03-22-2006, 06:19 AM
தூயவன் Wrote:ஒன்று மட்டும் உண்மை! எம் தேசத்து விடுதலையைப் பெற நாம் தான் முயலவேண்டுமே தவிர, மற்றவர்களை மட்டும் நம்புவது தப்பு!
யதார்த்தத்தை உணர்ந்து சொல்லப்பட்ட அருமையான கருத்து.....
ஈழ விடுதலையை விரும்பினாலும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஏதும் செய்ய இயலாது.... அனுதாபம் தான் பட முடியுமே தவிர ஆயுதங்களை ஏந்த முடியாது.... ஆனாலும் ஈழமக்கள் இன்னல் படும் போதெல்லாம் தமிழ்நாட்டு தமிழனுக்கு இதயம் அறுந்து போகும்.... அவனால் முடிந்ததெல்லால் இங்கிருக்கும் இலங்கைத் தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்த முடியும் அவ்வளவுதான்... கசப்பாக இருந்தாலும் உண்மை இது தான்....
கலைஞர் கைது செய்யப்பட்டபோது உலகெங்கிலும் இருந்த ஈழத்தமிழர்களும் துடிதுடித்துப் போனார்கள்.... ஆனால் கண்டன அறிக்கைத் தந்ததை தவிர அவர்களால் வேறு என்ன செய்ய முடிந்தது? அதுபோல் தான் இதுவும்.....
,
......
......

