03-23-2006, 07:33 AM
<b>யாழ். மாணவர்கள் கடும் எதிர்ப்பு: ரட்ணஜீவன் கூலின் வரவேற்பு நிகழ்வு இரத்து! </b>
யாழ்ப்பாண பல்கலைக் கழகத் துணை வேந்தராக நியமிக்கப்பட்ட ரட்ணஜீவன் கூலுக்கு நேற்று புதன்கிழமை அளிக்கப்படவிருந்த வரவேற்பு நிகழ்வு இரத்து செய்யப்பட்டது.
தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவரான ரட்ணஜீவன் கூலின் நியமனத்தை யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகமும் மக்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மார்ச் 15 ஆம் நாள் பொறுப்பேற்க வேண்டிய ரட்ணஜீவன் கூல் பொறுப்பேற்கவில்லை. அவருக்குப் பதிலாக தாற்காலிக துணைவேந்தராக பேராசிரியர் சி.மோகனதாஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.
அவரும் புதிய துணைவேந்தரையோ அல்லது வேறு ஒரு தாற்காலிக துணை வேந்தரையோ நியமிக்க கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் ரட்ணஜீவன் கூலுக்கு வரவேற்பளிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிகழ்வு கடைசி நிமிடத்தில் இரத்துச் செய்யப்பட்டுவிட்டது.
தனக்கான எதிர்ப்புக்கள் தொடர்பில் ரட்ணஜீவன் கூல் கூறியுள்ளதாவது:
நான் ஒரு துரோகி என்றும் இராணுவத்தினருடனும் எதிரிகளுடனும் இணைந்து செயற்படுவதாகவும் கூறுகின்றனர்.
ஆனால் தமிழ் மக்களுக்கு எதிராக நான் செய்த குற்றம் என்ன என்று கூறவில்லை. தமிழ் மக்களுக்கு எதிராக நான் ஒருபோதும் செயற்பட்டதில்லை.
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பை நான் ஏற்றால் கொலை செய்யப்படுவேன் என்று பல அனாமதேய தொலைபேசி அழைப்புகள் வருகின்றன.
நான் அங்கு போனால் அவர்கள் என்னைத் தாக்குவார்கள் என்று எச்சரித்துள்ளனர்.
வட மாகாண அபிவிருத்திக்காக நான் பங்களிப்புச் செய்ய விரும்புகிறேன். யாழ்ப்பாணத்தில் பொறியியல் துறை மேம்பாட்டுக்கான பரிந்துரைகளையும் திட்டங்களையும் வைத்திருக்கிறேன். ஆகையால் மாணவர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளும் எனது விளக்கத்தை கேட்க முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார் ரட்ணஜீவன் கூல்.
இதனிடையே இந்த விடயம் தொடர்பாக கத்தோலிக்க ஆயர்கள் குழுவினர் விடுதலைப் புலிகள் தரப்பைச் சந்திக்க முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதினம்