03-21-2006, 03:38 PM
ஈழத்தமிழர்களை ஜெயா எதிர்க்கிறார் என்று ஒரேயடியாக்கக் கூறுவதை ஏற்கமுடியாது. இந்திய அரசியலில் உள்ள சங்கடமான, அவர்களின் பாதுகாப்பு, பிராந்திய நலன் போன்ற அம்சங்கள்தான் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும் அல்லது வரமுயலும் கட்சிகளின் தமிழர் தொடர்பான கொள்கைகளைத் தீர்மானிக்கின்றன. கருணாநிதி அல்லது வைகோ என யார் வந்தாலும் இது மாறப்போவதில்லை. பாமக ஈழத்தமிழர்களை ஆதரிக்கட்டும் யார் வேண்டாமென்றது. அவர்களுக்கு திமுக போதிய தொகுதி ஒதுக்கீடு செய்;துள்ளது. எமக்குத் தேவை எம்மை ஆதரிக்கும் மானிலக் கட்சிகளின் பலம் அதிகரிக்கவேண்டுமென்பதே. ஈழத்தமிழர்கள் இந்தி அரசியலினுடபுகுந்து பக்கச்சார்பு நிலையெடுபதைக் கூடியவரை தவிர்ப்பதுதான் சிறந்ததாகும்.
S. K. RAJAH

