03-25-2006, 01:31 AM
ம். நான் யாழ் இணையத்தை அறிந்துகொண்டது 1999 ஆம் ஆண்டில்தான். யாழ் இணையத்துக்கு வந்த பாதை சுவையானது. இணைய இணைப்பு பெற்றுக்கொண்டது 1997 அல்லது 98 ஆக இருக்கவேண்டும். அப்போதெல்லாம் தமிழ் இணையத்தளங்கள் மிக மிக குறைவாக இருந்தன. இணையப் பக்கங்களை உருவாக்குவது என்பது அப்போது மிகச் சிரமமான வேலையாகவும், செலவான வேலையாகவும் இருந்தது. அதிலும் தமிழில் இணையத்தளம் உருவாக்குவது என்பது சிக்கலான விடயமாகவே பார்க்கப்பட்டது. தமிழில் எழுதிக் கருத்து பரிமாறக் கூடிய இடங்கள் இல்லாமல் அல்லது ஒரு சிலவே இருந்தன. நான் இணைய இணைப்பு பெற்றுக்கொண்ட காலம் - அதாவது எனது அப்போதைய வயது சிந்தனை வளர்ச்சியையும், மாற்றங்களையும், தேடல்களையும் கொண்டதாக இருந்தது. சில கருத்துத் தளங்களில் தேடல் தொடங்கியிருந்த காலமாகவும், தீவிரமாக இருந்த காலமாகவும் அந்தக் காலகட்டம் இருந்தது. குறிப்பாக தமிழ், ஈழம், கடவுள் போன்ற விடயங்களைக் குறிப்பிடலாம். அப்படியான சந்தர்ப்பத்தில் இணையத்தில் "தமிழர்களோடு தமிழில்" உரையாடக்கூடிய தளங்களை நான் தேடினேன். அரட்டை அறைகள் பல இருந்த போதும், எதுவும் எனது தேடலுக்கு சரியானதாகப் படவில்லை.
அந்த சந்தர்ப்பத்தில் "Chennai Online" இணையத்தளம் "ஒரு தேடற்பொறி" மூலமாக அறிமுகமானது. அங்கு "தமிழில் எழுதி" உரையாடக்கூடிய வசதி செய்திருந்தார்கள். தமிழில் இலகுவாக எழுதி உரையாடக்கூடியதாக இருந்த "அரட்டை அறையாக" அது இருந்தது. என்னை அது கவர்ந்திருந்தது. கூடுதலாக இந்தியத் தமிழர்கள் தான் அங்கு வந்தார்கள். ஒரு சில புலம்பெயர்ந்த எம்மவரும் அங்கு வந்தார்கள். அங்கு கடவுள், மதம், தமிழ், தமிழீழம் போன்ற விடயங்களில் எனது கருத்துக்களை வெளிப்படுத்தக்கூடியதாகவும், விவாதிக்கக்கூடியதாகவும் இருந்தது. பலநேரங்களில் தீவிரமாக முரண்பட்டிருக்கிறோம். (தமிழில் எழுதுகிற வசதி இருந்த போதும் பலர் ஆங்கிலத்திலேயே எழுதினார்கள்.). இப்படியான சந்தர்ப்பத்தில் இந்திய நண்பி ஒருவர் அங்கு அறிமுகமானார்.
அவர் யாகூ மெசெஞ்சரையும், யாகூ அரட்டை அறையையும் அறிமுகப்படுத்தி வைத்தார். யாகூ அரட்டை அறையில் நிறைய அனுபவங்கள் உண்டு. அவற்றை விரிவான பதிவாகவே இடவேண்டும். யாகூ அரட்டை அறையில் தமிழில் ஒலிவடிவில் உரையாடும் வசதி பயன்படக்கூடிய விடயமாக இருந்தது. ஆர்வமுள்ள நண்பர்கள் சேர்ந்து விவாதங்களை செய்தோம். கவிதைகள், பாடல்கள் என பகிர்ந்துகொண்டோம். அப்படி அங்கு அறிமுகமான நண்பர்களில் ஒருவர் கனடாவில் வசிக்கிற இளைஞர்.
அவர் எனது கவிதைகளையும், எண்ணவெளிப்பாடுகளையும் கண்டுவிட்டு "யாழ் இணையம் உமக்கு பயனுள்ளதாக இருக்கும். அங்கு கவிதைகளால் மோதல்கள் எல்லாம் செய்கிறார்கள். நல்லா இருக்குது" என்றார். சரி என்றுவிட்டு யாழ் இணையம் வந்தேன். மேலோட்டமாகப் பார்த்துவிட்டு போய்விட்டேன். பிறகு இன்னொரு தடவை வரும் போது யாழ் இணையம் நிறுத்தப்பட்டிருந்தது. பிறகு சில நாட்கள் கழித்து வந்து வாசித்தேன். ஏதோ ஒரு தலைப்பில் கருத்து எழுதவேண்டி இருந்தது. சரியென்று "இளைஞன்" என்று பதிந்து, உள்நுழைந்து கருத்தை எழுதினேன். எழுதிய கருத்தின் கீழ் "புதியதோர் உலகம் செய்வோம் இளைஞன் சஞ்சீவ்காந்த்" என்று இணைத்திருந்தேன் (என நினைக்கிறேன்). அந்தப் பெயரைப் பார்த்துவிட்டு சந்திரவதனா அக்கா அடையாளம் கண்டுகொண்டார். பிறகு யாழில் "வெளியில் ஊடகங்கள் ஊடாக" அறிந்த உறவுகள் பலரை சந்திக்க முடிந்தது. நளாயினி அக்கா, சாந்தி அக்கா, சந்திரவதனா அக்கா, மூனா அண்ணா, இராஜன் முருகவேல் அண்ணா, நாச்சிமார் கோயிலடி இராஜன் அண்ணா, அம்பலத்தார் என்று பலரை சந்திக்க முடிந்தது. மகிழ்ச்சியாக இருந்தது. பலரோடு கருத்து பரிமாற்றங்களை செய்துகொள்ள முடிந்தது. கவிதைகளை இணைத்து கருத்துப் பெறமுடிந்தது. எனது எண்ணங்களை வெளிப்படுத்த முடிந்தது. பிறகு ஒரு கட்டத்தில் யாழ் அரட்டை அறையும் தமிழில் எழுதி உரையாடக்கூடிய வசதியைக் கொண்டிருந்தது. ஒரு குறிப்பிட்ட காலம் யாழ் கள உறுப்பினர்கள் - மோகன் அண்ணா உட்பட - சிலர் மாலை வேளையில் ஒவ்வொருநாளும் அரட்டை அறையில் சந்தித்தோம். நட்போடு பல விடயங்கள் பேசினோம்.
சமகாலத்தில் நான் ஒரு இணையப்பக்கம் செய்து வைத்திருந்தேன். அதை இன்னும் விரிவாக செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. யாழைக் கண்டதும் அந்த எண்ணத்தை விட்டுவிட்டேன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
யாழ் முற்றம் என்று இணைய சஞ்சிகை ஒன்றை மாதமொரு முறை என மோகன் அண்ணா செய்தார். களஉறவுகள் உட்பட வேறு பலரின் ஆக்கங்களும் அங்கு இடம்பெற்றது.
இன்னொருவரை முக்கியமாகக் குறிப்பிடவேண்டும். அவர் சுரதா அண்ணா. ஆரம்பகாலங்களில் களத்தில் எம்மோடு கருத்தாடியவர். தமிழில் எழுதுவதற்கான செயலிகளை செய்தவர்.
யாழ் இணையத்தின் மூலம் பலவிடயங்களை கற்றிருக்கிறேன். அறிந்திருக்கிறேன். இணையத்தொழில்நுட்பம் பற்றிய பலவிடயங்களை ஆரம்பகாலங்களில் பரீட்சித்துப் பார்ப்பதற்கு மோகன் அண்ணா யாழ் இணையம் ஊடாக நிறையவே துணைபுரிந்திருக்கிறார். யாழ் இணையத்தில் இணைந்தபோது அவருடன் உண்டான நட்பு இன்னும் தொடர்கிறது...
இவற்றையெல்லாம் இவ்வளவு எழுதுவற்கு காரணம்: எதனால் யாழ் எனக்கு அறிமுகமானது, ஏன் நான் யாழுக்கு வந்தேன், ஏன் யாழில் இணைந்தேன், ஏன் இன்னும் யாழில் தொடர்கிறேன் என்பதற்கான காரணத்தைச் சொல்லவே. அந்தக் காரணம் இன்று யாழில் இணைந்திருக்கிற பலருக்கும் பொருந்தக்கூடியதாகவே இருக்கும்.
ஆரம்பகால உறுப்பினர்கள் பலர் இப்போது வருகைதருவதில்லை. அவர்களுடைய வேலைப்பழு, நேரமின்மை என பல காரணங்கள் இருக்கலாம். ஆனாலும் ஒருமாதத்தில் ஒருமுறையாவது அவர்கள் இங்கு வந்து தங்கள் கருத்துக்களை இணைக்கலாமே.
சந்திரவதனா அக்கா, நளாயினி அக்கா, சாந்தி அக்கா, மூனா அண்ணா, பரணி அண்ணா, கண்ணன் அண்ணா, அம்பலத்தார் அண்ணா, கெளரி மகேஸ் அக்கா, மதிவதனன் ஐயா, கணினிப்பித்தன், சுரதா அண்ணா, இன்னும் இன்னும் பல உறுப்பினர்கள்...
யாழ் களத்தில் ஆரம்பகாலத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெரியவர்களே. அப்போது யாழில் இருந்த ஒரே ஒரு "சின்னப் பெடி" நான் தான் என்று நினைக்கிறேன்.
இப்போது யாழ்களத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இளையவர்களே.
சரி வேறு என்ன. பகிர்ந்துகொள்வதற்கு இன்னும் நிறைய அனுபவங்கள் இருக்கின்றன. பிறகு பார்ப்போம்.