03-25-2006, 03:03 PM
கள உறவுகளே கடந்த கால மாவீரர் உரையில் தலைவர் மிகவும் தெழிவாக சொல்லியிருப்பது யாதினில் அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலின் பின் நாமும் எமது போரரட்ட பாதையை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.நாம் 20 வருடங்களாக போரிட்டு சர்வதேசத்தில் சம்பாதித்ததை விட கடந்த 4 ஆண்டுகளாக இழப்புகளுக்கிடையிலும் சம்பாதித்தது எவ்வளவோ மேல்.இன்று கமாசைப் பாருங்கள் தேர்தலில் வென்றிருந்தும் சர்வதேசத்தின் முன்னால் அவர்களால் எழுந்து நிற்க முடியவில்லை.இந்த நிலை மலரப் போகும் தமிழீழத்திற்கும் வரக்கூடாது.இப்போது நடக்கும் பேச்சு வார்த்தை வெறுமனே தமிழ் தேசியத்திற்கும் அரசுக்குமான பேச்சு வார்த்தையல்ல.நோர்வே நடுவில் நின்றாலும் பின் புலமாக வேறு நாடுகளும் உள்ளன.உதாரணமாக சென்ற பேச்சுவார்த்தையின் போது முதல் நாளே பேச்சு வார்த்தைகள் முறிவடைய இருந்ததாகவும் நோர்வே அவசர அவசரமாக அமெரிக்காவுடன் தொடர்பு கொண்டு பேசி அமெரிக்கா கொடுத்த அழுத்தம் காரணமாகவே இரண்டாம் நாள் பேச்சு வார்த்தை சுமுகமாக நடந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.எனவே கடந்த(2005)மாவீரர் தின உரையில் எல்லாவற்றையும் அடக்கியுள்ளார்.ஒப்பந்தத்தில் 14 நாள் காலக் கெடு என்று உள்ளது.அந்த காலக் கெடுவை யார் விதிப்பது என்பதும் பெரும் பிரச்சனையாக அமையலாம்.பெறுத்திருந்து பார்ப்போம் அதுவரை எமது தேசியத்தைப் பலப்படுத்துவோம்.
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS

