03-21-2006, 09:22 PM
சகோதரா! யார் யாரை இழிவுபடுத்தினார்கள்? நீங்களதான் ஈழத்தமிழாகளைக் கோமாளிகள் என்றீர்கள். அதற்குத்தான் நான் பதில் கூறினேன். ஈழத்தமிழர் கலாச்சாரத்திற்கும் தமிழ்நாட்டுக் கலாச்சாரத்திற்கும் பெரிய வேறபாடுகளில்லை. ஆனால் தமிழ் pநாட்டுத் தமிங்கிலத்தைத்தான் சகிக்க முடியவில்லை என்று கூறிவைத்தேன். ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டின் கட்சியரசியலுக்கு வெளியே நின்று எல்லோருடனும் அனுசரித்துப் போகவேண்டியவர்கள். எங்களை ஆதரிப்பவர் வைகோ அவர் இன்று எங்கிருந்தாலும் இருக்கட்டும். திருமாவளவனும் போய்விட்டார்தானே. பாமக திமுகவிலிருந்தாலும் கூடிய தொகுதிகளைப்பெற்று வெற்றிபெறவேண்டும். மற்றும்படி கருணாநிதியோ ஜெயலலிதாவோ என்னவானாலும் எங்களுக்கென்ன? தயவு செய்து இதைப் புரிந்துகொள்ளுங்கள். நாங்கள் தமிழினம் என்று பார்க்கிறோம். அன்று சேர சோழ பாண்டியர்கள் அடித்துக்கொண்டு அழிந்ததுபோல இன்று கட்சியரசியலில் நீங்கள் என்னவாவது செய்துகொள்ளுங்கள் ஆனால் ஈழப்போராட்டத்தையோ, கோரிக்கையையோ இழிவுபடுத்த முனையாதீர்கள். சுய அரசியல் இலாபத்திற்காக எங்களைப் பகடைக்காய்களாக்க முனைவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள், விழித்தெழுந்தவர்கள். நீங்கள் உங்கள் கட்சி அரசியலை எங்கள் ஈழப்போராட்டத்துடன் ஒப்பிடாதிருந்தால் வீண் வாதங்கள் ஒருபோதும் ஏற்படாது. நாம் உறவினர்கள் ஆனால் எங்கள் பிரச்சனை வேறு மறந்துவிடதீர்கள்
S. K. RAJAH

