03-25-2006, 04:02 PM
அனைவருக்கும் வணக்கம் இங்கு பலரும் தங்கள் யாழ் அறிமுககத்தை பற்றி கூறி கொண்டிருந்ததை தற்சமமயம் இங்கு வந்தபோது பார்த்தேன் நான் வசிக்கும் நகரத்தில் வேறு தமிழர்கள் இல்லை அதனால் எனக்கு யாருடனாவது தமிழில் உரையாட எங்கள் செய்திகள் அறிந்து கொள்ள ஆவல் அதைவிட எனக்கு முன்பு தமிழ் வானொலிகள் கேட்கின்ற வசதியும் இல்லாத காரணத்தால் ஒரு கணணியைவாங்கி அதில் தமிழ் தளங்களை தேடி படித்துவருவேன் தமிழில் தமிழருடன் உரையாடலாம் எண்று சில அரட்டை அறைகளுக்கு போனால் அங்கு நான் யார் ஆணா பெண்ணா? வயது என்ன என்கிற ஆள்பிடிப்பு வேலைகளே அதிகம் அதைவிட ஆபாசபேச்சுகள் வேறு வெறுத்து போய் ஒருமுறை தேடலில் உருப்படியா கருத்தாட ஒரு தளம் இல்லையா எண்று தேடியபோதுதான் யாழ்களம் கண்ணில் பட்டது அதல் நான் உறுப்பினராக ; பதிந்தாலும் ஆரம்பத்தில் தமிழில் எழுதும் சிரமத்தால் அதிகம் எழுதுவதில்லை பின்னர் காலப்போக்கில் தமிழில் எழுதும் முறையை பழகி கொண்ட நான் அங்கு எழுத தொடங்கியபோது பாடசாலை காலங்களிலும் பின்னரும் நான் நிறைய கதை கவிதை என்றும் பின்னரும் சில பத்திரிகைகளிற்கு எழுதியும் இருக்கிறேன் ஆனால் புலம்பெயர் மண்ணின் வேலைபழு மற்றும் காரணங்களால் பலவருடங்கள் எதுவுமே எங்குமே எழுதாமல் இருந்த எனக்கு மீண்டும் ஏதாவது எழுத வேண்டும் என்கிற எண்ணத்தை தந்தது யாழ் களம்தான் அதில் உறுப்பினர்களாக இருந்த சண்முகியக்கா சோழியன் அண்ணா தமிழினி குருவி அயீவன் போன்றவர்கள் தந்த உற்சாகத்தால் பல கதைகள் கவிதை கட்டுரை என்று எழுதினேன் பின்னர் பலர் வந்து தொடர்கதைகள் கவிதை என்று சிறப்பாக எழுத தொடங்க எனது நேரமின்மையாலும் நான் தொடர்ந்து எழுத முடியாமல் இடைக்கிடை வந்து படித்து விட்டு போவேன் ஆனாலும் இன்றும் யாழின் வாசகன்தான் விரைவில் சில கதைகளுடன் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். யாழ் இன்னும் சிறப்பாக தனது சேவையை தொடர வாழ்த்துகள்
; ;

