03-23-2006, 09:02 PM
யாழ் இணையம் நான் சுவிஸ் நாட்டுக்கு விடுமுறையில் சென்றபோது என் ஒன்றுவிட்ட அண்ணா ஒருவரால் அறிமுகப் படுத்தப்பட்டது. எனினும் தமிழில் எழுத பெரிதும் முயற்சி எடுக்காத காரணத்தால் 2004 ஆரம்பம்வரை இணையவில்லை. யுனிகோட்டில் எழுதப் பழகியபின் கருத்துக்கள் பதிய ஆரம்பித்தேன். பார்க்காமலே நட்பு (காதல்) என்பதில் எல்லாம் நம்பிக்கையில்லை. எனவே எல்லோருடனும் அதிக ஒட்டுதல் இல்லை, பகையும் இல்லை. எனினும் யாழ் களம் தமிழர்களினால் மிகவும் விரும்பிப் பார்க்கப்படும் ஒரு தளமாக என்றென்றும் இருக்கும் என்றே நம்புகின்றேன்.
<b> . .</b>

