Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நான் வாழும் சுவிஸ் - அஜீவன்
#1
<span style='font-size:30pt;line-height:100%'><b>நான் வாழும் சுவிஸ்</b></span>
<span style='color:brown'>- அஜீவன்

<img src='http://photos1.blogger.com/blogger/7006/435/320/swiss.1.1.jpg' border='0' alt='user posted image'>
எதிரிகள் புகா வண்ணம் காவல் தெய்வங்கள் காவல் காத்து நிற்பது போல் நாட்டை சுற்றி நிற்கும் அழகிய அல்ப்ஸ் மலை மட்டுமல்ல மனதின் இனிமைக்காய் இசை எழுப்புவது போல சல சலத்து ஓடி பவனி வரும் ஆறுகளாலும் புடை சூழ்ந்து நின்று ரம்மிய காட்சியாய் எம் மனங்களை கொள்ளை கொள்ளும் குளங்களும் இயற்கை வனமும் நாடு தழுவிய சுத்தமும் நிறைந்து யுத்த மேகமே மூளாமல் சிலிர்த்து காட்சி தரும் நாடு என்று உலகில் ஒன்று உண்டு என்றால் அது சுவிஸ் நாடாகத்தான் இருக்கும்.

நாட்டுப் பற்றுக் கொண்ட இனிய மக்கள் எளிமை போல் நாட்டின் முதுகெலும்பாய் காட்சி தரும் கிராமங்கள். நேரம் தவறாமல் பவனிக்க உதவியாய் இருக்கும் போக்கு வரத்து துறை இப்படி இந் நாட்டின் புகழ் பாடிக் கொண்டே போகலாம்........

இனி நாம் இந் நாட்டைப் பற்றி சிறிது தெரிந்து கொள்ள முயல்வோம்.

<b>மக்கள் தொகை:</b>
மூன்றாம் உலக நாடுகள் போல் அல்லாமல் சுவிஸின் முக்கிய பிரச்சனையாக ஆரம்பத்தில் இருந்து வந்திருப்பது குறைந்த வீதத்திலான குழந்தை பிறப்பேயாகும்.

19ம் நூற்றாண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட யந்திரமயமாக்கல் கால கட்டங்களில் மக்கள் தொகை அதிகரிப்பை முதன் முதலில் இங்கு பார்க்கக் கூடியதாக இருந்திருக்கிறது.

அதற்கு பின்னர் 1950லிருந்து 1970களுக்கான காலப் பகுதியில் மக்கள் தொகை பெருக்கத்தை காண முடிந்தது.

அதன் பின்னர் முதன் முறையாக 1970களில் மக்கள் தொகை 1/3 க அதிகரித்திருந்தது.

1970 களில் மக்கள் தொகை பெருக்கத்தின் வேகம் 1.5 அளவு அதிகரிக்கத் தொடங்கி 1980 முதல் 1990 காலப்பகுதிகளில் அது 8 விழுக்காடாக உயர்ந்து காணப்பட்டது.

இக் கால கட்ட குடிசன மதிப்பீட்டின் படி 1990 களில்தான் என்றுமேயில்லாத அளவு மக்கள் தொகை அதிகரிப்பை காணக் கூடியதாக இருந்தது.

1980-1990 களில் ஏற்பட்ட வெளிநாட்டவரது அளவு மீறிய வருகையே இந்த மாற்றத்துக்கான காரணமாகயிருந்து.

இதற்கு முன் காலங்களில் பிறப்பின் விழுக்காட்டை விட இறப்பின் விழுக்காடு அதிகரித்து காணப்பட்டது.

1990 களில் ஏற்பட்ட மாற்றமானது இறப்பின் விகிதாசாரத்தை பின் தள்ளிக் கொண்டு போக வழி வகுத்தது.

<b>சுவிஸின் முக்கிய மொழிகள்: </b>

அடிப்படையில் 4 மொழிகள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளன.

1. ஜேர்மன்
2. பிரென்ஞ்
3. இத்தாலி
4. ரேட்டோ ரொமானிஸ்

இருப்பினும் இம் மொழிகள் ஒரே விதமான வளர்ச்சிக் கோட்டை நோக்கி வளர்ந்ததாக காண முடியவில்லை.
இருப்பினும் சுவிஸ் நாட்டில் பெரும்பாலானோரால் பேசப்படும் மொழி ஜேர்மன் மொழியேயாகும்.

<b>மனம் கவரும் கண் கொள்ளா இயற்கை:</b>
<img src='http://switzerland.isyours.com/images/big/glacier-arnensee.jpg' border='0' alt='user posted image'>
சுவிஸ் நாடு பற்றி ஒரு வார்த்தையில் சொன்னால் மாறுபட்ட இயற்கை குணாம்சம் கொண்ட நாடு எனலாம். வருடம் முழுவதும் பனி பாறைகளால் நிறைந்து நிற்கும் மலைகள்.வற்றாமல் ஒரே மாதிரி சல சலத்து ஓடும் நீரலைகள் கொண்ட ஆறுகள். நகரங்கள் கிராமங்கள் தோறும் பார்வைக்கு மென் தன்மை தரும் குளங்கள். பசுமையோடு காட்சி தரும் வனம். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

<b>விஞ்ஞான ரீதியாக:</b>

1. Alps & Pre-Alps (60%)

2. Central Plateaul (30%)

3. Jura (30%)

இருப்பினும் சுவிற்சர்லாந்தின் வலப்புறத்தே இத்தாலிய நீர் ஓடையும் வடக்கே ரெயின் ஆற்றைக் கடந்து கண்ணுக்கு எட்டும் தூரத்தே தெரியும் பிளாக் பொரஸ்ட் காடும் வனாந்தரமும் எல்லைக் கோடுகளாய் காணப்படுகின்றன.

வேறுபட்ட பூகோள வினோதங்களை கொண்ட இந் நாட்டின் மலைகள் ஓடைகள் ஆறுகள் குளங்கள் கிளசியஸ் நிறைந்தே நிற்பது கண் கொள்ளா காட்சிதான்..........

தொடரும்.............. </span>
Reply


Messages In This Thread
நான் வாழும் சுவிஸ் - அஜீவன் - by AJeevan - 03-23-2006, 08:08 PM
[No subject] - by Rasikai - 03-23-2006, 10:33 PM
[No subject] - by வினித் - 03-24-2006, 09:40 AM
[No subject] - by Birundan - 03-24-2006, 10:33 AM
[No subject] - by AJeevan - 03-24-2006, 01:09 PM
[No subject] - by Birundan - 03-24-2006, 01:19 PM
[No subject] - by Niththila - 03-24-2006, 01:31 PM
[No subject] - by Birundan - 03-24-2006, 01:34 PM
[No subject] - by AJeevan - 03-24-2006, 01:41 PM
[No subject] - by தூயவன் - 03-25-2006, 06:51 AM
[No subject] - by tamilini - 03-25-2006, 10:23 AM
[No subject] - by Niththila - 03-25-2006, 11:06 AM
[No subject] - by AJeevan - 03-25-2006, 12:30 PM
[No subject] - by தூயவன் - 03-25-2006, 02:49 PM
[No subject] - by தூயவன் - 03-25-2006, 02:53 PM
[No subject] - by தூயவன் - 03-25-2006, 02:56 PM
[No subject] - by tamilini - 03-25-2006, 07:01 PM
[No subject] - by Netfriend - 03-25-2006, 08:49 PM
[No subject] - by AJeevan - 03-25-2006, 09:48 PM
[No subject] - by Birundan - 03-26-2006, 02:39 AM
[No subject] - by Selvamuthu - 03-26-2006, 03:14 AM
[No subject] - by AJeevan - 03-26-2006, 11:31 AM
[No subject] - by AJeevan - 03-26-2006, 11:32 AM
[No subject] - by AJeevan - 03-26-2006, 07:30 PM
[No subject] - by Aravinthan - 03-27-2006, 03:00 AM
[No subject] - by sinnappu - 03-27-2006, 08:11 AM
[No subject] - by Aravinthan - 03-28-2006, 01:22 AM
[No subject] - by வர்ணன் - 03-28-2006, 01:42 AM
[No subject] - by AJeevan - 03-29-2006, 05:17 PM
[No subject] - by AJeevan - 03-29-2006, 05:25 PM
[No subject] - by Aravinthan - 03-29-2006, 11:22 PM
[No subject] - by Netfriend - 04-01-2006, 09:34 PM
[No subject] - by AJeevan - 04-02-2006, 10:28 AM
[No subject] - by AJeevan - 04-04-2006, 07:51 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)