03-23-2006, 07:22 PM
யாழ் எப்படி அறிமுகமானது? நல்ல கேள்வி இளைஞன். யாழ், ஈழத்தில் இருக்கும் போதே அறிமுகமானது. அப்போது ஈழத்தில் வேலை செய்த இடத்தில் தனித்தனி நபர்களுக்கு இணைய இணைப்புக்கள் இருக்கவில்லை, (இப்போதும் இல்லை என்று தான் நினைக்கிறேன்). நிறுவனத்துக்கு பொதுவான இணைய சேவை வழங்கி நிலையம் ஒன்று இருந்தது. அங்கு மின்னஞ்சல் பாவிக்க, எமது பணி சம்பந்தமான தேவைகளுக்காக போவது வழக்கம், ஈழத்து இணைய வேகம் அங்கு இருந்த சிலருக்கு தெரிந்திருக்கும். சில நேரங்களில் ஒரு இணைய பக்கம் திறந்து அது முழுமை பெற நிமிடக்கணக்குகள் செல்லும். அதனால் பல இணைய சாளரங்களை திறந்து வைப்பதும் ஒன்று மாறி ஒன்றை பார்ப்பதும் வழக்கம். அப்படி இணைய பக்கங்களை திறக்கும் போது யாரொ பார்த்து இணைய விலாசம் பகுதியில் இருந்த யாழ்கள முகவரிக்கு ஏதேச்சையாக போக நேர்ந்தது. அப்போது உள்ள நேரத்தில் மேலோட்டமாக பார்த்ததுண்டு. மற்றும் படி அனைத்து பகுதிகளையும் பார்க்க நேரம் இருப்பதில்லை.
பின்னர் புலம் பெயர்ந்த பின், தனியான இணைய இணைப்பு, கணனி என வந்த பின் வீட்டில் இருக்கும் பொழுதுகளில் யாழுக்கும், ஏனைய தமிழ் தளங்களுக்கும் போவதுண்டு. அவ்வறு செல்ல முக்கிய காரணமாக இருந்தது எம் தாய் மொழியில் உரையாட யாருமே இருந்ததில்லை, இணைய வாசிப்பு தான் அக்குறையை போக்கும் ஒரே ஊடகம். உறுப்பினராக இணையும் எண்ணம் ஏற்பட்டதில்லை. அப்போது களத்தில் எழுதப்பட்டிருந்த சில ஆக்கங்கள், குறிப்பாக சங்கிலி மன்னனின் வாரிசு நெதர்லாந்தில் இருப்பதாக இணைக்கபட்ட செய்தி, மற்றும் பலருடைய நகைச்சுவையான எழுத்துக்கள் என பலதும் என்னை கவர உறுப்பினராக இணைந்து கொண்டேன்.
யாழ்களம், பல நல்லுறவுகளையும், பலரது அறிமுகத்தையும் ஏற்படுத்தி தந்தது. அத்துடன், அப்பொது புலம் பெயர்ந்த உடனடியான காலம், வீட்டில் இருக்கும் போது ஏற்படு தனிமை உணர்வை போக்குவதாக பலரது ஆக்கங்கள், எழுத்துக்கள் நகைச்சுவையாகவும்,சிரிப்பை வரவழைப்பதாகவும் இருந்தது.
யாழ்களதின் நெடும் பயணதில் நாமும் சில காலம்.... சேர்ந்து பயணித்தோம், பயணித்துகொண்டிருக்கிறோம், அது எது வரை தொடரும்....... ?? ஆனால் யாழை மேலும் வளப்படுத்த புதிது புதிதாக பலர் வருவார்கள்.......
யாழ் வேற்றி நடை போடும்......

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>