02-08-2004, 06:23 PM
<b>காமத்தை வெல்வது எங்ஙனம்?</b>
விஷப் பாம்புகள் நடமாடும் வீட்டில் வசிப்பவர்கள் எப்போதும் வெகு ஜாக்கிரதையாக இருப்பதைப் போல, உலகத்தில் வாழும் மக்கள் காமத்துக்கும், பண ஆசைக்கும் உட்படாமல் எப்போதும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.
நீர்ப்பானையின் அடியில் வெகு சிறிய துவாரமொன்று இருந்தாலும் அதன் வழியாக நீரணைத்தும் ஒழுகிவிடும். அதுபோல் சாதகன் ஒருவனது மனத்தில் உலகப் பற்று வெகு அற்பமாகவிருந்தாலும் கூட அவனது முயற்சிகளெல்லாம் வீணாகிவிடும்.
பெண்ணாசை, பொன்னாசைகளில் அழுந்திய மனம் பச்சைப் பாக்குக்குச் சமமானது. அது பச்சையாக இருக்கும் வரையில் மேல் தோலோடு ஒட்டிக் கொண்டிருக்கும். உள் ஈரம் வற்றியதும் தோல் வேறு, பாக்கு வேறாகப் பிரிந்து விடுகிறது. ஆட்டிப் பார்த்தால் உள்ளே பாக்கு குலுங்கும். அதுபோல, பெண்ணாசையும் பொன்னாசையும் உள்ளே வற்றிப்போனால் ஆத்மா வேறு, உடல் வேறு என்பது தெளிவாகும்.
வேடன் காலடியில் குரங்கு தன் பிராணனை விடுவது போல, அழகிய ஸ்திரீயின் (பெண்) காலடியில் மனிதனும் தன் பிராணனை விடுகிறான்.
குடும்பத்தார்களே, ஜாக்கிரதையாக இருங்கள். பெண்களிடம் அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம். அவர்கள் வெகு தந்திரமாய் உங்களை வசப்படுத்தி விடுவார்கள்.
புகை சூழ்ந்த அறையில் எவ்வளவு ஜாக்கிரதையுடன் நீ இருந்தாலும் உனது சரீரத்தில் கொஞ்சமாவது கரியேறத்தான் செய்யும். அதுபோல், ஒருவன் எவ்வளவு சாமர்த்தியமாயும், ஜாக்கிரதையாயும் இருந்தாலும் பெண் நெருக்கத்தினால் அவனுக்குக் காம இச்சை கொஞ்சமாவது உண்டாவது நிச்சயம்.
நித்தியானந்தர் ஸ்ரீ சைதன்ய சுவாமியை நோக்கி, "சுவாமி, பகவத்ப்ரேமை விஷயமாக நான் உபதேசித்தவையெல்லாம் ஏன் மனிதரது மனத்தில் யாதொரு பலனையும் கொடுக்கவில்லை?" எனறு கேட்டார். அதற்கு ஸ்ரீ சைதன்யர், "அவர்கள் பெண்களோடு சேர்ந்திருப்பதால், உயர்ந்த உபதேசங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளச் சக்தியற்றிருக்கின்றனர். நித்தியானந்தரே! உலகப் பற்றுள்ளவர்களுக்கு மோட்சமே கிடையாது" என்று பதில் சொன்னார்.
பெண்ணாசையும், பொன்னாசையும் உலக முழுவதையும் பாவத்தில் அமிழ்த்தி விட்டன. பெண்களை லோகமாதாவின் தோற்றங்களென்று கருதுவாயானால் உனக்கு அவர்களால் துன்பமுண்டாகாது.
ஒரு சிஷ்யன் பரமஹம்ஸரிடம் வந்து காமத்தை எப்படி ஜெயிப்பது என்று கேட்டான். தான ஜபதபங்கள் செய்து வந்த போதிலும் தன் மனத்தில் அடிக்கடி கெட்ட நினைவுகள் உண்டாவதாகத் தெரிவித்தான். அதற்குப் பகவான், பதில் சொன்னதாவது : - "ஒரு மனிதன் ஒரு நாயை வெகு பிரியமாக வளர்த்து வந்தான். அவன் அதனோடு கொஞ்சுவான், விளையாடுவான், அதைக் கைகளில் தூக்கிக் கொண்டு போவான், அதை முத்தமிடுவான். இந்த முட்டாள்தனத்தை கவனித்த ஓர் அறிஞர், நாய்க்கு அப்படி இடங்கொடுக்கக் கூடாதென்றும், அது பகுத்தறிவற்ற பிராணியாதலால் என்றைக்காவது ஒரு நாள் அவனைக் கடித்துவிடுமென்றும் கூறிவிட்டுச் சென்றனர். நாயின் எஜமானன் இதைக் கேட்டு அதன்படி நடக்க எண்ணித் தன் மடிமீதிருந்த அந்நாயைத் தூர எறிந்துவிட்டு, அதனோடு இனிமேல் ஒருபோதும் கொஞ்சிக் குலாவுவதில்லை என்று தீர்மானம் பண்ணினான். தன் எஜமானனுடைய மனமாற்றத்தை நாய் அறியவில்லையாதலால் அது அடிக்கடி அவனிடம் ஓடி வந்து குலாவத் தலைப்பட்டது. நன்றாய்ப் பல தடவை அடிபட்ட பிறகுதான் அது தன் எஜமானனைத் தொந்தரவு செய்வதை விட்டது. உனது நிலைமையும் அப்படிப்பட்டதே. உன் மனத்தில் இதுவரையில் வைத்துப் போற்றி வந்த நாயை நீ விலக்க நினைத்தாலும் அது உன்னை எளிதில் விடாது. இருந்தாலும் பாதகமில்லை. அந்த நாயோடு இனிமேல் கொஞ்சிக் குலாவாது, உன்னிடம் அது குலாவ வரும்போதெல்லாம் அதை நன்றாய் அடி. காலக்கிராமத்தில் அதனுடைய தொந்தரவுகள் உனக்கு முற்றிலும் இல்லாமலே அகன்றொழியும்.
சொன்னவர்...
<img src='http://www.webulagam.com/religion/images/2003/ramakrishna1.jpg' border='0' alt='user posted image'>
பிற்குறிப்பு...
பெண்ணாசையை மனிதர்கள் விட்டொழிக்க வேண்டுமென்று பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் உபதேசிப்பதிலிருந்து, பெண்களெல்லாம் கொடியவர்களென்றாவது, அவர்களின்மேல் வெறுப்புக் கொள்ள வேண்டுமென்றாவது சொல்வதாகக் கொள்ளுதல் கூடாது. அவர் தமது வாழ்க்கையிலும், உபதேச மொழிகளிலும் பெண் மக்களை சக்தி-ஜகன்மாதாவின் அவதார ரூபங்களாகவே கருதியுள்ளார். ஆண், பெண் இருபாலரும் சிற்றின்ப விஷயங்களில் அகப்பட்டு பகவானை மறக்கக் கூடாதென்பதை வற்புறுத்தவே, ஆத்மலாபமடைய விரும்புபவன் பெண்ணாசையையொழித்தல் வேண்டுமெனக் கூறினார். ஆண் மக்களைப் போன்று பெண் மக்களுக்கும், இவ்வுபதேசம் இன்றியமையாததெனக் கொள்ளல் வேண்டும்.
---------------------
மூலம்...வெப்புலகம்.கொம்

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>