Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலண்டனில் கவிச் சோலைக் கலையரங்கம்.
#6
தணலை மூட்டிய தமிழ்க் கவிவாணன்

புதுவையென்னும் புகழுக்குரியவன்
புனிதவேள்விக் கவிகளியற்றுவோன்
எதுகை மோனை இலக்கணச் சாத்திரம்
எதிலுங் கட்டுப் படாதவன் ஆயினும்
வதுவை செய்து கவிமகள் தன்னையே
வாழ்வு முற்றும் அவட்கென வாழுவோன்
மதுவைத் தன்றன் தமிழிற் கலந்தனன்
மாந்தி வீழந்து மயங்கினர் ஆயிரம்

அகவை நாற்பது ஆனது அவன் கவிக்(கு)
ஆயினும் பதினாறின் இளமையாள்
தகைமையால் தமிழ் ஈழமறவரின்
தழலெரிந்திடு நெஞ்சினை மூட்டினாள்
பகைமை தோற்றது பாயும் புலிகளின்
படை நடந்தது பாரதம் சோர்ந்தது
இகமெலாம் தமிழ் வீரம் தெரிந்தது
ஈழதேசம் உலகில் எழுந்தது

நீரிலே நெருப்பேற்றிடும் எங்களின்
நேரிலாத் தலைவன் பிரபாகரன்
போரிலேற்றிய வெற்றிச் சுடர்களைப்
பொன்னெழுத்திற் புதுவை பொறித்ததால்
தேரிலேறிய தீந்தமிழாழவள்
திலகமாகத் திகழ அவன் கவி
பாரிலே தமிழீழப் பரணியைப்
பாட வேண்டியதில்லை யென்றானது

காற்றையே கயிறாக முறுக்கியும்
கனலை நெஞ்சில் அடக்கியும் தங்களின்
ஆற்றல் யாவும் விடுதலைக்கேயெனும்
அணி வகுத்த புலிகளின் நெஞ்சிலே
ஏற்றி ஏற்றி உணர்வினை ஊட்டிய
இரத்தினத்துரை எம் கவி வாணனைப்
போற்ற நாவிற் புகழ்மொழி ஆயிரம்
பொய்யிலாதவர் நெஞ்சிலுதிக்குமாம்

வாழ்வு வேறு கவிக்களம் வேறெனும்
வகை பிரித்த நடிப்புச் சுதேசியாய்
தாழ்பிடித்து உயர்ந்திடத் தன்னிலை
சாகஸங்கள் நடாத்த அறிந்திலான்
கூழ் குடித்து அரைவயிற்றோடுதன்
குடும்ப மோடினும் ஈழவிடுதலை
நாளை நோக்கி நலிந்திடும் பெற்றியான்
நமது தேசக் கவியவன் வாழ்கவே

புதுவைக் கவி எம் ரத்தினமே புகழ்மிக்குயர் நட்சத்திரமே
எதுகைக்கொரு வெண் நித்திலமே எழுசப்த சுரத்தின் நிலமே

வெல்லற்கரிய தமிழினிமை மேவக் கவியால் தளையிடையே
அல்லல் படுமெம் நிலையுணர்த்தும் சொலலேருழவா சீராளா

எழுத்தாம் அம்பை மழையாக்கி எறியும் வில்லை நாவாக்கி
ஒளித் து}றல்களால் மானுடத்தின் உயர்விற் குறிவைத்துரமூட்டி

புழுத்தே வழியும் சமுதாயப் பொல்லா நாற்றச் சிணிபோக்கி
முழுத்தாரணியும் கழுவுண்ணும் முழுக்காட்டுக நின் கவியாலே
S. K. RAJAH
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 02-26-2006, 11:46 PM
[No subject] - by ukraj - 03-23-2006, 11:37 PM
[No subject] - by Selvamuthu - 03-24-2006, 12:05 AM
[No subject] - by RaMa - 03-26-2006, 05:33 AM
[No subject] - by karu - 03-26-2006, 10:29 AM
[No subject] - by Selvamuthu - 03-26-2006, 11:36 AM
[No subject] - by ஈழமகன் - 03-27-2006, 12:58 AM
[No subject] - by ஈழமகன் - 03-27-2006, 12:58 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)