03-25-2006, 01:48 PM
எமது போராட்டத்தினை உயர்ந்த ராஜதந்திரத்தோடும், நவீன படைத்தொழினுட்பத்துடனும் வளர்த்தெடுத்திருக்கின்றோம் - தமிழினி
- பாண்டியன் - ளுயவரசனயலஇ 25 ஆயசஉh 2006 03:30
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் சிங்கள தேசம் பல் வேறு பட்ட சதி முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது என்று தமிழீழ அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் தமிழினி தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை(22.03.06) முல்லைத்தீவு முள்ளியவளையில் நடைபெற்ற புலிகளின் குரலின் முத்தமிழ்க் கலையரங்க நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
தற்போதைய ஸ்ரீ லங்கா அரசாங்கத்தின் போக்குகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை வெற்றிக்கு இட்டுச் செல்லும.; நாங்கள் விடுதலைப் போராட்டத்தை மிகவும் உயர்ந்த, இராஜ தந்திரத்தோடும், நவீன படைத் தொழில் நுட்பத்தோடும் வளர்த்தெடுத்திருக்கின்றோம். எமது தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் எமது விடுதலைப் போராட்டத்தை உயர்ந்த ஒரு நிலைக்குக் கொண்டு வந்துள்ளார் என்று தெரிவித்த அவர்,
தென்னிலங்கையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான ஒவ்வொரு நடவடிக்கையும், கருத்துகளும் எதிரிகள் எதிர்பார்த்ததைப் போல் இல்லாமல், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு சாதகமான பலா பலன்களைக் கொடுக்கும். அது தமிழீழ விடுதலைப் புலிகளின் வெற்றி இலக்கை நோக்கி போராட்டத்தை மேலும் வேகமாக நகர்த்திக் கொண்டு செல்லும் என்பது தான் உண்மை. ஏனென்றால் போராட்ட வரலாற்றில் தமிழர்களுக்கு அவலத்தைத் தந்தவனுக்கு அவலத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளோம். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பொறிவைத்து பொறிக்குள் விழுத்த நினைத்த அரசியல்; சக்திகளுக்கும் சர்வதேச சக்திகளுக்கும் எதிராக அந்தப் பொறியை திருப்பி வைத்திருக்கின்றோம் எனத் தெரிவித்த அவர், இந்தச் சமாதானச் சூழல் மூலமாக தமிழ் மக்களை விடுதலைப் போராட்டத்தில் இருந்து அன்னியப் படுத்தி விடலாம் என்றும் தமிழ் மக்களின் போராட்ட மனநிலையை நீர்த்துப் போகச் செய்யலாம் என்றும், இதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பலம் குன்றிய விடுதலைப் போராட்டமாக மாற்றி அமைக்கலாம் என்ற நோக்கத்தோடு ஸ்ரீலங்கா அரசால் இச் சமாதானச் சூழல் நீட்டப்பட்டுக் கொண்டு செல்கிறது.
ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வைக்கப்பட்ட இச் சமாதானப் பொறியை மிகவும் இலாவகமாகப் பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மையை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்கின்ற ஒரு அரங்காக சமாதானத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்துகின்றனர் என்றும் தமிழினி மேலும் தெரிவித்தார்.
http://www.sankathi.net/