Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழில் சிங்கள இராணுவம் வெறியாட்டம்! 8 மாணவிகள் உட்பட 15 மாணவ
#3
<b>அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் கொடி ஏற்றுவது மீறலாகும் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் </b>
உயர்தொழில் நுட்பக் கல்லூரி வளாகத் தில் நாம் பிரசன்னமாகி இருந்ததனால் அங்கு ஏற்பட இருந்த பெரும் பதற்ற நிலைமையை எம்மால் தவிர்க்க முடிந்தது.''
இவ்வாறு தெரிவித்தார் இலங்கை கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஹெலன் கொலஸ்தோதிர்.
யாழ். உயர்தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக பி.பி.ஸி. தமிழோசைக்கு நேற்றிரவு வழங்கிய செவ்வி யிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கூறிய தாவது:
யாழ்ப்பாணத்தில் ஒரு கல்வி வளாகத் தில் மாணவர்கள் கொடியை ஏற்றுவது இது மூன்றாவது நாளாகும்.
அப்போது நாம் அங்கு இருந்தோம். இது ஒரு போர்நிறுத்த மீறலாகும். அதாவது ஒரு போர்நிறுத்த உடன்படிக்கையின்படி<< புலிகளின் கொடியை அரச கட்டுப்பாட்டுப்பகுதியில் ஏற்று வது தடுக்கப்பட்டுள்ளது என அவர்களுக்கு நாம் கூற முயற்சித்தோம். அதுவும் ஒரு கல்விக் கூடத்தில்<< இவ்வாறு செய்யவேண்டாம் எனக் கூறினோம். ஆனால்< அதனையும் மீறி அங்கு மாணவர்கள் கொடியை ஏற்றினர். அதனை அடுத்து அங்கு இராணுவம் உள்ளே நுழைந் தது.அந்தவேளை நாம் அங்கு இருந்ததால் நிலைமையைத் தணிக்க முடிந்தது.
அங்கு கடுமையான மோதல் இல்லை. மாணவர்கள் சில படங்களைப் பிடித்திருந்த னர். நாம் அதனைக் கைப்பற்றி யிருக்கின்றோம்.
நாம் அங்கு நிலைமை தீவிரமடைவதைத் தடுத்து விட்டோம். இனி இவ்வாறான பிரச் சினை அங்கு நடக்காது என நம்புகின்றோம். இது மிகவும் ஒரு கஷ்ரமானவிடயம். இவ் வாறு முன்பும் நடந்துள்ளது.
அங்கு இராணுவம் எப்படி நடந்தது என வும் மாணவர்கள் எப்படி செயற்பட முயன் றார்கள் எனவும் எமக்குத் தெரியும். மாண வர்கள் கொடியை ஒரு மணிநேரம் ஏற்றி வைத்திருக்க முயற்சித்தார்கள்.
எப்படியிருந்த போதும் அரச கட்டுப்பாட் டுப்பகுதியில் இப்படியான கொடியை ஏற்று வது நிச்சயமாகப் பிரச்சினையை உருவாக் கவே செய்யும்.
அங்குவாழும் மக்கள் தமிழ் பேசுபவர் கள். இராணுவத்தினர் சிங்களவர்கள். ஆகவே இவ்வாறான ஒரு சூழலில் நிலைமை எவ்வா றாயினும் மோசமடையவே செய்யும். ஆகவே இவ்வாறான பதற்ற நிலைக்கு இடமளிக்கக் கூடாது என்றார்.
இணைப்பு : kugan
Saturday, 25 Mar 2006 USA

http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&


<b>அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் புலிகளின் கொடியை ஏற்றிய மாணவர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் மோதல்</b>



இலங்கையின் வடக்கே யாழ்பாணத்தில் உள்ள யாழ் தொழில் நுட்பக் கல்லூரியில் விடுதலைப் புலிகளின் கொடியை ஏற்றிய மாணவர்களுக்கும் – பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் நிகழ்ந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

இந்த சம்பவத்தில் மாணவர்கள் சிலர் காயமடைந்ததாக மாணவர்கள் தரப்பில் கூறுப்படுகிறது.

அரச கட்டுப்பாட்டில் உள்ள, ஒரு பொது இடமான இந்த கல்லூரியில் இப்படியாக விடுதலைப்புலிகளின் கொடி ஏற்றப்பட்டமை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் ஒரு செயல் என்று கூறும் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் சார்பில் பேசவல்ல ஹெலன் ஒலவ்தோதீர் அவர்கள், தமது கண்காணிப்பாளர்கள் அப்படி கொடியை ஏற்றவேண்டாம் என்று கேட்டபோதிலும், மாணவர்கள் கொடியை ஏற்றினார்கள் என்று கூறுகிறார்.

இப்படியான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் சம்பவங்கள் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஆகவே இப்படியான சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்ளப்பட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

BBC Tamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Sujeenthan - 03-24-2006, 04:59 PM
[No subject] - by Vaanampaadi - 03-25-2006, 11:16 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)