03-23-2006, 07:34 AM
<b>சமூகத்தைப் புரிந்துகொண்ட ஒருவரே துணைவேந்தராக நியமிக்கப்படவேண்டும் கலைப்பீட மாணவர் ஒன்றியம் அறிக்கை</b>
எமது சமூகத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு பல்கலைக்கழகத்தைச் சரி யாக வழிநடத்தக்கூடிய பொருத்தமான துணைவேந்தர் ஒருவர் உடனடியாக நியமிக்க வேண்டும் என்று கலைப்பீட மாணவர் ஒன்றியம் கேட்டுள்ளது.
இது தொடர்பாக கலைப்பீட ஒன்றியம் வெளியிட்டிருக்கின்ற அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
எமது சமூகத்தினைச் சரியாகப் புரிந்துகொண்டு எமது பல்கலைக்கழகத்தினை சரியான வகையில் வழிநடத்தக் கூடிய ஒரு துணைவேந்தரை உடனடியாக நிய மிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போது எமது பல்கலைக்கழகத் திற்கு துணைவேந்தராக கடமையாற் றிய பேராசிரியர் சு.மோகனதாஸ் அவர் களுடைய பதவிக் காலம் முடிவடைந் துள்ள நிலையில் அவர் மீண்டும் ஒரு வாரம் பதில் துணைவேந்தராகக் கடமை யாற்றி அப்பதவிக்காலமும் நிறை வடைந்துள்ளது.
தற்போது துணைவேந்தர் இல்லாத நிலையில் எமது பல்கலைக்கழகம் இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது. ஏற்கனவே ஸ்ரீலங்கா ஜனாதிபதி யினால் துணைவேந்தராக நியமிக்கப் பட்ட பேராசிரியர் இரட்ணஜீவன் ஹூல் அவர்களை எமது மக்களும் மாணவர் களும் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதை நன்றாகத் தெரிந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எமது பல்கலைக்கழகத்திலே குழப்பமான சூழ்நிலையினை ஏற்படுத்தி எமது மாணவர்களது கல்வி நடவ டிக்கைகளைக் குழப்ப வேண்டும் என்ற கபட நோக்கத்திற்காகவே இப்பிரச்சினைக்கு உரிய தீர்வினை வழங்காது இழுத்தடித் துச் செல்கின்றார்.
எனவே, ஜனாதிபதியின் இந்த குள்ளத்தனமான நிலைப்பாட்டினை நாம் நன்றாகத் தெரிந்து வைத்துக் கொண்டுதான் கேட்கின்றோம். எமக்குப் பொருத்தமான ஒரு துணைவேந் தரை உடனடியாக நியமித்து எமது கல்விச் செயற்பாட்டினை நாம் குழப்பமில் லாது மேற்கொள்வதற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உதயன்