03-26-2006, 07:30 PM
<span style='color:blue'>அங்கம்.2
<b>காலநிலை</b>
<img src='http://en.venere.com/img/mappe/ch/svizzera_en.gif' border='0' alt='user posted image'>
சுவிஸ் நாட்டைச் சுற்றியிருக்கும் அனைத்து நாடுகளின் கால நிலையை உள் வாங்கியதான அட்லான்டிக் வடக்கு கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளின் தாக்கத்தை உட்படுத்திய நிலையிலான 4 வித்தியாசமான கால நிலை எப்போதுமே இருக்கும். இது தவிர மலைப்பிரேதங்கள் நீர்தடாகங்கள் மற்றும் ரைன் ஆறு ஆகியவற்றின் மாறுதல்களாலான பூகோள மாற்றமும் வெவ்வேறு கால நிலை தாக்கங்களை உருவாக்குகிறது.
சுற்றியிருக்கும் ஐரோப்பிய நாடுகளின் மழை வீழ்ச்சுக்கு ஒப்பான மழை சுவிஸ் நாட்டில் கிடைப்பது அந் நாட்டின் வளத்துக்கு மேலும் வளம் சேர்க்கிறது. இருப்பினும் ஒவ்வொரு பிரதேசத்துக்கும் கிடைக்கும் மழை நாட்டின் பூகோள மாற்றத்தை உள்ளடக்கி மாறுபடுகிறது.
இவை இப்படி இருந்த போதிலும் வருடாந்த மழை 100 செ.மீட்டராகவும்
வெப்பம் 8 முதல் 10 செல்சியசாகவும் கணிப்பிடப்பட்டுள்ளது.
<img src='http://img97.imageshack.us/img97/9426/weather1qo.jpg' border='0' alt='user posted image'>
இதன் காலநிலை மாற்றங்கள் கூட காற்றின் அமுக்கத்தினதும் சூரிய வெப்பத்தினதும் மாற்றங்களுக்கமைய மாறுபடுவதை அவதானிக்க முடியும்.
<b>க்ளசியர் எனப்படும்(Glacier) பனிக்கட்டி ஆறுகள்</b>
<img src='http://www.physics.uiowa.edu/~cnewsom/travels/Switzerland/Lauterbrunnen_Aletsch_Glacier_TN.jpg' border='0' alt='user posted image'>
சுவிஸ் பனிக்கட்டி ஆறுகளை சுவிஸ் அல்ப்ஸ் மலைப்பகுதிகளில் காண முடிகிறது.
சுவிஸில் காணப்படும் முக்கிய பனிக்கட்டி ஆறுகள் சில இதோ:-
Alestsch Glacier - ( K.A. - 117.6 km2)
Gorner Glacier - ( K.A. - 63.7 km2)
Fiescher Glacier - ( K.A. - 35.5 km2)
Interior Aare Glacier - ( K.A. - 35.5 km2)
Intreior Grine Wall Glacier - ( K.A. - 27.1 km2)
தற்போது தெரியும் பனிக்கட்டி ஆறுகள் முன்னய காலத்தின் சிறு பகுதியாகவே இருக்கிறது.
ஆரம்ப காலங்களில் முழு நாடுமே பனிக்கட்டி ஆறுகளால் மூழ்கியிருந்ததாய் கூறுகிறார்கள்.
கடந்த 100 வருடங்களில் இவற்றை பாது காப்பதில் அரசு அக்கறை காட்டி வந்தாலும் பல பனிக்கட்டி ஆறுகள் கண்டு கொள்ளாமலேயே விடப்பட்டன. இருப்பினும் பல பனிக்கட்டி ஆறுகளிலிருந்து எடுக்கப்படும் குளிர் நீர் மின் உற்பத்திக்காகவும் ஏனைய நீர் நீலைகளின் மட்டத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் பாவிக்கபப்படுவது பாராட்டக் கூடிய ஒரு அங்கமாகவே உள்ளது.
<img src='http://www.physics.uiowa.edu/~cnewsom/travels/Switzerland/Lauterbrunnen_valley_1.jpg' border='0' alt='user posted image'>
தொடரும்..............</span>

