03-27-2006, 11:48 AM
Luckyluke Wrote:புலிகளின் பொறுமையை தவறாக உபயோகிக்க இலங்கை அரசு முயன்றால் உலகம் அவர்களை காறி உமிழும்.....
இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் விரைவில் தீர்வு காண்பார்கள் என்பதே என் கணிப்பு....
இலங்கை அரசும் போரை விரும்பாது... கடந்த 25 ஆண்டுகளில் சரிந்த அதன் பொருளாதாரத்தை நிமிர்த்தவே இன்னும் 25 ஆண்டுகள் பிடிக்கும்.... இன்னமும் போரைத் தொடர நினைத்தால் இலங்கை ஒரு சுடுகாடாக மாறும்.... இன்னொரு சோமாலியாவாக மாறினாலும் மாறும்.... இது இலங்கையை ஆள்வோருக்கு தெரியாதா என்ன?
இலங்கையில் சிங்களத்தரப்பை பீடித்திருப்பது பேரினவாதம் என்கின்ற நோய்,இது அவர்களை சிந்திக்க விடாமால் செய்து வருகிறது.இவர்களால் நீங்கள் மேலே கூறியவாறு சிந்திக்க முடிந்தால் இந்தப் பிரச்சினை இவ்வளவு உயிர்களைக் காவு கொண்டிருக்க வேண்டியதில்லை.இன்றய சிங்கள, மற்றும் ஆங்கில பதிரிகைகளை வாசித்தீர்களே அனால், அல்லது மகிந்த அரசாங்கத்தை இயக்கும் ஜேவிபி மற்றும் ஜாதிக கெல உறுமயவின் கூற்றுக்களை வாசித்தீர்களே அனால் இது நன்றாக விளங்கும்.சர்வதேசத்திற்கும் இது இப்போது விளங்கி வருகிறது.சென்ற முறை பேச்சுவார்த்தயில் இணக்கம் காணப்பட்ட விடயங்களுக்கு முற்றிலும் மாறாகவே இலங்கை அரசாங்கம் நடந்து வருகிறது.இனி இதற்கு மேலும் பேச்சுவார்த்தைகளில் புலிகள் பங்கு பற்றுவதனால் என்ன பலன் என்பதை சர்வதேசம் தான் சொல்ல வேண்டும்?

