Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருனாநிதியின் துரோகம்.
#24
புதன், பிப்ரவரி 22, 2006
நீர்த்துப்போன கொள்கைகள் - வாஸந்தி


கருணாநிதியைப் பேட்டி காணும் தருணம் இது என்று நான் தயாரானேன். ஆச்சரியமாக கருணாநிதி உடனடியாகப் பேச சம்மதித்தார். அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு காலை ஒன்பது மணிக்குச் சென்றபோது, நான்கைந்து கட்சிக்காரர்கள் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தார்கள். குறுகலான மாடிப்படிகளைக் கடந்து கலைஞரைச் சந்திக்கச் செல்லும்போது, யாரோ, ‘‘முதுகிலெ குத்தினமாதிரி’’ என்று சொல்வது கேட்டது.

கருணாநிதி அமைதியாகக் காணப்பட்டார். ஆனால் பேசும்போது, கவலையோ, பீதியோ, ஏதோ ஒன்று அவரது கண்களில் நிழலாடியதாகத் தோன்றிற்று. பத்திரிகை உலகத்தில் அவரது கவலைகளைப் பற்றிப் பலவிதமான அலசல்கள் இருந்தன. ‘வை.கோ.வின் அதிகரித்துவரும் செல்வாக்கு அவரை அச்சுறுத்துகிறது; தமக்குப் பின் தனது மகன் ஸ்டாலினைப் பொறுப்பேற்கத் தயாரித்து வருபவருக்கு, வை.கோ. ஒரு நீக்கப்படவேண்டிய முட்டுக்கட்டையாகிப் போனார்’ என்று பரவலாகக் கருதப்பட்டது.

கருணாநிதியுடன் நடந்த அந்த நீண்ட பேட்டியின்போது ஒன்று தெளிவாயிற்று. ‘<b>வை.கோ.வின் செல்வாக்கு, ஸ்டாலினின் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தல்’ என்ற உண்மையான கவலை அவருக்கு இருக்கக்கூடும். ஆனால் வைகோ.வை வெளியேற்ற வேண்டுமென்றே, புலனாய்வுத்துறையின் செய்தி முகாந்திரமாக உபயோகிக்கப்பட்டதாகத் தோன்றவில்லை. அவர் உண்மையிலேயே பீதியில் துவண்டிருந்தார்; ஊழ்வினையை நேரில் சந்தித்த அதிர்ச்சியில் இருப்பவர்போல. </b>



‘‘ஆமாம், வை.கோ.வை என் உறைவாள்னு சொல்லியிருக்கேன். ஆனால் என் நல்லெண்ணத்தை அவர் பயன்படுத்திக்கொண்டு, இரண்டு வருஷமா தலைமைப் பதவியைப் பிடிக்கிற முயற்சியில் இருக்கார். 1989இலே, தி.மு.க. ஆட்சியிலே இருக்கிறப்ப, கட்சிக் கட்டுப்பாட்டுக்குப் புறம்பா, எங்கிட்ட சொல்லாம கொள்ளாம, பிரபாகரனைச் சந்திக்க சிலோனுக்குப் போனார். இது விஷயமா அவரை நான் கடுமையா கண்டிச்சேன். அப்பவே கட்சியிலேந்து அவரை நீக்கியிருக்கணும். அது பண்ணாதது தப்புதான். ஆனா, மன்னிச்சுக்குங்க! மன்னிச்சுக்குங்கன்னு திரும்பத் திரும்பச் சொன்னார். அதுக்குப் பிறகும் அநேகத் தப்புகளுக்கு மன்னிக்கச் சொல்லிக் கேட்பார். உண்மையைச் சொல்றேன், <b>ராஜீவ்காந்தி படுகொலைக்குப் பிறகு கட்சிலே ரொம்பத் தெளிவான முடிவெடுத்தோம். இலங்கைத் தமிழர்களுக்கு ஈழம் கிடைச்சா சந்தோஷப்படுவோம்; ஆனா, தமிழ் ஈழத்துக்கு ஆதரவா கோஷம் போடமாட்டோம்னு</b>.

ஆனா, இந்த ஆள் தொடர்ந்து கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தறார். வெளிப்படையாக தமிழ் ஈழத்துக்கு ஆதரவா, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவா பேசறார். கடந்த ஓராண்டு காலமா என் தலைமைக்குப் பதிலா வை.கோ.வுடைய தலைமை வந்தா நல்லதுன்னு கனடாவுலே, பாரிஸ்ஸிலெ, யாழ்பாணத்திலெ, எல்.டி.டி.ஈ.யுடைய பிரச்சாரம் பத்திரிகை மூலமாவும் வலைத்தளங்கள்ளேயும் நடப்பது எனக்குத் தெரிஞ்சிருக்கல்லே; சிஙிமிலேந்து தகவல் வர்ற வரைக்கும்.’’

அவரது பேச்சை எனது ஒலி நாடா பதிவு செய்கையில், அவரது உதவியாளர் சண்முகநாதன், விறுவிறுவென்று தனது கையேட்டில் குறித்துக்கொண்டிருந்தார். பலவித பத்திரிகை கட்டிங்குகள், குறிப்புகள் தயாராக மேஜையில் வைக்கப்பட்டிருந்தன. ‘‘தகவல் கிடைச்சதும் வை.கோ.வை நேரிடையாக விளக்கம் கேட்டிருக்கலாமே’’ என்றேன். '‘‘பத்திரிகையாளர் கூட்டம் ஏன்?’’

‘‘CBI தகவல் ‘கோபால்சாமிக்கு வழிவகுக்கும் [tஷீ யீணீநீவீறீவீtணீtமீ] கொலைத் திட்டம்னு சொன்னதே தவிர, அதுக்குப் பின்னாடி கோபால்சாமி இருந்ததாச் சொல்லல்லே. அவரை எதுக்குக் கேட்கணும்? CBI தகவலை லேசா எடுக்கக் கூடாதுன்னு மக்கள்கிட்ட போக வேண்டியதாகிவிட்டது.’’ ‘‘எனக்கு முதல்லே நம்பமுடியல்லே’’ என்று கருணாநிதி தொடர்ந்தார். ‘‘ஆனா கோபால்சாமி நடந்துக்கிற விதத்தைப் பார்த்தா இப்ப சந்தேகம் வலுப்படுகிறது. ‘‘CBI அனுப்பிச்ச கடிதம் தனக்கு அதிர்ச்சி ஏற்படுத்திச்சு’’ன்னு சொல்றார். ‘‘ஆனா என்னைக் கூப்பிட்டு ஏன் பேசல்லே?’’ <b>நான் அவரோடு பேசத்தான் விரும்பினேன். ஆனா அகப்படல்லே. சென்னையிலே இருந்துகிட்டே இல்லேன்னு போக்குக் காட்டறார். பத்திரிகைக்கு அறிக்கை விடறார், அவரை கட்சியிலேந்து நீக்க இது ஒரு சூழ்ச்சின்னு. நாற்பது நாள் காத்திருந்து பிறகுதான் கட்சியிலேந்து நீக்கினோம்</b>.’’

அவருடைய பார்வை மேஜையில் இருந்த புலிகளின் பத்திரிகை கட்டிங்குகள் மேல் பதிந்தது. ‘‘இதையெல்லாம் பார்க்கும்போது CBI கடிதத்துலே உண்மை இருக்கணும்னு சந்தேகம் வருது, வெளியிலே அவருக்கு ஆதரவு இருக்கலாம்னு; திட்டம் ஏதோ இருக்கணும்னு தோன்றுகிறது."

‘‘புலிகளுடன் தனக்கு இப்போது தொடர்பு இல்லை’’ என்று வை.கோ. சொன்னதைச் சொல்கிறேன்.

‘‘அவர் உண்மை பேசறாரா என்பதைப் பத்தி நான் எதுவும் சொல்ல விரும்பல்லே’’ என்றார் கருணாநிதி.

‘‘உங்கள் விமர்சகர்கள் சொல்கிறார்கள், திமுகவில் இப்போது ஜனநாயகம் இல்லை, வாரிசு அரசியல்தான் நடக்கிறது என்று...’’

கருணாநிதியின் முகத்தில் சட்டென்று எரிச்சல் படர்ந்தது. "நான் எப்பவும் சொல்றேன். தி.மு.க., சங்கர மடமோ, மன்னர் ஆட்சியோ நடத்தவில்லை, வாரிசு அரசியல் செய்ய. பிரதமர் நரசிம்மராவின் மகன் மாநிலத்தில் அமைச்சர். ரங்கராஜன் குமாரமங்கலத்துடைய அப்பாவும் தாத்தாவும் மந்திரிகளா இருந்தார்கள். அதைப் பத்தி யாரும் பேசறதில்லே. என்னைப் பத்தி மட்டும்தான் தப்பு சொல்கிறார்கள். ஏன்னா நான் சூத்திரன்."

"உங்க கட்சியிலேயே அப்படி ஒரு கருத்து இருக்கு" என்று நான் இடைமறித்தேன்.

"அது விஷமத்தனமான பேச்சு" என்றார் அவர். "வாரிசு அரசியல் செய்யணும்னா 1989 இலே தி.மு.க. ஆட்சியிலே இருந்தபோதே செஞ்சிருக்கலாமே.?" அதற்குமேல் அதைப் பற்றிப் பேச ஏதும் இல் <b>முதல் முதலில் பிரபாகரனையும் அவரது சகாக்களையும் சந்தித்தது, தமிழர்கள் இலங்கையில் படும் சிரமங்களை அவர்கள் விவரிக்கக் கேட்டு பதைத்தது, பிரபாகரனின் இளமையும் கள்ளமில்லா முகமும் தன்னை வெகுவாக ஈர்த்தது, கடைசியில் அவர்களது செயல்கள் தன்னை அதிரவைத்தது, எல்லாவற்றையும் கதைபோல் அவர் சொல்லி வருகையில் நான் ஒரு பத்திரிகையாளர் என்பதை அவர் மறந்து போனதுபோல் இருந்தது. அவர்களைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் முதுகில் குத்தப்பட்டதாக உணர்வதுபோல் சொன்னார். "நம்பமுடியல்லெம்மா. நீங்க உட்கார்ந்திருக்கிற இந்த சோஃபாவுக்கு நேர் எதிரத்தான் அவங்க உட்கார்ந்திருந்தாங்க, ஏதுமறியாப் பிள்ளெங்க போல. அவங்களுக்கும் வன்முறைக்கும் சம்பந்தப்படுத்த முடியாத தோற்றம். சென்னையிலேயே பத்மனாபாவையும் அவருடைய சகாக்களையும் கொலை செஞ்சபோது அதிர்ச்சியா இருந்தது. ராஜீவ் காந்தியுடைய படுகொலைக்குப் பிறகு இனிமே எந்தத் தொடர்பும் இருக்கமுடியாதுங்கற முடிவுக்கு வந்தேன்</b>."

லை என்பதுபோல் அதை ஒதுக்கிவிட்டு, மீண்டும் புலிகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.
கருணாநிதி மீண்டும் தலை அசைத்தார். '‘‘நம்பமுடியல்லே!" கண்களில் நிழலாடிய பீதி, முகத்தில், தசைகளில், திரையாய் போர்த்திற்று. அடுத்த இலக்கு தாமாக இருக்கலாமோ என்கிற பீதி. ‘‘முதுகிலெ குத்தினது போல’’ என்று கீழே யாரோ சொன்னதற்குப் புதிய பரிமாணம் சேர்ந்தது போலத் தோன்றிற்று.


நன்றி - தீராநதி


இதுவே என் கருதல்ல- சிலவற்றில் உடன்பாடுமல்ல
!




-
Reply


Messages In This Thread
[No subject] - by Luckyluke - 03-21-2006, 07:14 AM
[No subject] - by putthan - 03-21-2006, 08:47 AM
[No subject] - by Luckyluke - 03-21-2006, 08:54 AM
[No subject] - by SUNDHAL - 03-21-2006, 09:27 AM
[No subject] - by Luckyluke - 03-21-2006, 11:05 AM
[No subject] - by aathipan - 03-21-2006, 11:28 AM
[No subject] - by Luckyluke - 03-21-2006, 12:37 PM
[No subject] - by Sujeenthan - 03-21-2006, 06:41 PM
[No subject] - by karu - 03-21-2006, 07:34 PM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-21-2006, 08:41 PM
[No subject] - by karu - 03-21-2006, 09:22 PM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-21-2006, 10:07 PM
[No subject] - by karu - 03-21-2006, 10:28 PM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-21-2006, 10:44 PM
[No subject] - by கந்தப்பு - 03-22-2006, 01:59 AM
[No subject] - by தூயவன் - 03-22-2006, 04:19 AM
[No subject] - by Luckyluke - 03-22-2006, 06:30 AM
[No subject] - by தூயவன் - 03-23-2006, 04:38 AM
[No subject] - by Luckyluke - 03-23-2006, 06:47 AM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-23-2006, 07:38 AM
[No subject] - by rajathiraja - 03-23-2006, 07:47 AM
[No subject] - by Luckyluke - 03-23-2006, 08:00 AM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-23-2006, 08:04 AM
[No subject] - by rajathiraja - 03-23-2006, 08:06 AM
[No subject] - by Luckyluke - 03-23-2006, 08:09 AM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-23-2006, 08:12 AM
[No subject] - by rajathiraja - 03-23-2006, 08:14 AM
[No subject] - by Luckyluke - 03-23-2006, 08:19 AM
[No subject] - by rajathiraja - 03-23-2006, 11:58 AM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-23-2006, 12:13 PM
[No subject] - by Luckyluke - 03-23-2006, 12:13 PM
[No subject] - by putthan - 03-24-2006, 01:57 PM
[No subject] - by Luckyluke - 03-24-2006, 02:00 PM
[No subject] - by putthan - 03-24-2006, 02:24 PM
[No subject] - by KULAKADDAN - 03-26-2006, 07:20 PM
[No subject] - by sinnakuddy - 03-31-2006, 12:03 AM
[No subject] - by Vasampu - 03-31-2006, 12:53 AM
[No subject] - by Luckyluke - 03-31-2006, 07:30 AM
[No subject] - by matharasi - 03-31-2006, 11:01 AM
[No subject] - by I.V.Sasi - 03-31-2006, 11:16 AM
[No subject] - by Luckyluke - 03-31-2006, 11:45 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)