03-21-2006, 01:38 PM
அதிர்ச்சி அடைய வைக்கும் செய்தி !அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை- எதிரிகளும் இல்லை என்று சொல்வதை கேட்டிருக்கிறோம்- சந்தர்ப்பவாத அரசியல், அரசியல் வியாபாரம் எல்லாமே நாம் அறிந்த ஒன்றுதான் - ஆனால் வைகோ, அ.தி.மு.கவிடம் சேர்ந்துள்ள கூட்டு இவை எல்லாவற்றையும் தாண்டியது- அரசியல் விபச்சாரம் என்று சொல்வது கூடச் சரியாகாது- இதைவிட அதிகக் காரமான வார்த்தை ஒன்று தமிழில் இருக்கிறதா?
அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பும்போதே, எப்போது விமானத்தை விட்டு இறங்குவார், என்று காத்திருந்து- பாய்ந்து கைது செய்த அ.தி. மு.க - அப்போது கழுத்து நரம்புகள் புடைக்க ·பாசிச ஜெயலலிதா ஆட்சியை அகற்றுவோம் என்று குமுறிய வைகோ.- ஓரிடத்திலிருந்து மற்றொரு சிறை என்று மாற்றி மாற்றி வை.கோவை அலைக்கழித்த ஜெயலலிதா - 'இவர் தான்தான் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டப் பிறந்தவர் என்று நினைக்கிறார்' என்று பொருமிய வைகோ; பொடா சட்டத்தில் தள்ளியதோடு பத்தொன்பது மாதங்கள் வெளியே வரமுடியாதபடி சுப்ரீம் கோர்ட் வரை வைகோ விடுதலையாவதை எதிர்த்த ஜெயலலிதா - மூன்று கல்லூரி மாணவிகள் தர்மபுரியில் பஸ்சில் எரித்துக் கொல்லப்பட்டதற்குத் தூண்டுதலாக இருந்த கொலைகாரி ஜெயலலிதா என்று தூற்றிய வைகோ- இன்று தாழ் பணிந்து மறத் தமிழனின் தன்மானம் மறந்து ஜெயலலிதாவிடம் மண்டியிட்டு, 35 இடங்களைப் பிச்சையாகப் பெற்றிருக்கிறார். இறந்தும் புகழோடுவாழ்பவர்கள் பெரியோர்கள், இரந்து வாழ்பவர்கள் இருந்தும் இல்லாதவர்கள்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசும் ம.தி. மு.க தடை செய்யப்படவேண்டும் என்று முழங்கிய ஜெயலலிதா எந்த முகத்தோடு இந்தக் கூட்டணியை வைத்துக்கொண்டார்? எங்களுக்கு மக்கள் கூட்டணியிருக்கிறது என்று தெம்பாய்ச் சொல்லியவர் தேர்தல் வரும் நேரத்தில் ஏன் ஜுரம் கண்டு, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று ஒவ்வொரு கட்சியாக அவர்கள் பக்கம் இழுக்கவேண்டும்?
படித்தவர்கள் மனதிலும் பாமரர்கள் மத்தியிலும் இந்தக்கேள்வி கட்டாயம் எழும். வைகோ தனது மனச்சாட்சிக்காவது ஒருநாள் பதில் சொல்லவேண்டியிருக்கும்-
கவுரமான இடத்தை எதிர்பார்த்து அம்மாவின் பக்கம் சாய்ந்துள்ளவர் கொஞ்சம் யோசித்து வாஜ்பாய் அரசுக்கு ஏற்பட்ட கதியையும், போன தடவை அசெம்பிளி எலெக்ஷனில் அவரிடம் கூட்டு வைத்துக்கொண்ட காங்கிரஸ், பா.ம.க, கம்யூனிஸ்டுகள் பெற்ற கவுரவத்தையும் நினைவுபடுத்திக் கொண்டிருந்தால் இந்த முடிவை எடுத்திருக்கமாட்டார்.
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பார்கள் - ஆனால் இந்த வை(க்) கோ(ல்) புலி பசி வந்ததும் தன்மானம் உட்பட பத்தையும் மறந்துவிட்டு இன்று அறிவுக்கெட்டாத ஒரு 'கூத்தணி'யை வைத்திருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு இவர் ஒரு கவுரவமான பணியாளராகவாவது கருதப்படுவாரா என்பதை காலம்தான் சொல்லும்.

,
......
......