03-23-2006, 04:35 PM
நல்லதொரு கேள்வி..........நான் யாழினை கணணிப்பித்தன் என்ற யாழின் பழைய உறுப்பினர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்டு உடனேயே அங்கத்தவராக பதிந்து சில கருத்துக்களையும் ஆரம்பத்தில் பதித்திருந்தேன். இப்போது கருத்துக்கள் எழுதுவது குறைவாக இருந்தாலும் தொடர்ச்சியாக, பெரும்பாலும் ஒவ்வொருநாளும் வாசித்து வருகின்றேன். ஏராளமான செய்திகள், தகவல்கள், பலரின் பார்வைக்கோணங்களை அறிவதற்கு உகந்த ஒரு இடமாக தொடர்ந்து இருந்து வருகின்றது. அத்துடன் மட்டுணர்த்தர்களின் பொறுப்பான செயற்பாடுகளினால் களம் சிறப்பாக செயற்படுகின்றது என்பது என் எண்ணம்.

