03-23-2006, 01:14 PM
ம்ம் நானும் உப்பிடித்தான் தமிழ்கனடியனூடாக தமிழ அவுஸ்ரேலியனின் இணைப்பெடுத்து அதனூடாக தமிழ்நாதத்தின் இணைப்பெடுத்து ஒருவாறு யாழை வந்தடைந்தேன். நான் என்னை பதிவு செய்து முதலாவது கருத்து எழுதியது நினைவில் வருகின்றது. "நானும் உள்ளே வரலாம" என உள்னுழைததது எழுதியதை பார்த்து ஒரு உறுப்பினர் கேட்டார் அதுதான் வந்திட்டீரல்லே பிறகென்ன கேள்வி என. என்னை வரவேற்றவர்களில் சிலரை குறிப்பிடுகின்றேன். குருவிகள், தமிழினி அக்கா,சோழியன் அண்ண, இலைஞ்ஞன்,கவிதன், டண், வசம்பு, வசி, சின்னப்பு நிதர்சன், சியாம் மற்றும் தமிழ்நிலா ஆகியோரே. நான் முதல் முறையாக குரிவிகளின் அழகிய ஆழமான கருக்கொண்ட கவி ஒன்றினை யாழில் படித்து அதன் மீதான எனது கருத்தினையும் முன்வைத்தேன். இவ்வாறு ஒரு நல்ல தளத்தினை வந்தடைந்ததனையிட்டு பெருமகிழ்வும் மனநிறைவும் எனக்குள்.

