்கு என்று அப்ப தான் அவள் சொன்னாள்? சின்னப்புவின் நகைச்சுவை , அத்துடன் கள உறுப்பினர்கள் நகைச்சுவையான கருத்தாடல்கள் , செல்லச்சண்டைகள், புதினங்கள் எல்லாம் இருக்கு பிறகு ஆறுதலாக போய் பார் என்று.
அப்போ எனக்கு கணனியில் இருந்து வாசிக்க எல்லாம் பொறுமை இல்லை பிடிக்கவும் மாட்டுது. எனது பொழுது போக்கு புத்தகங்கள் வாசிப்பது எப்பாலும் இருந்துட்டு சட்? பண்ணுவது. சட்டும் அவ்வளவாக பிடிக்காது. சரி ஒரு நாள் ரொம்ப போர் அடிச்சுது என்று போட்டு தங்கை சொன்ன தளத்துக்கு போய் பார்ப்பம் என்று வந்தன். கவிதைகள் கட்டுரைகள் வாசிக்க ரொம்ப சுவாரிசியமாக இருந்தது. அப்புறம் தொடர்ந்து ஒரு வருடம் தொடர்ந்து வாசிச்சன். போன சமருக்கு 2 பாடம் தன் எடுத்தன் அப்ப நிறைய நேரமும் கிடைத்தது நாம் ஏன் இணையக கூடாது என்ற ஒரு ஆசையும் வந்தது. சரி இணைந்துதான் பார்ப்பமே என்று களத்துல குதிச்சுட்டன்.
களத்துல குதிச்சு வேற யாரோ அறிமுகம் என்றதில் நான் தமிங்கிலத்தில் எழுதினன். அப்ப அனிதா? எப்படி தமிழில் டைப் பண்ணுவது என்று எனக்கு மடல் போட்டு சொன்னார். அவர் தந்ததை வாசித்து விட்டு நானும் புதுசாக ஒரு பக்கதில் எல்லோருக்கும் வணக்கம் என்று தட்டச்சு செய்தன், அப்ப இளைஞன் தான் என்னை முதல் முதல் வரவேற்றார். அப்புறம் கவிதன் அப்புறம் இப்ப வினித் முந்தி வீணாய்போனவன் என்ற பெயரில் இருந்தார். அவரும் என்னை வாம்மா மின்னல் என்று வரவேற்று லொள்ளு பண்ணினார். அப்புறம் நிதர்சன் ,டண் பெந்து மழலை வரவேற்று நீங்கள் யாரின் இரசிகை என்று கேட்டார். நான் உங்கள் இரசிகை என்றவிடன் ஆகா எனக்கும் ஒரு இரசிகையா என்றவர்தான் ஆளை இப்போ காணக்கிடைக்குறதில்லை. அப்புறம் வெண்ணிலா சின்னப்பு அருவி தல மாதன் சுண்டல் மயூரன் என்னை வரவேற்றனர். அவர்களுக்கு எனது நன்றிகள்.
இப்படி ஆரம்பித்த எனது வருகை என்னை யாழுக்கு வாசகி ஆக்கிவிட்டது.அதுமட்டுமல்லாது எனக்கு அன்பான உறவுகளையும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தையும் தந்திருக்கிறது. எல்லா உறவுகளுக்கும் , மட்டுநிறுத்தினருக்கும், மோகனுக்கும் நன்றிகள். யாழ்களம் மேலும் சிறப்புடன் ஒரு ஆலமரம் போல் தனது சேவையை தொடர இந்த இரசிகையின் வாழ்த்துக்கள்
நட்புடன்
இரசிகை

<b> .. .. !!</b>