Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழில் சிங்கள இராணுவம் வெறியாட்டம்! 8 மாணவிகள் உட்பட 15 மாணவ
#1
யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரிக்குள் உள்நுழைந்த சிறிலங்கா இராணுவத்தின் வெறியாட்டத்தில் 8 மாணவிகள் உட்பட 15 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.


அன்னை பூபதி நினைவு நாள் நிகழ்வை இன்று வெள்ளிக்கிழமை காலை மாணவர்கள் நடத்திக் கொண்டிருந்தனர்.

பலாலி வீதியில் அமைந்துள்ள காலை 10.30 மணிக்கு இக்கல்லூரிக்குள் பவள் கவச வாகனத்துடன் உள்நுழைந்த இராணுவத்தினர் கல்லூரி மைதானத்தில் நிகழ்வில் பங்கேற்றிருந்த மாணவர் ஒன்றியத் தலைவர் சுகந்தன் மற்றும் 8 மாணவிகள் உள்ளிட்ட 15 மாணவர்களை அடித்துத் தாக்கினர்.

அன்னை பூபதியின் உருவப் படத்தை நாசம் செய்தனர். மைதானத்தில் ஏற்றப்பட்டிருந்த தமிழீழத் தேசியக் கொடியை இராணுவத்தினர் அகற்றினர்.

கல்லூரியின் சன்னல்கள் மற்றும் மாணவர்களின் மோட்டார் சைக்கிள்களை இராணுவத்தினர் அடித்து நொறுக்கினர்.

மாணவர்களின் செல்லிடப்பேசிகள் மற்றும் கையடக்க புகைப்படக் கருவிகளையும் இராணுவத்தினர் பறித்தனர்.

சிறிலங்கா இராணுவத்தின் இந்த வெறியாட்டத்துக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் மாணவர்களுக்கும் இராணுவத்துக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

சம்பவ இடத்தை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு பார்வையிட்டது.

<b>தகவல்: புதினம் புள்ளி கோம் www.puthinam.com</b>
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply


Messages In This Thread
யாழில் சிங்கள இராணுவம் வெறியாட்டம்! 8 மாணவிகள் உட்பட 15 மாணவ - by iruvizhi - 03-24-2006, 02:12 PM
[No subject] - by Sujeenthan - 03-24-2006, 04:59 PM
[No subject] - by Vaanampaadi - 03-25-2006, 11:16 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)