03-24-2006, 07:53 AM
யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந் தராக நியமிக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் இரட்ணஜீவன் ஹுல் தாம் தமிழ்த் தேசியத் துக்காக உழைப்பவன் என்பதை முதலில் நிரூபித்துக் காட்டிவிட்டு அதன் பின்னரே தமது பதவிக்கு வருவது பொருத்தமாக இருக்கும்.
தமிழ்த்தேசிய விழிப்புணர்வுக் கழகம் விடுத்த ஓர் அறிக்கையில் மேற்கண்ட வேண்டு கோள் விடுக்கப்பட்டிருக்கிறது.
"தமிழ் விரோதப் போக்குடையவர்' என்ற கருத்தை அடுத்து வரும் ஆண்டுகளில் மாற்றி அமைத்த பின்னரே பேராசிரியர் ஹுல் தமிழ்த் தேசியத்துக்காக உழைக்கும் ஓர் உயர் கல்வி நிறுவனத்தின் அதிகாரியாக வருவது பொருத் தமாக இருக்கும் என்றும் விழிப்புணர்வுக் கழகம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
யாழ்.பல்கலைக்கழகம் என்பது கடந்த பல வருடங்களாக தமிழ்த்தேசியத்திற்கா கவும் தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் அயராது உழைத்துவருகின்ற ஓர் உயர் கல்வி நிறுவனமாகும். இந்த உணர்வுகளைத் தடுப் பதற்கு சிறிலங்கா அரசும் அரசின் ஆக்கிர மிப்புப் படையினரும் கடும் பிரயத்தனம் மேற் கொண்டுவருகின்றன. ஆனாலும் பல்கலைக் கழக சமூகத்தின் விடுதலை உணர்வைத் தடுத்துவிட முடியவில்லை. தங்களால் இய லாத ஒரு விடயத்தை இன்று இரட்ணஜீவன் ஹுல் என்கின்றவரை துணைவேந்தராக நியமிப்பதன் ஊடாக சாதித்துவிட முயல் கின்றனர். எனவே, அரசினதும் அரச படை களினதும் ஆதரவோடு பேராசிரியர் அவர் கள் யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்த ராகக் கடமையாற்றுவது ஒருபோதும் சாத்திய மற்ற ஒரு விடயமே.
நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை யில் பெருமளவு ஆக்கிரமிப்புப் படையினர் பேராசிரியர் ஜீவன் ஹுலுக்கு ஆதரவாகத் துண்டுப் பிரசுரங்களையும் சுவரொட்டிகளை யும் பல்கலைக்கழகச் சூழலில் ஒட்டிக்கொண்டு திரிவதைக் காணக்கூடியதாக உள்ளது. இதனால் கொதிப்படைந்த மாணவர்கள் அவற்றைக் கிழித்தெறிந்தபோது படையினருக்கும் மாண வருக்குமிடையே முறுகல் நிலைகூடத் தோன்றியது. இந்நிலையில் பேராசிரியர் ஜீவன் ஹுல் அவர்கள் துணைவேந்தராக வரு வது மாணவர்களின் நலனிற்காகவா? அல்லது ஆக்கிரமிப்புப் படைகளின் நலனிற்காகவா? என்ற கேள்வி குடாநாட்டு மக்கள் மனங்களில் எழுந்துள்ளது.
மாணவர்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தென்பகுதியில் உள்ள செல்வாக்கை மட்டும் வைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் வருவதற்கு கடும் பிரயத்தனத்தை பேராசிரி யர் மேற்கொள்வது இவர்மீது இன்னமும் சந்தேகங்களையே ஏற்படுத்துகின்றது. என வேதான், இவரிடம் பகிரங்கமாகப் பின் வரும் வேண்டுகோளைக் குடாநாட்டு மக் கள் சமூகம் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.
உங்கள் மீது மாணவர்கள், மக்கள் கொண் டுள்ள "தமிழ் விரோதப் போக்குடையவர்' என்கின்ற விடயத்தை அடுத்துவரும் ஆண்டு களில் மாற்றி அமைத்து "தமிழ்த்தேசியத்திற் காக உழைப்பவன்' என்ற பெயரை நிரூ பித்துக் காட்டிய பின்னர் தமிழ்த்தேசியத்திற் காக உழைக்கின்ற ஓர் உயர்கல்வி நிறுவனத் தின் அதிகாரியாக வருவதே பொருத்தமா கும் என்பதை கூறிவைப்பதோடு, சிங்கள பௌத்த பேரினவாதிகளோடு சேர்ந்து எமது மாணவர்களின் சுமுகமான கல்விச் செயற் பாட்டிற்கு ஊறுவிளைவிக்க வேண்டாம் எனவும் கேட் டுக்கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.uthayan.com/pages/news/today/11.htm