03-21-2006, 12:00 PM
<b>புதிய பதில்துணைவேந்தரை நியமிக்குமாறு பேராசிரியர் மேகனதாஸ் கோரிக்கை </b>
நேற்றுடன் தமது துணைவேந்தர் பதவிக்காலத்தினை நிறைவு செய்துள்ள பேராசிரியர் சு. மோகனதாஸ், தமது பணிகளை பொறுப்பேற்பதற்கு வசதியாக புதிய பதில் துணைவேந்தர் ஒருவரை நியமனம் செய்யுமாறு கல்வி உயர்கல்வி அமைச்சுக்கு கடிதத்தின் மூலம் வேண் டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ரட்ணஜீவன் கூலினை பல்கலை க்;கழக ஆணைக்குழு நியமித்திருந்தது. எனினும் அவரது நியமனத்திற்கு யாழ். பல்கலைக் கழக சமூகத்திலிருந்து கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதன்காரணமாக ரட்ணஜீவன் கூல் பதவி ஏற்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பதில் துணைவேந்தராக தொடர்ந்து பதவி ஏற்குமாறு பேராசிரியர் மோகனதாஸை பல்கலை க்கழக மானியங்கள் ஆணைக்குழு கேட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து அவரும் பதில் துணைவேந்தராக நேற்றுவரை பதவியேற்று வந்திருந்தார்.
இந்த நிலையில் தாம் ஓய்வு பெறவேண்டியுள்ளதால் தமது பதவியினை பொறுப்பேற்பதற்கு வசதியாக வேறு ஒருவரை பதில் துணைவேந்தராக நியமிக்கும் படி அவர் கல்வி, உயர்கல் வி அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.
கல்வி அமைச்சரிடமிருந்து நேற்று திங்கட்கிழமை மாலை வரை இந்தக்கடிதம் குறித்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
நன்றி: சங்கதி

[size=14] ' '