Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புத்தளம் கடல் பகுதியில் டோராப் படகு வெடித்துச் சிதறியது!
#7
<b>கடற்பிட்டி கடலில் டோறா வெடித்துச் சிதறியது - எட்டு கடற்படையினரைக் காணவில்லை </b>

புத்தளம் மாவட்டம் கற்பிட்டிக் கடற்பரப்பில் சிறீலங்கா கடற் படைக்குச் சொந்தமான டோறா பீரங்கிப் படகு ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது. இந்தப் படகில் பயணித்த எட்டுக் கடற் படையினர் காணாமல் போயு ள்ளதாக சிறீலங்கா கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குதிரைமலைக் கடற்பரப்பில் இன்று பிற்பகல் 3 மணிக்கு கடல் ரோந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறீலங்கா கடற்படையினரின் படகொன்று வெடித்துச் சேதமடைந்ததுடன் இதில் 19 கடற்படையினர் படகில் இருந்ததாகவும் 11 கடற்படையினர் உயிருடன் மீட்க்கப்பட்டதாகவும் ஏனைய 8 கடற்படையினரது நிலை இதுவரை தெரியவில்லை.

கரையில் இருந்து பல கடல்மைல் து}ரத்திற்கு அப்பால் இச்சம்பவம் நடைபெற்றதாகவும் மன்னாரில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து சிறீலங்கா படைத்தரப்பு தகவல் வெளியிடுகையில், சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை கடற்படைப் படகு நெருங்கிச் சென்றபோது, ஆறுபேரைக் கொண்ட அந்தப் படகு வெடித்துச் சிதறியதாகவும், இதனால் கடற்படையின் டோறா படகு பாரிய சேதமடைந்துள்ளது. இதில் பயணித்த 11 கடற்படையினர் மீட்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வழமை போன்று விடுதலைப் புலிகளே இத்தாக்குதலை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடற்படையின் இந்த குற்றச்சாட்டை விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர்.

செய்தி: சங்கதி
[size=14] ' '
Reply


Messages In This Thread
[No subject] - by ஜெயதேவன் - 03-25-2006, 01:09 PM
[No subject] - by தூயவன் - 03-25-2006, 02:41 PM
[No subject] - by Vaanampaadi - 03-25-2006, 04:55 PM
[No subject] - by மின்னல் - 03-25-2006, 05:37 PM
[No subject] - by AJeevan - 03-25-2006, 10:08 PM
[No subject] - by தூயவன் - 03-26-2006, 04:03 AM
[No subject] - by kurukaalapoovan - 04-03-2006, 04:45 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)