03-23-2006, 10:34 PM
யாழ் இணையம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது?
நல்லதொரு தலைப்பு.
ஆழ்ந்த நினைவகளை மீட்டிப்பார்க்கும் ஒரு தேடல்.
அதிலெழுகின்ற ஆனந்தத்தை அனைவருடனும் பகிர்ந்துகொள்ளும் ஓர் இன்பம்.
சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போது "யாழ் களத்தில்" என்று ஆரம்பித்து ஏதோவெல்லாம் கூறி மகிழ்ந்தார். அன்றே அவரிடம் முழுமையான முகவரியைப் பெற்று தினமும் வந்து வாசித்தேன்.
தினமும் பார்க்காதுவிட்டால் என்னவோ போலிருக்கும். அப்போது நானும் களத்தில் வந்து கருத்தெழுதவேண்டும் என்ற எண்ணம் எழவில்லை. அப்படி வாசித்துக் கொண்டிருக்கும்போதுதான் பலர் தமிழ்ச்சொற்களை எப்போதும் தவறாகவே எழுதிவந்தார்கள். இதனைப் பார்த்ததும் ஓர் இனிய பாயாசத்துள் சிறு சிறு கற்கள் கடிபடுவதைப்போல் இருந்தது. அவற்றைக் களையவேண்டும் என்கின்ற எண்ணத்தோடுதான் கடந்த வருடத்திலிருந்து களத்துள் நுழைந்து கருத்துக்களை எழுதிவருகிறேன்.
அவ்வப்போது சிலருக்கு அவர்களின் தவறுகளையும் சுட்டிக்காட்டுகிறேன். அதேவேளைகளில் நான்கூட தவறுகள் விட்டுவிடுகிறேன். அவற்றைச் சுட்டிக்காட்டுபவர்களுக்கு எனக்குள் நன்றி சொல்வேன். அப்போது சிரிப்புத்தான் வரும்.
எனக்குப் பிடித்தவைகள்: கள உறவுகளின் அறிவுபுூர்வமான கட்டுரைகள், கதைகள், கவிதைகள், முக்கியமாக பலவிதமான நகைச்சுவைகள் என்பன. ஆனால் சண்டை பிடிப்பதும், மற்றவர்கள் சண்டைபிடிப்பதைப் பார்ப்பதும் பிடிக்காது. (அண்மைக்கால அனுபவம் உட்பட).
இங்கே கருத்துக்கள் எழுதிவர்களின் அனுபவங்களைப் படிப்பதே ஒருவித ஆனந்தத்தைக் கொடுக்கின்றது.
பல வேலைப் பழுக்களின் மத்தியிலும் இந்தத்தலைப்பைப் பார்த்ததும் இன்று மீண்டும் களத்துள் நுழையவேண்டும் என்ற அவாவும் ஏற்பட்டது.
எல்லோருக்கும் என் நன்றிகள் பல.